தேசிய உயிர்எரிபொருள் கொள்கை

 • தேசிய உயிர்எரிபொருள் கொள்கையானது, மத்தியரசின் புதிய மற்றும் புத்தாக்க எரிசக்தி அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டது. 2008ம் வருடம் செப்டம்பர் மாதம் 11ம்தேதி மத்திய அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தேசிய உயிர்எரிபொருள் கொள்கையின் சிறப்பம்சங்கள்
 • 2017ம் ஆண்டிற்குள், 20சதவிகிதம் அளவிற்கு உயிர்எரிபொருள் (உயிர் எரிசாராயம் மற்றும் பயோடீசல்) ஆகியவற்றை கலந்து பயன்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 • உணவு எண்ணை அல்லாத மற்ற எண்ணை வித்துக்கள் பயிர்களை உபயோகமற்ற, தரிசு நிலங்களில் பயிர் செய்வதன் மூலம் பயோடீசல் உற்பத்தி செய்யப்படும்.
 • வெளிநாட்டிலிருந்து கொழுப்பு அமிலம் (FFA) உள்ள எண்ணை, பாமாயில், ஆகியவற்றை இறக்குமதி செய்யப்படாமல், உள்நாட்டிலேயே பயோடீசல் உற்பத்திக்கு வழிவகை செய்யப் படும்.
 • பயோடீசல் உற்பத்திக்கான பயிர்சாகுபடி பொது/ அரசு/வனத்துறையின் தரிசு நிலங்களில் மேற்கொள்ள ஊக்கமளிக்கப்படும். வளமான, பாசனப்பகுதிகளில் மேற்கொள்ள ஊக்கமளிக்கப்படுவதில்லை.
 • சாகுபாடியாளர்களுக்கு தகுந்த விலை வழங்குவதற்கு, பயோடீசல் உற்பத்திக்கான எண்ணை வித்துக்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) அறிவிக்கப்படும். அவ்வப்போது, இது பரிசீலிக்கப்பட்டு நிர்ணயக்கப்படும். இதற்கான விபரங்கள் நிருவப்பட்டு, உயிர் எரிபொருள் நடப்பு குழுவால் கலந்தாலோசிக்கப்படும்.
 • தேசிய உயிர்எரிபொருள் குழுமத்திற்கு பாரதப்பிரதமர் தலைமை வகிப்பார்.உயிர் எரிபொருள் செயல்படுத்தும் குழுமத்திற்கு அமைச்சரவை செயலர் தலைமை வகிப்பார்.தேசிய சாண எரிவாயுக்கலன் மற்றும் உர மேலாண்மை திட்டம்
 • 1981-82 ல் தேசிய சாண எரிவாயுக்கலன் மேம்பாட்டுத்திட்டமாக இத்திட்டம் துவக்கப்பட்டது.
நோக்கங்கள்
 • ஊரக மக்களுக்கு, சமையல் செய்யத் தேவையான எரிபொருள் வழங்குதல் மற்றும் இயற்கை உரத்திற்கு, சாண எரிவாயுக்கலன் அமைத்து ஏற்பாடு செய்தல்.
 • ஊரக மகளிரின் பணிகளை கஷ்டமில்லாமல் செய்ய உதவுதல், வனங்களை பாதுகாத்தல், சமூகப்பணிகளை பிரபலப்படுத்துதல்
 • கிராமப்புற சுகாதாரத்தை, சாண எரிவாயுக்கலனுடன் மனிதக் கழிவை சேர்ப்பதன் மூலம் மேம்படுத்தல்

0 Comments

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel