Type Here to Get Search Results !

தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம்

  • 2009ஆம் வருடம் நவம்பர் மாதம் 24ஆம் தேதி கொண்டு வரப்பட் டது. அந்தத் தேதிக்குப் பிறகு, மாநிலத் தில் நடக்கிற அனைத்து திருமணங்களும், திருமணத் தேதியிலிருந்து 90 நாட்களுக்குள் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும், என இந்தச் சட் டம் சொல்கிறது.
எங்கே பதிவு செய்ய வேண்டும்?
  • கணவரது சொந்த ஊர், மனைவியின் சொந்த ஊர், தம்பதி வசிக்கும் இடம், திருமணம் நடந்த இடம் என ஏதாவது ஒரு பகுதிக்குரிய சார்பதிவா ளர் அலுவலகத்தில் திருமணத்தைப் பதிவு செய்யலாம். பதிவு செய் யும்போது, கணவன், மனைவி மற்றும் இரண்டு சாட்சிகள் தேவை. 
  • திருமணப்பதிவின் போது சமர்ப்பிக்க வேண்டிய ஆவண ங்கள் சில உண்டு. பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்ட், வருமா னவரித் துறையால் வழங்கப்பட்ட பான் கார்ட், அரசு அல்லது அரசுத்துறை அல்லது உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சல் அலுவலக பாஸ் புத்தகம், முதியோர் பென்ஷன் புத்தகம், துப்பாக்கி லைசென்ஸ், சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை, பள்ளி இறுதிச் சான்றிதழ் இவற்றில் ஏதாவது ஒன்றின் பிரதி. 
  • கணவன், மனைவியின் வயதுக் கான ஆதாரம், திரு மண அழைப்பிதழ் பிரதி அல்லது திருமணம் நடந்த இடத்தை உறுதிப் படுத்தும் விதமாக வேறு ஏதாவது ஆதாரம் போன்வற்றை அளிக்க வேண்டும்.



இந்தச் சட்டத்தால் என்ன பலன்?
  • ஒருவரது திருமணம் குறித்து எந்தப் பிரச்னை எழுந்தாலும், அது பற்றிய சட்டபூர்வமாக, தெளிவான முடிவுகள் எடுப்ப தற்கு இந்தத் திருமணப் பதிவு மிகவும் உபயோகமாக இருக்கும். 
  • ஒருவர், பலரை ஏமாற்றித் திருமணம் செய்து கொள்ளும் சம்பவங்களில் கூட அந்த ஆசாமி நாலு திருமணங்க ளையுமே பதிவு செய்திருந்தா லும் கூட அந்தப் பதிவுச் சான்றிதழ்கள், அந்தக் கேசில் முக்கியமான சில முடிவுகளை எடுக்க முக்கிய ஆதாரமாக அமையும்.
இந்தச் சட்டம் எல்லா ஜாதியினருக்கும், மதத்தினருக்கும் பொதுவானதா?
  • ஆமாம்! எந்த மதத்தினராக, ஜாதியினராக இருந்தாலும், இச்சட்டப்படி கட்டாயமாக தங்கள் திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டியது அவசியம். 
  • இன்னும் சொல்லப்போனால், இந்து திருமணச் சட்டம் 1955, இந்திய கிருஸ்துவ திருமணச் சட்டம் 1872, சிறப்புத் திருமணச் சட்டம் 1954, முகமதியர்கள் ஷரியத் திருமணச் சட்டம் மற்றும் வேறு எந்த தனிப்பட்ட சட்டங்களின்கீழ் திருமணம் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் கூட இச்சட்டத்தின் மூன்றாவது பிரிவின் கீழ் கட்டாயமாகப் பதிவு செய்யப்படுவது அவசியம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel