Type Here to Get Search Results !

பிரதமரின் தேசிய பாதுகாப்பு நிதி

நோக்கம்
  • தேசிய பாதுகாப்பு நடவடிக்கையின் மேம்பாட்டுக்காக, நிதியாகவும் பொருளாகவும் தன்னார்வ நன்கொடைகளை பெறுவதற்காகவும் அவற்றை இந்த நோக்கத்திற்காக பயன்படுத்துவதற்காகவும் தேசிய பாதுகாப்பு நிதி ஏற்படுத்தப்பட்டது.
  • ராணுவ படையினர் (துணை ராணுவ படைகள் உட்பட) மற்றும் அவர்களின் குடும்பத்தினர் நலனுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படுகிறது. ஒரு செயற்குழுவால் நிர்வகிக்கப்படும் இந்த நிதியின் தலைவராக பிரதமரும், பாதுகாப்பு, நிதி மற்றும் உள்துறை அமைச்சர்கள் இதில் உறுப்பினர்களாகவும் இருக்கிறார்கள். 
  • நிதியமைச்சர் இந்த நிதியின் காசாளராகவும், பிரதமர் அலுவலகத்தின் இணைச்செயலர் செயற்குழுவின் செயலராகவும் செயல்படுகிறார்கள். இந்த நிதியின் கணக்குகள் இந்திய ரிசர்வ் வங்கி வசம் உள்ளன. 
  • தேசிய பாதுகாப்பு நிதியானது முற்றிலும் பொதுமக்களின் பங்களிப்புடன் மட்டுமே செயல்படுகிறது. இதற்கென பட்ஜெட்டில் எந்தத் தொகையும் ஒதுக்கப்படுவதில்லை. 



தேசிய பாதுகாப்பு நிதியின் கீழ் உள்ள திட்டங்கள்
  • ராணுவப்படைகள், துணை ராணுவப்படைகளில் பணியாற்றி இறந்த வீரர்களின் மனைவியர் மற்றும் குடும்பத்தினர், தொழில்நுட்ப மற்றும் முதுநிலை கல்வி கற்பதற்காக கல்வி உதவித்தொகை அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
  • சியாச்சின் ராணுவ முகாமுக்கு பிரதமர் சென்றிருந்த போது அங்குள்ள மருத்துவமனையில், வீரர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சிடி ஸ்கேன் இயந்திரமும், அவர்களின் பொழுதுபோக்கிற்காக இரண்டு பெரிய ஹோம் தியேட்டர்களும், ரூ.6.28 கோடி செலவில் நிறுவப்படும் என்று அறிவித்தார். தேசிய பாதுகாப்பு நிதியிலிருந்து ஹோம் தியேட்டர்களுக்கான தொகை அளிக்கப்பட்டது. பாதுகாப்பு அமைச்சகம் தனது நிதியிலிருந்து சிடி ஸ்கேன் இயந்திரத்தை நிறுவியுள்ளது.
  • ஐ.என்.எஸ் விராட் கப்பலுக்கு பிரதமர் வருகை தந்த போது, அந்த விமானம் தாங்கிக் கப்பலில் மருத்துவ மற்றும் உடல்நலன் சார்ந்த வசதிகள் மேம்படுத்தப்படும் என்று அறிவித்தார். பாதுகாப்பு அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் தேசிய பாதுகாப்பு நிதியிலிருந்து ரூ.35.15 லட்சம் இதற்காக அளிக்கப்பட்டது.
  • புனா, கிர்க்கீயில் உள்ள குயின்மேரி தொழில்நுட்பப் பயிலகம், மாற்றுத் திறனாளி வீரர்களுக்கான மறுவாழ்வு பணியில் ஈடுபட்டுள்ள மொஹாலியில் உள்ள பாராப்லேஜிக் மறுவாழ்வு மையம் ஆகியவைகளின் மேம்பாட்டுக்காக பிரதமர் தேசிய பாதுகாப்பு நிதியிலிருந்து ரூ.7.53 கோடியை வழங்கியுள்ளார்.
  • இம்பாலில் குகி இன் காம்ப்ளக்ஸில் சமுதாயக் கூடம் மற்றும் அருங்காட்சியகம், நூலகம் ஆகியவற்றை அமைக்க, தேசிய பாதுகாப்பு நிதியிலிருந்து, ரூ.1.44 கோடியை பிரதமர் அளித்துள்ளார்.
  • டெஹன், செங்கே, லிகாபலி மற்றும் மிசாமரி ஆகிய இரண்டு பிரிவுகளில், சரக்குகளை (சமையல் உபகரணங்கள், உறைவிட வசதி உட்பட) கொண்டு செல்லும் வசதிகள், அருணாச்சலப் பிரதேசத்தின் இதர பகுதிகளில் தகவல் தொடர்பு (பாதுகாப்பான செயற்கைக் கோள் தொடர்பு அமைப்பை வாங்குவது) வசதிகளை மேம்படுத்த ரூ.90 லட்சம் நிதி அளிக்கப்படும் என்று பிரதமர் அருணாச்சலப் பிரதேசத்திற்கு சென்ற போது அறிவித்தார்.
  • தேசிய பாதுகாப்பு படைக்கான மத்திய நல நிதியை அதிகரிப்பதற்காகவும், நலப்பணிகளை மேற்கொள்ளவும், செலவினத்தை சமாளிக்கவும், ரூ.20 கோடியை தேசிய பாதுகாப்பு நிதியிலிருந்து அளிக்க பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார்.
  • எஸ்.பி.ஜி. குடும்பநல நிதியத்திற்கு, படையினருக்கும், அவர்களின் குடும்பத்தினர் நலனுக்கான பணிகளை மேற்கொள்ள, வருடாந்திர நிதியாக ரூ.15 லட்சம், தேசிய பாதுகாப்பு நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel