Type Here to Get Search Results !

மண் வள மேலாண்மைக்கான தேசிய திட்டம்

குறிக்கோள்கள்
  • ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை நுட்பங்களான, இயற்கை உரங்கள், உயிர் உரங்கள் மற்றும் சரியான அளவு வேதியியல் உரங்களையும், துணை மற்றும் நுண்ணூட்டச்சத்துகளை உபயோகிப்பதன் மூலம், மண்ணின் வளத்தையும் உற்பத்தி திறனையும் அதிகரிக்க ஊக்குவித்தல்.
  • மண்ணை பரிசோதிக்கும் வசதிகளை அதிகரித்து, விவசாயிகளுக்கு மண் பரிசோதனை அடிப்படையில், மண்வளத்தினை அதிகரிக்க ஆலோசனை வழங்கி, அவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கச்செய்தல்.
  • பசுந்தாள் உரங்களின் மூலம் மண்ணின் வளத்தினை அதிகரித்தல்.
  • அமில மற்றும் காரத்தன்மையுடைய மண்ணினை மாற்றியமைக்க தேவையான நுட்பங்களை பின்பற்றச் செய்வதன் மூலம், அந்நிலத்தின் வளத்தையும் உற்பத்தித்திறனையும் அதிகரித்தல்.
  • நுண்ணூட்டச்சத்துகளின் உபயோகத்தினை ஊக்குவித்து அதன் மூலம் உரங்களின் செயல்பாட்டுத்திறனை அதிகரித்தல்.
  • விரிவாக்கத்துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோரின் திறனை மேம்படுத்த பயிற்சி மற்றும் விவசாயிகளின் நிலங்களில், சீரான உர பயன்பாட்டின் முக்கியத்துவம் உள்ளிட்ட களப்பயிற்சி அளித்தல்
  • விரிவாக்கத்துறை அலுவலர்களுக்கு உரங்களின் தரக்கட்டுப்பாட்டினை ஆய்வு செய்ய களப்பயிற்சி அளித்து, உரக்கட்டுப்பாட்டு ஆணையினை அமல்படுத்துதல்.
  • மண் பரிசோதனைக்கூடங்கள் மற்றும் உரங்களை ஆய்வு செய்யும் பரிசோதனைக்கூடங்களை அமைக்கவும், மேம்படுத்தவும் நிதியுதவி வழங்குதல்.
இத்திட்டத்தின் அங்கங்களாவன
1. மண்பரிசோதனைக்கூடங்களை மேம்படுத்துதல்
  • 11ம் ஐந்தாண்டுத்திட்டத்தின் கீழ் நுண்ணூட்டச்சத்துகளை ஆய்வு செய்ய 500 மண் பரிசோதனைக்கூடங்களையும், 250 நடமாடும் மண் பரிசோதனைக்கூடங்களையும் அமைத்தல்.
  • மாநில அளவில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் 315 மண் பரிசோதனைக்கூடங்களை நுண்ணூட்டச்சத்து பரிசோதனைக்காக மேம்படுத்துதல்.
  • மண் பரிசோதனைக்கூட அலுவலர்களையும், விரிவாக்க அலுவலர்களையும், விவசாயிகளையும் செய்முறை விளக்கம் மற்றும் பயிற்சி பட்டறைகளின் மூலம் அவர்களின் அறிவை மேம்படுத்துதல்.
  • முறையான உர உபயோகத்திற்கான தகவல் வங்கியினை குறிப்பிட்ட பகுதிகளில் ஆரம்பித்தல்.
  • முதன்மை கள செயல்முறை விளக்கங்களின் மூலம் மண் பரிசோதனைக்கூடங்கள், கிராமங்களை (10 கிராமங்கள் ஒரு மண் பரிசோதனைக்கூடத்திற்கு என்ற விகிதத்தில்) தத்தெடுத்துக்கொள்ளுதல்.
  • மாவட்ட அளவிலான மிண்ணனு மண் வரைபடத்தினை தயாரித்தல் மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சிக்கழகத்தின் மூலம் அல்லது மாநில வேளாண் பல்கழைக்ககழகங்களின் மூலம் மண் வளத்தினை கண்காணித்தல்
2. ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மையினை ஊக்குவித்தல்
  • இயற்கை உர உபயோகிப்பினை ஊக்குவித்தல்.
  • அமிலத்தன்மையுடைய மண் இருக்கும் பகுதிகளில் மண்திருத்த பொருட்கள் பயன்பாட்டினை ஊக்குவித்தல்.
  • நுண்ணூட்டச்சத்துகளின் பயன்பாட்டினை ஊக்குவித்து அவற்றினை விநியோகம் செய்தல்.



3. உரத்தரக்கட்டுப்பாடு ஆய்வகங்களை மேம்படுத்துதல்
  • மாநில அளவில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் 63 உரத்தரக்கட்டுப்பாடு ஆய்வகங்களை மேம்படுத்துதல்.
  • மாநில அரசுகளின் மூலம் 20 புதிய உரத்தரக்கட்டுப்பாடு ஆய்வகங்களை உருவாக்குதல்.
  • தனியார் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களின் மூலம் 50 உரத்தரக்கட்டுப்பாடு ஆய்வகங்களை ஆலோசனை வழங்குவதற்காக உருவாக்குதல்.
இத்திட்டத்திற்கான நிதியுதவி
  • இத்திட்டம் 11வது ஐந்தாண்டுத்திட்டத்தில் ரூ,429.85 கோடி செலவில் அமல்படுத்தப்பட அனுமதிக்கப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel