Type Here to Get Search Results !

பிரதமரின் வேளாண் பாசனத்திட்டம்

  • நம்நாட்டில் சாகுபடி செய்யப்படும் மொத்த நிலப்பரப்பு சுமார் 14 கோடியே பத்து லட்சம் ஹெக்டர். இதில் 45 சதவீத நிலங்களுக்கு மட்டுமே, அதாவது சுமார் ஆறுகோடியே ஐம்பது லட்சம் ஹெக்டர் நிலப்பரப்புக்கு மட்டுமே பாசன வசதி உள்ளது. 
  • இந்தியாவின் எல்லாப் பகுதியிலும் உள்ள விவசாய நிலங்கள் அனைத்திற்கும் ஏதேனும் ஒரு உத்திரவாதமான பாசன வசதியை ஏற்படுத்தி தருவதே பிரதமரின் வேளாண் பாசனத் திட்டத்தின் நோக்கமாகும். இதன் மூலம் "ஒவ்வொரு துளிக்கும் கூடுதல் பயிர்" என்ற உத்வேகத்துடன் விவசாயிகள் செயல்பட்டு, அதனால் கிராமங்கள் வளம் பெறவேண்டும்.
நோக்கங்கள்
  • மாவட்ட அளவில் அல்லது வருவாய்க் கோட்ட அளவில் நீர்ப் பாசனத் திட்டங்களை வரைந்து, அவற்றைச் செய்லபடுத்துவதற்கான செலவுகளை ஒரு குவியத்திற்குள் கொண்டுவருதல்.
  • விவசாய நிலங்களுக்குப் பாசன நீர் கிடைப்பது உறுதி செய்யப் படுவதால், சாகுபடி செய்யும் பரப்பை அதிகரித்தல்.
  • நீர்வள ஆதாரங்களை எல்லாம் ஒன்றிணைத்தும், விநியோக முறையையும் மேம்படுத்தி, உசிதமான தொழில் நுட்பங்கள் மூலம் பாசன நீரைத் திறம்படப் பயன்படுத்துவதை உறுதிசெய்தல்.
  • நிலத்தில் பாசனம் செய்யும் தருணத்திலும் தண்ணீர் வீணாவதைக் குறைத்து, அதிக நேரத்திற்கும் அதிக பரப்புக்கும் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்வது.
  • துல்லிய பாசன முறை மற்றும் அது போன்ற தண்ணீர் சிக்கன நுட்பங்களைப் பெருமளவில் விவசாயிகளைப் பின்பற்றச் செய்தல்.
  • நீர்பிடிப்புப் பகுதிகளில் மீண்டும் மீண்டும் நீரைச் சேமிக்கும் திறனை அதிகரித்து நீண்டகாலத்திற்கான தண்ணீர் சேமிப்பு ஏற்பாடுகளைச் செய்தல்.
  • மண்வளப் பாதுகாப்பு, தண்ணீர் சேமிப்பு, நிலத்தடி நீர் வளத்தை மேம்படுத்துதல், பூமிப்பரப்பில் வழிந்தோடிக் கடலில் கலக்கும் தண்ணீரைத் தடுத்துச் சேமிப்பது ஆகிய அனைத்து விதமான பணிகளையும் ஒன்றிணைத்து, மானாவாரி சாகுபடி நிலங்களை மேம்படுத்துதல்.
  • எவ்விதமான பயிர்களை எந்த முறையில் சாகுபடி செய்யவேண்டும் என்றும், மழை நீரைச் சேமித்து, நீரைத் திறம்படக் கையாள்வது குறித்தும் விவசாயிகளுக்கும், களப்பணியாளர்களுக்கும் அறிவுறுத்திப் பயிற்சி அளித்தல்.
  • நகர்ப்புறங்களில் சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரைப் பாசனத்திற்கு பயன் படுத்துவதற்கான வாய்ப்புகளைக் கண்டறிதல்.
  • நீர்பாசனத்துறையில் தனியாரின் முதலீடுகளை அதிக அளவில் ஈர்த்தல்



செயல்படும் விதம்
  • 1) 2015-16 ஆண்டு முதல் 2020-21 வரையிலான ஐந்து ஆண்டுகளுக்கு வேளாண் பாசனத் திட்டத்திற்கு ரூபாய் 50 ஆயிரம் கோடி செலவிடப்படும்.
  • மத்திய நீர் வளம் நதிகள் அபிவிருத்தி, கங்கைப் புனரமைப்பு அமைச்சகத்தின் கீழ் செயல் படும் முடுக்கிவிடப்பட்ட பாசனப் பயன் திட்டம் (AIBP),
  • மத்திய நிலவளத்துறை செயல்படுத்தும், ஒருங்கிணைந்த நீர்ப்பிடிப்பு மேலாண்மைத் திட்டம் (IWMP),
பிரதமரின் வேளாண் பாசனத்திட்டத்தின் முக்கிய கூறுகள்
1. முடுக்கிவிடப்பட்ட பாசனப் பயன்திட்டம் (AIBP):
  • தேசிய அளவிலான பாசனத்திட்டங்கள் உள்பட, தற்போது செயல்படுத்தப் பட்டுவரும் எல்லாவிதமான பெரிய மற்றும் சிறிய பாசனத் திட்டங்கள் அனைத்தையும் துரிதமாக நிறைவேற்றுவது.
2. ஒவ்வொரு நிலத்திற்கும் பாசனநீர் 
  • சிறிய பாசனத் திட்டம் மூலமாக (நிலமட்டத்தில் அல்லது நிலத்தடியில் கிடைக்கும் நீரைக் கொண்டு ) புதிய நீர் ஆதாரங்களை உருவாக்குதல்.
  • நீர்நிலைகளை மீட்டெடுப்பது, தூர்வாருவது, புனரமைப்பது போன்ற பணிகளும் பாரம்பரியமான நீர்நிலைகளின் கொள்ளளவை அதிகரிப்பதுடன் மழை நீர்ச் சேகரிப்புக் கட்டமைப்புகளையும் புதிதாக அமைப்பது.
  • பாசன வசதிபெறும் ஆயக்கட்டுப் பகுதிகளை மேம்படுத்துதல். நீர் ஆதார நிலையில் இருந்து பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்ற நிலம் வரையில் நீர் விநியோக முறையை உருவாக்கி பலப்படுத்துதல்.
  • அதிகபட்ச அளவு மழை பொழிகின்ற காலங்களில், மழைநீர் நிலப்பரப்பில் ஓடி வீணாகி விடுவதை தடுக்கத் தேங்கு குழிகள் ஏற்படுத்தி நிலத்தடி நீர் வளத்தை அதிகரித்தல்.
  • நம் நாட்டின் பாரம்பரியமான நீர்நிலைகளை, அதாவது ஜல்மந்திர் (குஜராத்), கத்ரி & குல் (இமாசல பிரதேசம்), ஜபோ (நாகலாந்து), ஏரி,கண்மாய், ஊருணி (தமிழ்நாடு), டோங்ஸ் (அசாம்), காடாஸ் & பண்ட்ஹாஸ் (ஒடிஸா மற்றும் மத்தியப்பிரதேசம் ) போன்றவற்றை சாத்தியப்படும் இடங்களில் புதிதாக உருவாக்குவதும், ஏற்கனவே உள்ளவற்றை புனரமைப்பாகும்.



3. ஒவ்வொரு சொட்டுக்கும் கூடுதல் பயிர் :
  • மாநில / மாவட்ட பாசனத் திட்டத்தைத் தயாரிப்பது, வருடாந்திரத் திட்டத்திற்கு அனுமதி அளிப்பது, திட்டச் செயல்பாடுகளைக் கண்காணித்து நிருவகிப்பது.
  • மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் நீர்நிலைகளில் மேற்கொள்ளப்படும் பாய்கால் வசதி, வடிகால் வசதி, வண்டல் போக்கு வசதி போன்ற வேலைகளுக்கு அனுமதிக்கப்படும் திட்டச்செலவின் உச்ச வரம்பான 40 சதவீதத்திற்கும் மேலாகும் செலவுகளுக்கு நிதிஅளித்தல்.
4. நீர்ப்பாதை அபிவிருத்தி
  • பூமிப்பரப்பில் வழிந்தோடும் நீரைப் பயனுள்ள வகையில் கையாள்வதும், நிலத்தின் ஈரத்தன்மையை மேம்படுத்தி, மண்வளத்தைப் பாதுகாப்பதுமான பணிகள். மழைநீர்ச் சேகரிப்பு ஏற்பாடுகளும் வடிகால் ஏற்பாடுகளும் நிலத்தின் ஈரத்தன்மையைத் தக்கவைப்பதற்கு உறு துணையாக இருக்கும் படி மேற்கொள்ளப்படும்.
  • மானாவாரி சாகுபடி மேற்கொள்ளப்படும் பின்தங்கிய பகுதிகளில் நீர் ஆதாரமாக உள்ள பாரம்பரியமான நீர்நிலைகளை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் புதுப்பித்தலும், புதிய நீர்நிலைகளை உருவாக்குதலும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel