Type Here to Get Search Results !

ஆம் ஆத்மி பீமா யோஜனா

  • சமூகப் பாதுகாப்புத் திட்டங்களான ஆம் ஆத்மி பீமா யோஜனா (AABY), ஜனஸ்ரீ பீமா யோஜனா (JBY) இரண்டையும் ஓன்றிணைக்க மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.
  • ஒன்றிணைக்கப்பட்ட திட்டம் ஆம் ஆத்மி பீமா யோஜனா என்ற பெயரில் 2013 ஜனவரி முதல் தேதியிலிருந்து செயல்பட்டு வருகிறது
பிரிமியம்
  • இத்திட்டத்தில் ரூ. 30 ஆயிரம் காப்பீடு பெற, ஆண்டொன்றுக்கு ரூ. 20 பிரிமியம் செலுத்த வேண்டும். பிரிமியத்தில் பாதித்தொகை சமூகப்பாதுகாப்பு நிதியத்தில் இருந்து வழங்கப்படும். 
  • கிராமப்புற நிலமற்ற ஏழைகள் எனில் எஞ்சிய பாதியை மாநில அரசு – யூனியன் பிரதேச அரசுகள் செலுத்தும் குறிப்பிட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களைப் பொறுத்த மட்டில் எஞ்சிய பாதி பிரிமியத்தை ஓப்புதல் அளிக்கும் முகமை அல்லது மாநில அரசு அல்லது யூனியன் பிரதேச அரசு செலுத்திவிடும்.
இயற்கை மரணம்
  • ஆம் ஆத்மி யோஜனாவில் உறுப்பினராக உள்ளவருக்கு இயற்கையாக மரணம் ஏற்பட்டால் அவருடைய வாரிசுதாரருக்கு ரூ. 30,000 ஆயிரம் வழங்கப்படும்.
விபத்தினால் மரணம்
  • விபத்தினால் மரணம் ஏற்பட்டால் - ரூ. 75,000
  • விபத்தினால் நிரந்தர ஊனம் ஏற்பட்டால் (இரண்டு கைகள், அல்லது இரண்டு கால்கள் அல்லது இரண்டு கண்கள் இழந்தாலும்) - ரூ. 75,000
  • விபத்தினால் ஓரளவுக்கு ஊனம் ஏற்பட்டால் (ஒரு கண் அல்லது ஒரு கை அல்லது ஒருகால் இழந்தால் - ரூ. 37,500



ஆம் ஆத்மி பீமா யோஜனாவின் கீழ் பயன்பெற இனம்காணப்பட்ட வேலைகள்- தொழில்கள்
  • பீடித் தொழிலாளர்கள்
  • செங்கல் சூளைத் தொழிலாளர்கள்
  • தச்சு வேலை செய்பவர்கள்
  • செருப்பு – காலணி தைத்தல்
  • மீன் பிடித்தல்
  • ஹமால் (சுமைதூக்குதல்)
  • கைவினைக் கலைஞர்கள்
  • கைத்தறி நெசவாளர்கள்
  • கைத்தறி காகித் தொழிலாளர்கள்
  • பெண் தையற்காரர்கள்
  • தோல் மற்றும் தோல் பதனிடும் தொழிலாளர்கள்
  • சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த அப்பளம் – வடாம் தயாரிப்பவர்பகள்
  • சுய தொழில் புரியும் உடல் ஊனமுற்றோர்
  • பால் உற்பத்தியாளர்கள்
  • ரிக்‌ஷா – ஆட்டோ ஓட்டுநர்கள்
  • துப்பரவுத் தொழிலாளர்கள்
  • உப்பளத் தொழிலாளர்கள்
  • டெண்டு இலை சேகரிப்பவர்கள்
  • நகர்ப்புறத்து ஏழைகள் (சிலபிரிவு)
  • காடுகளில் வேலைசெய்வோர்
  • பட்டுப்புழு வளர்ப்போர்
  • கள் இறக்குபவர்கள்
  • விசைத்தறி தொழிலாளர்கள்
  • மலைப்பகுதி வாழ் பெண்கள்
  • வெல்லம் – கண்டசாரி தயாரிப்பவர்கள்
  • நெசவுத்தொழில்
  • மரச்சாமான் தயாரித்தல்
  • காகிதம் பொருள் தயாரித்தல்
  • தோல் பொருள் தயாரித்தல்
  • அச்சுத் தொழில்
  • ரப்பர் & நிலக்கரி பொருள்கள்
  • மெழுகுவர்த்தி போன்ற ரசாயணத் தயாரிப்புகள்
  • மண்பொம்மை மற்றும் மண்பாண்டம் போன்ற தயாரிப்புகள்
  • விவசாயிகள்
  • போக்குவரத்துத் தொழிலாளர்கள்
  • கிராமப்புறத்து ஏழை மக்கள்
  • கட்டுமானத் தொழிலாளர்கள்
  • பட்டாசுத் தொழிலாளர்கள்
  • தேங்காய் மற்றும் தென்னை நார் தொழிலாளர்கள்
  • அங்கன் வாடி ஆசிரியைகள்
  • தலையாரி (கோட்வால்)
  • தோட்டத் தொழிலாளர்கள்
  • சுய உதவிக்குழுவைச் சார்ந்த பெண்கள்
  • ஆடு வளர்ப்போர்
  • வெளிநாடுகளில் வேலைசெய்யும் இந்தியத் தொழிலாளர்கள்
  • கிராமப்புறத்து நிலமற்ற மக்கள்
  • ராஷ்ட்ரீய ஸ்வாஸ்த பீமா யோஜனாவில் பயன்பெறும் அமைப்புச் சாரா தொழிலாளர்கள்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel