சுற்றுச்சூழல் - சட்டம் மற்றும் கொள்கை

தேசிய பசுமைத் தீர்ப்பாய சட்டம், 2010
 • ஜூன் 2, 2010 ஆம் தேதியன்று இந்தியப் பிரதமரால் தேசிய பசுமைத் தீர்ப்பாய சட்டம் அங்கீகரிக்கப்பட்டது. சுற்றுபுறத் தொடர்புக்கான குடியுரிமை வழக்குகளை விரைவாக தீர்ப்பதற்காக ஒரு சிறப்பு விரைவு நீதிமன்றமான தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தை நிறுவுவதற்காக இது வாய்ப்பு அளிக்கிறது.
 • இந்த முயற்சியால், இம்மாதிரியான சிறப்புமிக்க சுற்றுச் சூழல் தீர்ப்பாயங்களை கொண்டிருக்கும் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துடன் இந்தியா இணையும்.
தேசிய நீர் கொள்கை 2002
 • தேசிய நீர்வள ஆதாரங்கள் கழகமானது, நீர்வள ஆதாரங்களின் மேலாண்மை குறித்த விவகாரங்களை கையாளும் தேசிய நீர்கொள்கையை ஏப்ரல் 2002ல் ஏற்றுக்கொண்டது. 
 • இந்த கொள்கையானது, நீர் ஆதாரங்களை நிலையான மற்றும் திறனான முறையில் மேலாண்மை செய்வதற்க்கான அவசியத்தை முக்கியபடுத்துகிறது.தட்பவெப்ப நிலை மாற்றம் குறித்த தேசிய செயல்திட்டம்
 • தட்ப வெப்பநிலை மாற்றம் குறித்த தேசிய செயல் திட்டமானது 2008 ஜீன் 30ம் தேதியன்று அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டது. இத்திட்டம் வளர்ச்சியை முன்னிறுத்தும் நோக்கத்தையும், அதே சமயத்தில் தட்ப வெப்பநிலை மாற்றங்களை எதிர்நோக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
 • இந்த தேசிய செயல் திட்டத்தில் எட்டு தேசிய இயக்கங்கள் உள்ளன. இதன் முக்கியமான பணிகளாவன, தட்பவெப்பநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், தட்பவெப்பநிலை மாற்றங்கள் ஏற்படுவதை குறைத்தல் மற்றும் அதற்கு ஏற்ற வகையில் வாழ்க்கை முறைகளை கடைபிடித்தல், சக்தியை அதிக திறன்பட முறையாக பயன்படுத்துதல் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாத்தல் ஆகியன.
எட்டு தேசிய இயக்கங்கள்
 1. தேசிய சூரிய ஒளிசக்தி இயக்கம்
 2. தேதிய திறன்பட சக்தி பயன்பாட்டு இயக்கம்
 3. தேசிய நிலையான வசிப்பிட இயக்கம்
 4. தேசிய தண்ணீர் இயக்கம்
 5. தேசிய நிலையான ஹிமாலய மாலைவாழ் பாதுகாப்பு இயக்கம்
 6. தேசிய பசுமை இந்திய இயக்கம்
 7. தேசிய நிலையான வேளாண்மை இயக்கம்
 8. தேசிய, தட்பவெப்பநிலை மாற்றம் குறித்த நுண்ணறிவு இயக்கம்.தேசிய சுற்றுச்சூழல் கொள்கை -2006
 • தேசிய வனக்கொள்கை 1988, தேசிய சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி பாதுகாப்பு கொள்கை 1992, மாசுக்கட்டுப்பாடு கொள்கை வரைவு 1992, தேசிய வேளாண் கொள்கை 2000, தேசிய மக்கள் தொகை கொள்கை 2000, தேசிய தண்ணீர் கொள்கை 2002 ஆகியவற்றினைக் கணக்கில் கொண்டு தேசிய சுற்றுச்சூழல் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
 • இந்தக் கொள்கை, சுற்றுச் சூழல் பாதுகாப்பை மேற்கொள்வோருக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கும். அதாவது, திட்டங்களை செயல்படுத்துவதில், சூழல் பாதுகாப்புக்கான திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள், மத்திய மாநில அரசுகள் மற்றும் பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்படும் அல்லது கொண்டு வரப்படும் சட்டதிட்டங்களுக்கு இந்தக் கொள்கை வழிகாட்டியாக அமையும்.

0 Comments

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel