உஜ்வல் பாரத்

  • மத்திய அரசின் மின்சக்தி, நிலக்கரி, புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி ஆகிவற்றுக்கான அமைச்சகங்கள் ஒன்று சேர்ந்து செயல்படுத்தும் திட்டமே உஜ்வல் பாரத் ஆகும். 
  • ஒவ்வொரு இந்தியனுக்கும் வாழ்வில் மின்னொளி ஏற்றுவதே இத்திட்டத்தின் நோக்கம். 2019 ஆம் ஆண்டின் நிறைவுக்குள், இந்தியாவின் எல்லாப்பகுதிகளிலும் 24x7 என்று எந்நேரமும் மின்சாரம் கிடைக்கும்.
அமைச்சகங்களின் பங்கு
  • 2019 ஆம் ஆண்டின் நிறைவுக்குள் அனைவருக்கும் எந்நேரமும் மின்வசதி என்ற இலக்கினை எட்டுவதற்கான திட்டமிடல், கொள்கை வரைவு, மின்திட்டங்களுக்கான முதலீட்டைத் தீர்மானித்தல், மின்திட்டங்களை அமைக்கும் வேலைகளைக் கண்காணித்தல், மின்திட்டப் பணிகளுக்குத் தேவையான மனித வள மேம்பாட்டிற்குப் பயிற்சி அளித்தல், அனல், புனல், மின்னுற்பத்தித் திட்டங்கள் மற்றும் மின் விநியோகத் திட்டங்களுக்கு வேண்டிய சட்டங்களை இயற்றுதல் முதலான பணிகளை மின்சக்தி அமைச்சகம், மேற்கொள்ளும்.
  • மின்திட்டங்களுக்கு வேண்டிய நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி இருப்புகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளுதல், அவற்றை வெட்டி எடுப்பதற்கான கொள்கைகள் மற்றும் உத்திகளைத் தீர்மானித்தல் போன்ற பணிகளை நிலக்கரி அமைச்சகம் மேற்கொள்ளும். மேலும் முக்கியமான நிலக்கரி / பழுப்பு நிலக்கரி சுரங்கத் திட்டங்களுக்கு அனுமதி அளித்தல் மற்றும் அது தொடர்பான பிற பணிகளையும் இந்த அமைச்சகம் கவனிக்கும்.இலக்குகள்
  • நாட்டின் வருடாந்திர உற்பத்தியை 2020 ஆம் ஆண்டுக்குள், 100 கோடி டன்னாக உயர்த்துவது.
  • புதுப்பிக்கவல்ல மின்சக்தியின் அளவை 2022 ஆம் ஆண்டுக்குள் ஐந்து மடங்கு அதிகரித்து 1,75,000 மெகாவாட் ஆக உயர்த்துவது.
  • 2020 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் மொத்த மின் உற்பத்தியை 50 சதவீதம் அதிகரிப்பது.
  • தற்போதுள்ள மின்நுகர்வின் அளவில் மின்சார சேமிப்பின் பங்கினை மேலும் பத்து சதவீதம் அதிகரிப்பது.

0 Comments