தமிழ்நாடு புகைப்பிடித்தலையும் எச்சில் உமிழ்வதையும் தடை செய்தல் சட்டம், 2002

அறிமுகம்
  • இந்தியர்களுக்கு கண்ட, கண்ட இடங்களில் எச்சில் துப்பி வைக்குமொரு பழக்கம் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக இருக்கிறது. எச்சிலில் 99 சதவீதம் நீர் தான் உள்ளது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. 
  • ஆனால் இதில் வைட்டமின்கள், மினரல்கள், ஹார்மோன் சுரப்புகள், அமிலங்கள், நல்ல பாக்டீரியாக்கள். நாம் உண்ணும் உணவின் சத்துக்கள் ஆகிய அத்தனையும் சேர்ந்தே இருக்கின்றனவாம். 
  • மேலும், காசநோய், ஹெபடைடிஸ், மூளைக்காய்ச்சல், ஹெர்பஸ் வைரஸ் போன்ற பொது வைரஸான சைட்டோமெகலோவைரஸ் மற்றும் சுரப்பிகள் சார்ந்த காய்ச்சல் போன்ற பல நோய்களுக்கு காரணமான எப்ஸ்டென் - பார் வைரஸ் போன்றவை எச்சிலின் மூலமாகப் பரவுகின்றன.
  • அதற்கென தண்டனைச் சட்டம் அமுலுக்கு வந்த பிறகும் இப்போதும் பலர் திருந்திய பாடில்லை. 1990 ஆம் ஆண்டு வரை எச்சில் துப்புவது குற்றம் என்றும், அவ்வாறு செய்தால் 5 பவுண்ட் அபராதம் என்று பிரிட்டனில் நடைமுறை இருந்து வந்தது. 
  • தமிழ்நாட்டிலும் கூட இந்தச் சட்டங்கள் இயற்றப்பட்டு விட்டன. ஆனால் அவற்றுக்கான விதிகள் மட்டும் இன்னமும் வகுக்கப்படாமல் உள்ளன. அந்த வகையில் தமிழ்நாடு புகைப்பிடித்தலையும் எச்சில் உமிழ்வதையும் தடை செய்தல் சட்டம், 2002 பற்றிப் பார்போம்.சட்ட எண். 4/2003
  • தமிழ்நாடு மாநிலத்தில் பொதுப்பணியிடத்திலோ அல்லது பொதுப் பயன்பாட்டிற்கான இடத்திலோ மற்றும் மக்கள் சேவைக்கான ஊர்தியிலோ, புகைப்பிடித்தலையும் எச்சில் உமிழ்வதையும் தடை செய்வதற்கும் அதனோடு தொடர்புடைய பொருட்பாடுகளுக்கு வகை செய்வதற்கானதொரு சட்டம். 
  • இந்தச் சட்டம் 2002-ஆம் ஆண்டு தமிழ்நாடு புகைப்பிடித்தலையும் எச்சில் உமிழ்வதையும் தடைசெய்தல் சட்டம் என வழங்கப்பெறும். இது தமிழ்நாடு மாநிலம் முழுவதையும் அளாவி நிற்கும். 
  • “பொதுப் பணியிடம் அல்லது பொதுப்பயன்பாட்டிற்கான இடம்” என்றால் 3-ஆம் பிரிவின்படி விளம்பப்பட்ட (declared) இடம் என்று பொருள்படுவதோடு, அரங்கம், மருத்துவமனைக் கட்டிடங்கள், மக்கள் நல்வாழ்வு நிலையங்கள், திரையரங்கு அல்லது மாநாட்டு அரங்குகள், கேளிக்கை மையங்கள், சிற்றுண்டிச் சாலைகள், உணவகங்கள், வணிக அமைப்பிடங்கள், பொது அலுவலகங்கள், நீதிமன்றக் கட்டடங்கள், கல்வி நிலையங்கள், பூங்காக்கள், நூலகங்கள். விளையாட்டு வளாகங்கள், பேருந்து நிலையங்கள், கடற்கரைகள், கடைவீதிகள், உள்ளாட்சி அமைப்புகள், சட்டப்பூர்வமான அமைப்புகள், கூட்டுறவு நிறுவனங்கள் உள்ளடங்களாக அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் மத சம்பந்தமான இடங்கள் மற்றும் பொதுமக்கள் வந்து போகும் இவை போன்ற இடங்கள் ஆகியவற்றை உள்ளடக்கும். ஆனால் திறந்த வெளியிடங்கள் (open place) எதனையும் உள்ளடக்காது;
  • 4, 5 அல்லது 8 ஆம் வகைமுறைகளை மீறுகிறபோது, நூறு ரூபாய் வரையிலான பணத்தண்டனை விதித்துத் தண்டிக்கத்தக்கவராவார். மற்றும், இரண்டாம் அல்லது அதற்கு மேற்பட்ட குற்றச்செயலுக்கு குறைந்த பட்ச பணத்தண்டனை இருநூறு ரூபாய் எனினும் அத்தண்டனை ஐந்நூறு ரூபாய் வரையில் விதிக்கப்படலாம் என்ற வகையில் தண்டிக்கப்படுதல் வேண்டும்.

0 Comments

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel