Type Here to Get Search Results !

விதைகளுக்கு உதவித் தொகை



திட்டம் (அ) அதன் அங்கம்
பயிர் வகை
அரசாங்கம் அளிக்கும்
பெரிய அளவிலான விவசாய மேலாண்மைத் திட்டம் – மாநிலங்களுக்கான செயல்முறை
நெல் மற்றும் கோதுமை, கம்பு, சோளம், கேழ்வரகு, மற்றும் பார்லி
1.  சான்றிதழ் அளிக்கப்பட்ட விதை நெல் அல்லது விதை கோதுமைக்கு - ரூ.500/குவிண்டால் அல்லது அதன் விலையில் 50% ஆகிய இவ்விரண்டில் எது குறைவோ அந்த தொகை.
2.  சான்றிதழ் அளிக்கப்பட்ட பார்லி, சோளம், கம்பு விதைகளுக்கு ரூ.800/குவிண்டால் அல்லது அதன் விலையில் 50% ஆகிய இவ்விரண்டில் எது குறைவோ அந்த தொகை.
3.  சான்று அளிக்கப்பட்ட வீரியரக சோளம் மற்றும் கம்பு விதைகளுக்கு ரூ.1000/குவிண்டால்.
4.  வீரியரக நெல் விதை ஒரு குவிண்டால் தயாரிக்க 50% உற்பத்தி செலவு அல்லது ஒரு குவிண்டாலுக்கு ரூ.1000/-ம் வீதம், இவ்விரண்டில் எது குறைவோ அந்த தொகை.
5.  வீரியரக நெல் விதை ஒரு குவிண்டால் தயாரித்து விநியோகம் செய்ய 50% உற்பத்தி செலவு அல்லது ஒரு குவிண்டாலுக்கு ரூ.2000/-ம் வீதம் இதில் எது குறைவோ அந்த தொகை
எண்ணெய் வித்துகள், பயறு வகைகள், எண்ணெய் பனை மற்றும் மக்காச்சோளம் போன்றவற்றிற்கான ஒருங்கிணைந்த திட்டம்
எல்லா எண்ணெய் வித்துகள், ப வகைகள் மற்றும் மக்காச்சோளம்,

எண்ணெய் பனங்கன்றுகள்
1.  வல்லுநர் விதைகளின் விலை முழுவதும்.
2.  ஆதார மற்றும் சான்று அளிக்கபட்ட விதைகளை உற்பத்தி செய்வதற்கான அடிப்படை செலவு ரூ.1000/ ஒரு குவிண்டாலுக்கு.
3.  சான்று அளிக்கப்பட்ட விதைகளை விநியோகிப்பதற்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ.1200 அல்லது விதைகளின் விலையில் 25% இவற்றில் எது குறைவோ அந்தத்தொகை.
4.  அதிக உற்பத்தித்திறன் படைத்த விதை கொண்ட விதை மினிகிட் முழுவிலையும் (திட்டம் செயல்படுத்துதல் - NSC/SFCI).
5.  விவசாயிகளின் நிலங்கள் அனைத்துக்கும் அதிகபட்சமாக ஒரு ஹெக்டேருக்கு ரூ.7500 வீதம் அல்லது அதன் சாகுபடியாக செய்யும் விலையில் 75%
பருத்தி பயிருக்கான தொழில்நுட்பத்திட்டம்
பருத்தி விதை
1.  விதைகள் உற்பத்தி செய்வதற்கான அடிப்படை செலவில் 50% அல்லது ரூ.50/ஒரு கிலோ விதைக்கு – இவற்றில் எது குறைந்த தொகையோ அந்தத்தொகை.
2.  சான்று அளிக்கப்பட்ட விதைகளை உற்பத்தி செய்ய அதன் உற்பத்தி செலவில் 25% அல்லது ஒரு கிலோ விதைக்கு ரூ.15 வீதம்.
3.  சான்று அளிக்கப்பட்ட விதைகளை விநியோகம் செய்ய ஒரு கிலோவிற்கு ரூ.20 வீதம்.
4.  செலவில் 50% அல்லது ஒரு கிலோ விதைக்கு ரூ.40 வீதம் விதை நேர்த்தி செய்வதற்கு
சணல் மற்றும் மெஸ்டா பயிருக்கான தொழில்நுட்பத்திட்டம்
சணல் மற்றும் மெஸ்டா
1.  ஆதார விதைகளின் அடிப்படை உற்பத்தி செலவில் 50% அல்லது ஒரு கிலோ ஆதார விதை உற்பத்திக்கு ரூ.3000 வீதம்.
2.  சான்றளிக்கப்பட்ட விதைகளை உற்பத்தி செய்ய அதன் உற்பத்தி விலையில் 25% அல்லது ஒரு குவிண்டால் விதைக்கு ரூ.700 வீதம்.
3.  சான்றளிக்கப்பட்ட விதைகளை விநியோகம் செய்ய ஆகும் செலவில் 50% அல்லது ஒரு குவிண்டால் விதைக்கு ரூ.2000 வீதம்
தேசிய உணவு பாதுகாப்புத்திட்டம்

நெல்
1.  சான்றளிக்கப்பட்ட வீரிய ஒட்டு விதைகளை உற்பத்தி செய்ய ஒரு குவிண்டாலுக்கு ரூ.1000/- அல்லது அதன் உற்பத்தி செலவில் 50% இவ்விரண்டில் எது குறைவோ அந்த தொகை.
2.  சான்றளிக்கப்பட்ட வீரிய ரக நெல் விதை விநியோகம் ஒரு குவிண்டாலுக்கு ரூ.2000 அல்லது அதன் விலையில் 50% - இவற்றில் எது குறைவோ அந்தத்தொகை.
3.  சான்றளிக்கபட்ட நெல் விதைகளை விநியோகம் செய்ய ஒரு கிலோவிற்கு ரூ.5 வீதம் அல்லது அதன் செலவில் 50%.
4.  விதைகள் கொண்ட மினிகிட் முழு விலையும்.

கோதுமை
1.  சான்றளிக்கபட்ட வீரிய இரக விதைகளின் விநியோகத்திற்கு ஒரு கிலோவிற்கு ரூ.5 வீதம் அல்லது விநியோகிக்கும் செலவில் 50%.
2.  வீரிய இரக விதைகள் கொண்ட மினிகிட் அதன் முழு விலையும்.

பயறு வகைகள்
1.  ஆதார மற்றும் சான்றளிக்கப்பட்ட விதையினை உற்பத்தி செய்ய ஒரு குவிண்டாலுக்கு ரூ.1000 வீதம்.
2.  சான்றளிக்கப்பட்ட விதைகளை விநியோகம் செய்ய ஒரு குவிண்டாலுக்கு ரூ.1200 வீதம் அல்லது விநியோகத்திற்கு ஆகும் செலவில் 50% இதில் எது குறைவோ அந்தத் தொகை.
3.  வீரிய இரக விதைகள் கொண்ட மினிகிட் அதன் முழு விலையும்.
கிராம விதைத்திட்டம்
எல்லா வேளாண் பயிர்களுக்கும்
1.  விவசாயிகள் சேமித்து வைத்திருக்கும் விதைகளின் தரத்தினை மேம்படுத்த அவர்களுக்கு சான்றளிக்கப்பட்ட விதைகளை விநியோகம் செய்ய பண உதவி அளித்தல் அல்லது தரம் வாய்ந்த விதைகளை உற்பத்தி செய்ய விதைக்கான விலையில் 50%.
2.  50-150 விவசாயிகள் கொண்ட ஒரு குழுவுக்கு விதை உற்பத்தி தொழில் நுட்பங்களை குறித்த பயிற்சி அளிக்க உதவித்தொகையாக ரூ.15000 வீதம்.
3.  கிராம விதைத்திட்டம் செயல் முறையில் இருக்கும் கிராமங்களில் தரம் வாய்ந்த விதைகளை விவசாயிகள் சேமித்து வைப்பதற்கு 20 குவிண்டால் கொள்ளளவுள்ள கலன்கள் வாங்க தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு 33% உதவித்தொகை ரூ.3000க்கு மிகாமல் அளித்தல். இதர விவசாயிகளுக்கு 25% அல்லது ரூ.2000 அளித்தல். விதைகளை சேமிக்க 10 குவிண்டால் கொள்ளளவு உள்ள கலன்கள் வாங்க பழங்குடியின மற்றும் தாழ்த்தப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.1500 அல்லது 33% தொகையினை வழங்குதல். இதர விவசாயிகளுக்கு ரூ.1000 அல்லது 25% தொகையினை வழங்குதல்.
வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களான சிக்கிம், இமாச்சல பிரதேசம், ஜம்மு & காஷ்மீர், உத்தர்காண்ட், மேற்கு வங்கத்தின் வடக்குப்பகுதி போன்ற இடங்களுக்கு விதைகளை கொண்டு செல்வதற்கான உதவித்தொகை
சான்றளிக்கப்பட்ட அனைத்து விதைகள் – உருளைக்கிழங்கு தவிர
1.  இத்திட்டத்தினை செயல்படுத்தும் மாநிலங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு வெளி மாநிலங்களிலிருந்து உற்பத்தியாகும் விதைகளை அந்தந்த மாநிலத் தலைநகரங்கள் மற்றும் மாவட்டத் தலைநகரங்களுக்கு எடுத்துச்செல்ல சாலை மற்றும் இரயில் கட்டணங்களுக்கான வித்தியாசத்தொகையில் 100% வழங்குதல் ஒவ்வொரு மாநிலத்தலைநகரங்களிலிருந்து மாநிலத்தின் உட்பகுதிகள், மாவட்டத்தலைநகரங்களிலுள்ள விதை விற்பனை நிலையங்களுக்கு விதைகளை கொண்டு செல்ல ஆகும் செலவு அல்லது அதிகபட்சமாக ஒரு குவிண்டாலுக்கு ரூ.60 வீதம், எது குறைவோ அந்தத்தொகை உதவித்தொகையாக வழங்கப்படும்
வீரிய ஒட்டு நெல் விதைகளை உறபத்திசெய்வதற்கான உதவித்தொகை
நெல்லுக்கு மட்டும்
1.  வீரிய ஒட்டு விதை நெல் உற்பத்தி செய்ய ஒரு குவிண்டாலுக்கு ரூ.2000 வீதம்.
2.  வீரிய ஒட்டு விதை நெல்லை விநியோகம் செய்ய ஒரு குவிண்டாலுக்கு ரூ.2500 வீதம்.
உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்க அல்லது பலப்படுத்துவதற்கான உதவித்தொகை
எல்லா வேளாண் பயிர்களுக்கும்
மாநிலங்கள் மற்றும் மாநில விதை நிறுவனங்களுக்கு விதைகளை உற்பத்தி செய்து அவற்றை விநியோகம் செய்ய – விதைகளை சுத்தம் செய்ய, தரம் பிரிக்க, விதைகளை பைகளில் அடைக்க மற்றும் அவற்றை சேமித்து வைக்க தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல் / ஸ்திரப்படுத்துதல்
தேசிய வேளாண் மேம்பாட்டுத் திட்டம் ராஷ்டிரிய கிரிஷி விகாஸ் யோஜனா
எல்லா வேளாண் பயிர்களுக்கும்
விதைகளை சேமித்து வைக்கும் உள்கட்டமைப்பு வசதிகளுக்கான அனைத்து செயல்பாடுகளுக்கும்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel