Type Here to Get Search Results !

தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 (Information Technology Act, 2000)

தகவல் தொழில்நுட்ப சட்டம்
  • இலக்கமுறை (டிஜிட்டல்) கையெழுத்து, பாதுகாப்பு, மற்றும் திருட்டு செய்தல் (ஹேக்கிங்) உள்ளிட்ட இணைய பயன்பாடு மற்றும் வர்த்தகத்தை, கட்டுப்படுத்த ஒரு சட்ட கட்டமைப்பை அளிக்க ஜூன் 2000-ம் ஆண்டில் இந்திய பாராளுமன்றம் தகவல் தொழில்நுட்ப (IT) சட்டத்தை உருவாக்கியது.
  • சட்டம் மின்னணு ஆபாச தகவல்களை வெளியிட குற்ற நடவடிக்கையாக்குகிறது. மேலும் சட்டத்தை மீறும் தனிநபர்களை கைது செய்யவும் எவ்விடங்களையும் ஒரு ஆணை இல்லாமல் தேடவும் காவலர்களுக்கு (போலீஸுக்கு) அதிகாரங்களை வழங்குகிறது.



தகவல் தொழில்நுட்ப சட்டத் திருத்தம்(2008)
  • இணைய தளங்கள் மற்றும் உள்ளடக்கம் மேலும் தூண்டக் கூடிய அல்லது குற்றமுள்ளதாகக் கருதப்படும் குற்ற செய்திகளை தடுக்க அரசு அதிகாரத்தை வலுப்படுத்தியது.
  • தகவல் தொழில்நுட்ப சட்டம்(2000)த்திற்கு (ITA) ஒரு நிகராக "2011 தகவல் விதிகள்" ஏற்கப்பட்டன.
  • அதிகாரிகளால் ஆட்சேபணைக்குரியதாக கருதப்படும் குறிப்பாக "சிறார்களுக்குத் "தீமையானது", "வெறுப்பானது", தீங்கானது", அல்லது "பதிப்புரிமையை மீறுவதாக" உள்ளதாக இருக்கும் எந்த உள்ளடக்கத்தையும் இணைய நிறுவனங்களுக்கு தெரிவிக்கப்பட்ட 36 மணி நேரத்திற்குள் அகற்ற வேண்டும் என தேவையளிக்கிறது.
  • இணையக்கடை உரிமையாளர்கள் வாடிக்கையாளர்களின் புகைப்படங்களை பாதுக்காக்க வேண்டும். அவர்களுடைய கடைகளை எப்படி அமைக்கவேண்டும், அனைத்து கணினி திரைகளும் பார்வையில் படும்படி இருக்கவேண்டும்.
  • வாடிக்கையாளர்களின் அடையாளங்கள் மற்றும் அவர்களின் உலாவல் வரலாற்றின் பிரதிகளை ஒரு ஆண்டு வரை வைத்திருக்கவேண்டும். இவ்வகைப் பதிவுகளை ஒவ்வொரு மாதமும் அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் போன்ற பரைந்துரைகள் உள்ளன.
  • 2003-ல் இந்திய அரசு இணைய பாதுகாப்பை உறுதிப்படுத்த "செயல்திறனுடன் நடவடிக்கை மற்றும் பயனுள்ள ஒத்துழைப்பு மூலம் இந்திய தகவல் தொடர்பு மற்றும் தகவல் உட்கட்டமைப்பு பாதுகாப்பை மேம்படுத்த" இந்திய கணினி அவசரநிலை பிரதிசெயல்(CERT-IN) நிறுவனத்தை நிறுவியது. 
  • அனைத்து உரிமம் பெற்ற இந்திய ஐஎஸ்பி-க்கள் சிஇஆர்டி-இன் முடிவுகளுக்கு இணங்க வேண்டும். மறு ஆய்வு அல்லது முறையீடுகள் இல்லை. இது குறிப்பிட்ட வலைத்தளங்களில் அணுகளை தடுக்கிறது மற்றும் வேண்டுகோள்களை மறு ஆய்வு செய்கிறது. தொலைத் தொடர்பு துறைக்கு (DOT) தடை உத்தரவுகளை வழங்கும் தனி அதிகாரத்தைப் பெற்றது.
பிரிவு 66 முதல் 69 வரை
66 ஏ பிரிவு
  • தகவல் தொழில் நுட்ப சட்டம் 2008 ரொம்ப விரிவானது. சமூக வலைத்தளம் சார்ந்த குற்றங்களுக்கானது மட்டுமில்லை. தானியங்கி பணம் அளிக்கும் இயந்திரங்கள், வலைத்தள தகவல்திருட்டு, காப்புரிமை இதெல்லாமும் சேர்ந்தது. 
  • இணைய தளத்தில் தவறான, அவதூறான தகவல்களை பதிவதைப் பற்றியது தான் 66 ஏ பிரிவு. இந்த சட்டத்தின் 66 முதல் 69 வரையிலான எல்லா பிரிவுகளிலும் இணைய தளம் சார்ந்த குற்றங்களை விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
பிரிவு 67
  • பாலுறவு தொடர்பான காட்சிகளை எலக்ட்ரானிக் வடிவத்தில் வெளியிடுவோரை முதல் தடவை தண்டிக்கும்போது ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், மறுமுறை இதே தவறை மீண்டும் செய்தால் பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், இவற்றோடு இரண்டு லட்ச ரூபாய்வரை அபராதமும் விதிக்கலாம்..



69(1) பிரிவு மற்றும் 69(2) பிரிவு
  • காவல்துறைக்கு எல்லை மீறிய அதிகாரத்தை இச்சட்டம் அளிக்கிறது. அரசாங்கங்கள் உங்களின் மின்னஞ்சல், குறுந்தகவல், தொலைபேசி உரையாடல் போன்ற, அனைத்து தகவல் தொடர்பு நடவடிக்கைகளையும், கண்காணித்திட முடியும். நீதிமன்ற உத்தரவு ஏதும் இல்லமாலே, காவல்துறை ஆய்வாளர் ஒருவர், ஒரு இல்லத்தில் நுழைந்து தேடுதல் நடவடிக்கை செய்திடமுடியும், கணினியை கைப்பற்ற முடியும், புலன் விசாரணை நடவடிக்கையில் ஈடுபடமுடியும்.
  • இலக்கமுறை (டிஜிட்டல்) கையெழுத்து, பாதுகாப்பு, மற்றும் திருட்டு செய்தல் (ஹேக்கிங்) உள்ளிட்ட இணைய பயன்பாடு மற்றும் வர்த்தகத்தை, கட்டுப்படுத்த ஒரு சட்ட கட்டமைப்பை அளிக்க ஜூன் 2000-ம் ஆண்டில் இந்திய பாராளுமன்றம் தகவல் தொழில்நுட்ப (IT) சட்டத்தை உருவாக்கியது.
  • சட்டம் மின்னணு ஆபாச தகவல்களை வெளியிட குற்ற நடவடிக்கையாக்குகிறது. மேலும் சட்டத்தை மீறும் தனிநபர்களை கைது செய்யவும் எவ்விடங்களையும் ஒரு ஆணை இல்லாமல் தேடவும் காவலர்களுக்கு (போலீஸுக்கு) அதிகாரங்களை வழங்குகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel