Type Here to Get Search Results !

பிரதமர் வேளாண் நீர் பாசனத் திட்டம்

நோக்கங்கள்
  • அனைத்து வேளாண் நிலங்களுக்கும் ஏதாவது ஒரு வகையில் நீர்பாசனம் கிடைக்கும் வகையில் செயல்பாடுகளை உறுதி செய்வது.
  • வேளாண் பயிர்கள் மூலம் கிடைக்கும் வருவாயைப் பெருக்குதல், விவசாய உற்பத்தியையும், உற்பத்தித் திறனையும் மேம்படுத்துதல்.
  • ஒரு துளி நீரில் நிறை தானியம்.
இத்திட்டத்தில் உள்ள பகுதிகள்
  • நீர் ஆதாரங்கள் உள்ள இடங்களைப் பழுதுபார்த்தல் உருவாக்குதல், புதுப்பித்தல் போன்றவை (நீர் ஆதார அமைச்சகம்)
  • உற்பத்தி செய்யப்பட்ட இடத்தில் இருந்து விற்பனை நிலையம் வரை உள்ள பகுதிகளை வலுவாக்குதல் மற்றும் மேம்படுத்துதல் (நிலம் பயன்பாட்டுத் துறை)
  • நீர் ஆதாரங்களைத் திறமையுடன் செயல்படுத்த தேவையான கருவிகள் (விவசாயம் மற்றும் கூட்டுறவுத் துறை)
செயல்படுத்தப்படும் உத்திகள்
  • 75:25 என்ற அளவில் மாநிலங்களுக்கு நிதி அளிக்கப்படும். வடகிழக்கு மற்றும் மலைப்பாங்கான மாநிலங்களுக்கு 90:10 என்ற விகிதத்தில் நிதி அளிக்கப்படும்.
  • வேளாண் தொழில்நுட்ப கட்டமைப்பு நிதி மூலம் தேசிய சந்தையை உருவாக்குதல்
முக்கிய அம்சங்கள்
  • 2016-17 ஆம் ஆண்டில் செயல் படுத்தப்படும் விதத்தில் தேசிய வேளாண் சந்தையை ஏற்படுத்த ரூ.200 கோடி மூலதனத்தில் வேளாண் தொழில்நுட்ப கட்டமைப்பு நிதியை உருவாக்குதல்.
  • இத்திட்டத்தின்படி தேசிய அளவில் மின்னனு சந்தையை உருவாக்கவும் நாட்டில் உள்ள 642 ஒழுங்குமுறை சந்தைகளில் இதைப் பயன்படுத்த தேவையான கட்டமைப்பு வசதியையும் ஏற்படுத்துதல்.
  • தேசிய சந்தையை உருவாக்க, பொதுவாக இயங்கும் மின்னனு சாதனம் தேவை என்பதால், சேவைகளை அளிக்கும் அமைப்பு ஒன்றிடம் இதைச் செயல்படுத்த அனுமதிக்கப்படும். இந்த அமைப்பு மின்னனு மூலம் சந்தையை நிர்வகிக்கும். இதை அரசும், தனியார் துறையும் இணைந்து உருவாக்கும்.
  • ஒழுங்கு முறை சந்தைக்கான சட்டத்தில் இருந்து பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றிற்கு விலக்கு அளிக்க மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுரை வழங்கி உள்ளது. இதுவரை 12 மாநிலங்கள் மத்திய அரசின் அறிவுரைக்கு ஏற்ப காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றிற்கு ஒழுங்குமுறை சந்தையில் இருந்து விலக்கு அளித்துள்ளன.
ஒருங்கிணைந்த நீர்த்தேக்க நிர்வாகத் திட்டம்
  • இத்திட்டத்திற்காக 39.07 மில்லியன் எக்டேர் நிலத்திற்கு ரூ.11032.20 கோடி மத்திய அரசின் பங்காக மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டு உள்ளது.



ஒருங்கிணைந்த நீர்தேக்க நிர்வாகத் திட்டத்தின் சாதனை நிகழ்வு
  • சட்டீஸ்கர் மாநிலத்தில் தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்ட 16 கிராமங்களுக்கு இரண்டு செயல் திட்டங்கள் ஒருங்கிணைந்த நீர்த்தேக்க நிர்வாகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டன. 
  • அம்மாநிலத்தில் ராஜ்நந்த்கான் மாவட்டத்தில் மண்பூர் வட்டத்தில் இக்கிராமங்கள் உள்ளன. இங்கு அடர்ந்த காடுகள் உள்ளன. 85 சதவீத மக்கள் பழங்குடி மக்களாகவும் அவர்களில் 80 சதவீதம் பேர் சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளாகவும் உள்ளனர். மழையை நம்பி விவசாயம் செய்யும் இவர்கள் ஆண்டிற்கு ஒரு முறைதான் பயிரிடமுடிகிறது.
  • லாக் என்பது லாக் பூச்சிகளால் வெளியிடப்படும் பிசின் போன்ற திரவம், இப்பூச்சிகள் அடர்ந்த காடுகளில் சில வகை மரங்களில் உள்ளன. இவ்வகைப் பிசின் போன்ற திரவம் மருந்துப் பொருட்கள், அழகு சாதனங்கள், பெயிண்ட், வார்னிஷ், உணவுப் பண்டங்கள் ஆகியவற்றிற்காக பயன்படுத்தப்படுகிறது.
  • இங்குள்ள விவசாயிகள் ஏற்கனவே லாக் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், அவர்கள் பயன்படுத்துவது பழைய முறை. ஆனால், அவர்களுக்கு வருமானம் அதிகம் இல்லை. அவர்களுக்கு இத்திட்டத்தின் மூலம் திறமை வளர்க்கப்பட்டது. சிறந்த சந்தை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு, ஒருங்கிணைந்த முன்னேற்றத்திற்கு வழிகாணப்பட்டது. 
  • இதுவே முதல்முறையாக இருந்தது. அவர்களுக்குக் கிடைத்த வெற்றியை அடுத்து, மேலும் சில விவசாயிகள் ஆர்வமுடன் பயிற்சிக்கு வந்தனர். இதனால் ஜில்லா பஞ்சாயத்து அதிகாரிகள் பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களை உருவாக்க ஜார்கண்ட் மாநிலத்தில் ராஞ்சி என்ற இடத்தில் உள்ள இந்திய பிசின் குறித்த கழகத்தின் உதவியுடன் நடவடிக்கைகள் எடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel