பிறப்பு பதிவு மற்றும் இறப்பு பதிவு சட்டம் 1969

பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டம்
  • பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டம், 1969 ஒவ்வொரு பிறப்பும், இறப்பும் பதிவு செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்துகிறது. தமிழ் நாடு பிறப்பு மற்றும் இறப்பு பதிவு விதிகள் 2000-த்தின் படி ஒவ்வொரு பிறப்பும், இறப்பும் பதிவு செய்யப்படுகிறது.
பொறுப்பு அளிக்கப்பட்ட அதிகாரிகள்
  • கிராம பஞ்சாயத்து: கிராம நிர்வாக அதிகாரிகள்
  • நகர பஞ்சாயத்து: சுகாதார ஆய்வாளர்கள்/மேல் நிலை அதிகாரிகள்
  • மாநகரம்/நகராட்சி பரப்பு: மண்டல சுகாதார ஆய்வாளர்கள்/மேல் நிலை அதிகாரிகள்
  • தோட்டம்: தோட்டத்தின் மேலாளர்.கால அவகாசம்
  • இருபத்தொன்று நாட்களுக்குள் பதிவு செய்யப்படும் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் இலவசமாக வழங்கப்படுகிறது.
  • இருபத்தொன்று நாட்களுக்கு பின், ஆனால் முப்பது நாட்களுக்குள் பதிவு செய்யப்படுமானால் இரண்டு ரூபாய் தாமதக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது
  • ஓராண்டுக்குள் தெரிவிக்கப்படும் பிறப்பு அல்லது இறப்பு பதிவு செய்யப்பட அங்கீகாரம் பெற்ற அதிகாரியின் எழுத்து ஆணையுடன் ஐந்து ரூபாய் அபராதமாக வசூலிக்கப்படுகிறது
  • ஒரு வருடத்திற்கு பிறகு பிறப்பு அல்லது இறப்பு பதிவுசெய்யப்பட வேண்டுமானால் முதல் வகுப்பு மேஜிச்டரட்டின் உத்தரவு கட்டாயம் தேவை. மேலும் தாமதத்துக்கான அபராதமாக பத்து ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.

0 Comments

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel