Type Here to Get Search Results !

பிரதமரின் விவசாயச் செல்வம் திட்டம் / SAMPADA - Scheme for Agro-marine Processing and Development of Agro processing clusters)

  • வேளாண் கடல்சார் பதனப்படுத்தல் மற்றும் வேளாண் பதப்படுத்துதல் மையங்களை மேம்படுத்துதலுக்கான திட்டம் 'சம்பதா' என்று அழைக்கப்படுகிறது. (SAMPADA- Scheme for Agro-marine Processing and Development of Agro processing clusters). 2017 ஆம் ஆண்டு மே மாதம் மத்திய அமைச்சரவை ஏற்பளித்த இந்தத் திட்டம், 14 ஆவது நிதி ஆணையச் சுழற்சி முடிவடையும் 2020 ஆம் ஆண்டில் நிறைவு பெறும்.
  • மத்திய அரசு தற்போது செயல்படுத்திவரும் பிரம்மாண்ட உணவு பூங்காத் திட்டம்., ஒருங்கிணைந்த குளிர்பதன மற்றும் மதிப்புக் கூட்டுக் கட்டமைப்பு, உணவுப் பாதுகாப்பு மற்றும் தர உத்தரவாதக் கட்டமைப்பு போன்ற திட்டங்களை ஒரு குடையின் கீழ் கொண்டுவந்துள்ள ஏற்பாடுதான் பிரதான் மந்திரி கிஸான் சம்பதா யோஜனா ஆகும். 
  • மேலும், வேளாண் பதப்படுத்தும் மையங்களுக்கான கூட்டமைப்புகளை ஏற்படுத்துதல், அவற்றுக்கு முன்னும் பின்னுமான இணைப்பு வசதிகளை உருவாக்குதல், உணவுப் பதனம் மற்றும் சேமிப்பிற்கான புதிய வசதிகளை உருவாக்குதல் மற்றும் ஏற்கனவே உள்ள வசதிகளை விரிவாக்குதல் போன்ற புதிய திட்டங்களும் இத்துடன் சேர்க்கப்பட்டுள்ளன.



நோக்கமும் திட்டங்களும்
  • பிரம்மாண்ட உணவு பூங்காக்களை உருவாக்குதல்.
  • ஒருங்கிணைந்த குளிர்பதனம் மற்றும் மதிப்புகூட்டுக் கட்டமைப்புகளை ஏற்படுத்துதல்
  • உணவுப் பதனம் / சேமிப்புக்கான திறன் வசதிகளைப் புதிதாக உருவாக்குதல் ஏற்கனவே உள்ளவற்றை விரிவாக்குதல்.
  • உணவுப்பதிப்படுத்தும் தொழில்கள் செறிந்துள்ள பகுதிகளுக்கான கட்டமைப்புகளை உருவாக்குதல்.
  • உணவுப் பதத்தை தொழில்களுக்கு முன்னும் பின்னுமாகத் தேவையாக உள்ள இணைப்பு வசதிகளை உருவாக்குதல்.
  • உணவுப் பாதுகாப்பு மற்றும் தர உத்தரவாதத்திற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்துதல்.
  • இத்துறைக்கு வேண்டிய மனிதவளத்தை உருவாக்குவதும் அதற்கான நிறுவனங்களை ஏற்படுத்துவதும்.



நிதி ஒதுக்கீடும் ஏற்படும் பயன்களும்
  • பிரதான் மந்திரி கிஸான் சம்பதா யோஜனாவுக்கு ரூ.6000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக இத்துறையில் சுமார் ரூ.31,400 கோடி அளவிற்கு முதலீடுகள் செய்யப்படும். 
  • இந்த முதலீட்டினால் ஏற்படக்கூடிய வசதிகளைக் கொண்டு, ரூ.1,04,125 கோடி மதிப்புள்ள, 334 லட்சம் டன் எடை கொண்ட வேளான் பொருட்கள் உணவுப்பதனத் துறையில் கையாளப்படும். இதனால் சுமார் 20 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவர். இத்துறையில் வரும் 2019-20 ஆம் ஆண்டுக்குள் கூடுதலாக சுமார் 5,30,500 நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel