Tuesday, 25 December 2018

உயிர் பல்வகை தன்மை (Bio Diversity)

உயிரியல் பல்வகை சட்டம் (Biological Diversity Act - 2002)
  • 1992ல் கையெழுத்தான ரியோ-டி-ஜெனிரோவில் உயிரியல் பல்வகை மீதான ஐ.நா. உடன்படிக்கையிலும் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.
  • இதன் நோக்கம் உயிரியல் பல்வகை பாதுகாப்பு. அதாவது காடுகளில் உள்ள தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிரிகள் அவற்றின் மரபு பொருட்கள், அவற்றின் இயல்பான வழித்தோன்றல்கள் மற்றும் அவற்றின் திறன் சார்ந்த அறிவு சமன்பாடு போன்றவைப் பாதுகாக்க இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது.
  • இந்தச் சட்டப்படி பிரிவு 3 அல்லது 4 அல்லது 6 ஆகியவற்றின் கீழ் கொண்டு வரப்பட்ட வகையங்களை மீறுகிறோர் அல்லது எவரையும் மீற தூண்டுகிறாரோ அவருக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ரூ.10 இலட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.
  • அவ்வாறு மீறுவதால் ஏற்படும் இழப்பை ஈடுகட்டும் பொருட்டு அபராதம் வசூலிக்கப்படும். அல்லது இழப்பீடு மற்றும் அபராதம் சேர்ந்து வசூலிக்கப்படும்.
  • மேலும் தீவிரமாக சுற்றுச்சூழல் மாசை கண்காணித்து நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகள் வாரியத்தை அமைத்தது.
  •  தண்ணீர் (மாசு தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல்) சட்டம் 1974ன் படி அமைத்தது. அந்த வகையில்தான் தமிழ்நாடு அரசு மாசு கட்டுபாட்டு வாரியத்தை 1974ம் ஆண்டு நீர் மத்திய அரசு சட்டம் 6ம் படி 27.02.1982 அன்று அமைக்கப்பட்டது.
  • இது 1974ம் ஆண்டு நீர் (மாசு தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல்) சட்டம், 1997ம் ஆண்டு நீர் (மாசு தடுத்தல் மற்றும் கட்டுப்பாடு) மேல் வரி சட்டம்,
  •  1981ம் ஆண்டு காற்று (மாசு தடுத்தல் மற்றும் கட்டுபாடு) சட்டம்
  • 1986ம் ஆண்டு சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டத்தின்கீழ் அடங்கிய பின்வரும் விதிகளின்கீழ் செயல்படுகிறது.
  • 1986ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) விதிகள், திருத்தப்பட்ட 2008ம் ஆண்டின் தீங்கு விளைவிக்கும் கழிவுகள் விதிகள்,
  • 1994ம் ஆண்டு மற்றும் 2000ம் ஆண்டுகளில் திருத்தப்பட்ட 1989ம் ஆண்டு அபாயகரமான இரசாயனங்கள் உற்பத்தி, சேமிப்பு மற்றும் இறக்குமதி விதிகள்,
  • 2000 மற்றும் 2003ம் ஆண்டில் திருத்தப்பட்ட 1998ஆம் ஆண்டு மருத்துவ நுண்ணுயிர் கழிவு விதிகள்,
  • 2011ம் ஆண்டு பிளாஸ்டிக் கழிவுகள் விதிகள்,
  • 2000ம் ஆண்டு ஒலி மாசு விதிகள்,
  • 2000ம் ஆண்டு நகர திடக்கழிவுகள் விதிகள்,



திருத்தப்பட்ட 2001ம் ஆண்டு மின்கலன்கள் விதிகள்
  • 2011ம் ஆண்டு மின்னணுக் கழிவுகள் விதிகள் போன்ற சட்ட திட்டங்கள் மூலம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சுற்றுச்சூழல் மாசுவை தடுத்து ஆரோக்கியமான வாழ்வை மேற்கொள்ள வழிவகுக்கிறது. 
  • இப்படி இந்தியா சுற்றுச் சூழல் சட்டங்களை சரியாக செயல்படுத்தியதன் விளைவுதான், உலகிலேயே மிக குறைந்த அளவு கரியமில வாயுக்களை வெளியேற்றுகின்றன.

TNPSCSHOUTERS

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a comment