விவசாயிகளுக்கான தேசிய கொள்கை - 2007

விவசாயிகளுக்கான தேசிய கொள்கை 2007
 • வேளாண் துறையில் மறுமலர்ச்சியை ஏற்ப்படுத்துவதும், விவசாயிகளின் பொருளாதார நிலையை முன்னேற்றுவதும் இக்கொள்கையின் நோக்கம் ஆகும்.
பின்னனி:
 • இந்திய அரசு 2004ஆம் ஆண்டில் முனைவர் எம். எஸ். சுவாமிநாதன் தலைமையில் விவசாயிகளுக்கான தேசிய குழுவை அமைத்தது. நாட்டில் பல்வேறு வேளாண்மை மண்டலங்களிலும் உற்பத்தி திறன் மற்றும் லாபத்தை அதிகரித்து, விவசாயிகளுக்கான நிலையான வருமானத்தை உருவாக்குவதே இக்குழுவின் நோக்கம். 
 • இளைஞர்களை கவர்ந்து வேளாண்மையில் ஈடுபடுத்தவும், உணவு மற்றும் உணவூட்ட பாதுகாப்பிற்கான இடைக்கால திட்டங்கள் வகுக்கவும் ஆலோசனைகளை இக்குழு வழங்கியுள்ளது
 • குழு தனது இறுதி அறிக்கையை அக்டோபர் 2006 இல் சமர்ப்பித்தது.
 • தேசிய விவசாய குழு மேற்கொண்ட மனுபரிசீலணை பரிந்துரைகள், பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் மற்றும் மாநில அரசுகளின் ஆலோசனைகள் ஆகிவற்றைக் கொண்டு இந்திய அரசு விவசாயிகளுக்கான தேசிய கொள்கை - 2007 ஐ உருவாக்கி ஒப்புதல் அளித்துள்ளது.
 • உற்பத்தி, உற்பத்தி திறன், லாபம், நீர், நிலம் சேவைகள் ஆகியவற்றை பெருக்கி, அபாய மேலாண்மை வழிகளை கண்டறிவதோடு மட்டுமல்லாமல் விவசாயிகளின் நிகர வருமானத்தை பெருக்குவதே திட்டத்தின் நோக்கமாகும்.திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
 • மனித நலன் : உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை பெருக்குவதோடு மட்டுமல்லாமல் விவசாயிகளின் பொருளாதார நலனில் அக்கரை செலுத்துவதே விவசாய கொள்கையின் முக்கிய அங்கமாகும்
 • விவசாயி–புதிய விளக்கம்: வேளாண் துறை சார்ந்துள்ள அனைத்து தர மக்களையும் இணைத்து இத்திட்ட பலன்களை அளிக்க வேண்டும்
 • சொத்து மறுமலர்ச்சி: ஏழை எளிய மக்கள், குறிப்பாக கிராமத்தினருக்கு சொத்து வாங்க வழிவகுத்தல்
 • தண்ணீர் சார்ந்த வருமானம்: அனைத்து பயிர் சாகுபடி திட்டங்களிலும் மகசூலை அதிகரிப்பையும் வருமானம் / ஒரு அலகு தண்ணீர் முறையை பின்பற்றவும். இதனால் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்.
 • வறட்சி, வெள்ளம் மற்றும் நல்ல வானிலை குறியீடுகள்: வறட்சியான, வெள்ளம் வரக்கூடிய வறண்ட பகுதிகளுக்கு குறியீடுகள் கொடுத்து பருவ மழையை பயன்படுத்த உதவ வேண்டும் . இது சலுகைகள அளிக்கவும் பயன்படுகிறது .
 • தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல்: குறிப்பிட்ட நிலம் மற்றும் நீரில் புதிய தொழில் நுட்பங்களைக் கொண்டு உற்பத்தி திறனை அதிகரிக்கலாம் . உயிர்தொழில் நுட்பவியல், தகவல் தொடர்பு நுட்பங்கள், வற்றாத ஆற்றல் மூலங்கள், விண்வெளி நுட்பங்கள், நேனோ டெக்னாலாஜி கொண்டு சுற்றுச்சூழல் மாசுபடாத பசுமைப் புரட்சி ஏற்படுத்த வேண்டும் .
 • தேசிய வேளாண்மை உயிரியற் பாதுகாப்பு அமைப்பு: ஒருங்கிணைந்த திட்டம் தீட்டி உயிரியற் பாதுகாப்பு அளிக்கவும் .
 • முதலீடுகள் மற்றும் சேவைகள்-மண் வளம்: தரமான விதைகள், நோயற்ற துாய்மையான நடவுப் பொருட்கள், ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட பயிர்பெருக்கப் பொருட்கள் மற்றும் மண் வள மேலாண்மை ஆகியவற்றைக் கொண்டு சிறிய பண்ணையின் உற்பத்தி திறனைப் பெருக்க முடியும் . ஒவ்வொரு விவசாயக் குடும்பத்திற்கும் மண்வளக் கையேட்டை கொடுக்கவும் .
 • பெண்களுக்கான உதவிகள்: வயல்களிலும் காடுகளிலும் வேலை செய்யும் பெண்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும் . குழந்தைக் காப்பகம் மற்றும் போதுமான அளவு ஊட்டச்சத்து வசதி அளிக்கவும்.
 • கடன் மற்றும் காப்பீடு: கடன் ஆலோசனை மையங்கள் அமைத்து கடன் பெற்ற விவசாயிகளுக்கு கடன் நிவாரண வழிகளை வழங்கி, கடன் தொல்லையில் இருந்து காப்பாற்றவும். கிராமங்களில் கடன் மற்றும் காப்பீடு பற்றிய விழிப்புணர்வு தேவை. இதற்கு கிராம தகவல் மையங்கள் உதவும்.
 • வயல்வெளி பள்ளிக் கூடம் அமைத்தல்: விவசாயிகளிடம் இருந்து விவசாயிகள் கற்றுக் கொள்ளவும், வேளாண் விரிவாக்க சேவைகளை பலப்படுத்தவும், முன்னோடியான விவசாயிகளின் பண்ணையில் வயல்வெளிப் பள்ளி அமைத்தல்.
 • ஞான் செளபல்: கிராமங்களில் ஞான் செளபல் (கிராம தகவல் மையங்கள்).அமைத்து, தகவல் தொடர்பு நுட்ப உதவி அளித்தல்.
 • தேசிய சமூக பாதுகாப்புத் திட்டம்: உடல் நலக்குறைவு மற்றும் வயதான காலங்களில் பாதுகாப்பு பெறுவதற்காக விவசாயிகளை காப்பீட்டு திட்டங்களில் முதலீடு செய்ய வைத்தல்.
 • குறைந்த பட்ச ஆதார விலை : வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை அளித்தல்.
 • விற்பனை குருக்கீட்டு திட்டங்கள்: குறிப்பிட்ட பயிர்களில் வேகமாக செயல்படுவதற்கான இத்திட்டம்.
 • சமூக உணவு தானிய வங்கி: பயன்படுத்தப்படாத பயிர்களை விற்பனை செய்வதற்கு உதவுகிறது.
 • ஓரே தேசிய சந்தை: உள்நாட்டு கட்டுப்பாடுகளைத் தளர்த்தி ஒரே தேசிய சந்தையை உருவாக்கவும்.
 • உணவு பாதுகாப்பு திட்டத்தை விரிவுபடுத்தல்: ஊட்டச்சத்து நிறைந்த கம்பு, சோளம், ராகி மற்றும் சிறுதானியங்கள் சேர்ப்பதற்கான திட்டம்.
 • எதிர்கால விவசாயிகள்: கூட்டுறவு பண்ணை, கூட்டுறவு சேவை, சுய உதவி குழுக்களாக கூட்டு பண்ணையம், ஓப்பந்த முறையில் பண்ணையம், விவசாயிகள் நிறுவனங்கள் போன்றவற்றை மேற்கொள்ளலாம் . இதன் மூலம் சிறு விவசாயிகளின் உற்பத்தி திறனை அதிகரித்து, பயிர் - கால்நடை இணைந்த ஒருங்கிணைந்த பண்ணையம், மற்றும் வேளாண் பொருட்கள் பதப்படுத்துதல் ஆகிய தொழில்கள் செய்து வளமான வாழ்வு வாழலாம்.
 • உணவு பாதுகாப்பு திட்டத்திற்கான குழுவை அமைக்க வேண்டும்.
திட்டத்தை செயல்படுத்தும் முறைகள்
 • விவசாயிகளுக்கான தேசிய கொள்கை - 2007 ஐ அமல்படுத்த, இடை அமைச்சக குழுவின் மூலம் செயல்முறைத் திட்டத்தை வேளாண்மை மற்றும் கூட்டுறவு துறை அமைக்கவுள்ளது . பிரதமரின் தலைமையிலான வேளாண்மை ஒருங்கிணைப்பு குழு, விவசாயிகளுக்கான தேசிய கொள்கையை பார்வையிட்டு ஒருங்கிணைத்து நடத்தவுள்ளது .
 • வேளாண் அமைச்சர் ஸ்ரீ சரத்பவார் விவசாயிகளுக்கான தேசிய கொள்கை - 2007 திட்டத்தை ராஜ்ய சபாவில் 23 நவம்பர் 2007 அன்றும் லோக் சபாவில் 26 நவம்பர் 2007 அன்றும் சமர்ப்பித்தார்.

0 Comments

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel