Type Here to Get Search Results !

ஸ்டார் 2.0 திட்டம்




எளிய மற்றும் விரைவான பதிவு முறை
  • இத்திட்டத்தின் மூலம், பதிவுத்துறையில் உள்ள 575 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு தேவையான கணினி வசதிகளுடன் கூடிய மூன்று இணையதள தொடர்பு வசதிகள் (3 types of connectivity) கொடுக்கப்பட்டு, மாநில தகவல் தரவு மையத்துடனும் (State Data Centre), புனேயில் உள்ள பேரிடர் மீட்பு தரவு மையத்துடனும் (Disaster Recovery Centre at NIC, Pune) இணைக்கப்பட்டுள்ளது. 
  • பொதுமக்களே இணையவழி ஆவணங்களை உருவாக்கும் எளிய வழி முறை, பதிவுக்குதாக்கல் செய்யவேண்டிய ஆதாரங்களை முன்பே அனுப்பி சரிபார்க்கும் முறை, இணையவழி முன்அனுமதி பெற்று நேரவிரயமின்றி சரியான நேரத்திற்கு சார்பதிவாளர் அலுவலகம் வரும் வசதி, பதிவுக்குப்பின் நிலம் மற்றும் கட்டிடத்தைப் பொறுத்து மதிப்பு நிர்ணயம் செய்யவேண்டிய ஆவணங்களின் நிலையை இணையவழி உடனுக்குடன் தெரிந்துகொள்ளும் வசதி, ஒரே வருகையில் ஆவணங்களை பதிவு செய்து உடனுக்குடன் வழங்கும் வசதி ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
  • இத்திட்டத்தின் மூலம், ஆவணப்பதிவு தொடர்பான எல்லா சேவைகளும் கணினி வழியாக அவர்கள் இருப்பிடத்திலேயே வழங்கப்படுவதால், பொதுமக்கள் பதிவுத்துறை அலுவலகங்களுக்கு நேரடியாக செல்லவேண்டியது வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.
முன்சரிபார்ப்பு முறை
  • சொத்தினை கிரையம் பெறும்போது சொத்தினை வாங்குபவர் முழு தொகையையும் விற்பவருக்கு செலுத்திவிட்டு ஆவணம் தயார் செய்து கையொப்பம் இட்டு பதிவுக்கு சார்பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்யும் போது சொத்து குறித்த உரிய ஆதாரங்கள் இல்லை என்று திருப்பி அனுப்பும் போது சொத்தினை வாங்கியவர் மிகவும் பாதிக்கப்படுகின்றார். 
  • மீண்டும் சொத்தினை விற்றவரை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு ஆவணப்பதிவிற்கு அழைத்து வருவது மிகவும் கடினமான செயலாக உள்ளது.
  • இந்நிலையை தவிர்க்க முன் சரிபார்ப்பு என்ற புதிய முறை நாட்டிலேயே முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இம்முறை மூலம் ஆவணப்பதிவிற்கு முன்பே வரைவு ஆவணம், சொத்து குறித்த உரிய ஆதாரங்களை இணையதளம் மூலம் அனுப்பினால் அது சார்பதிவாளரால் சரிபார்க்கப்பட்டு தேவையான முத்திரைத் தீர்வை மற்றம் பதிவுக் கட்டண விவரங்களுடன் மனுதாரருக்கு திருப்பி இணையவழி அனுப்பப்படும். 
  • உரிய ஆதாரங்கள் இல்லை எனில் அவ்விவரமும் இணையவழியே தெரிவிக்கப்படும். இவ்வாறு சரிபார்த்த பின் ஆவணம் பதிவு செய்யும் நாள் மற்றும் நேரத்தை முன்னரே இணையவழி பதிவு செய்து அந்த நாளில் ஆவணப் பதிவை மேற்கொள்ளலாம்.
இணையவழி கட்டணமில்லா வில்லங்கச் சான்று பதிவிறக்கம் செய்தல்
  • பொதுமக்கள் இணைய வழி கட்டணமில்லா வில்லங்கச் சான்று 1987-ம் ஆண்டிலிருந்து பதிவிறக்கம் செய்யும் வசதி 11.06.2014-ல் துவக்கப்பட்டு, பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. 
  • இதுவரை இத்திட்டத்தின் மூலம் 3 கோடியே 66 லட்சம் வில்லங்கச்சான்றுகள் இணைய வழி பதிவிறக்கம் செய்யப்படுள்ளன. தற்போது மேலும் 12 ஆண்டுகளுக்கான தரவுகள் கணினிமயமாக்கப்பட்டு 1975 முதல் நாளது வரை பதிவிறக்கம் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
உடனடி பட்டாமாறுதலுக்காக வருவாய்த்துறைத்தரவுடன் இணைப்பு
  • தற்போது நடைமுறையில் உள்ள பட்டாமாறுதல் படிவம் (படிவம் 6) அனுப்பும் வசதி கணினி மயமாக்கப்பட்டு ஆவணப்பதிவுக்குப்பின் பட்டாமாறுதல் விவரங்களை இணையவழி வருவாய்த்துறைக்கு உடனுக்குடன் அனுப்பி அங்கிருந்து இணையவழி பெற்ற ஒப்புகைசீட்டு எண்ணுடன் பொதுமக்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் ஒப்புகை சீட்டு வழங்கும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
  • ஆவணப்பதிவு முடிந்தவுடன் உடனே வருவாய்த்துறைக்கு பட்டா மாறுதல் விவரங்கள் அனுப்பப்பட்டு அதற்கு ஆதரவாக குறுஞ்செய்தி வழி விண்ணப்ப எண் விவரம் ஆவணதாரருக்கு அனுப்பப்படும்.
  • வருவாய்த்துறையால் புல எண் முழுவதும் பரிமாற்றம் செய்யப்பட்டால், இரு வாரங்களுக்குள்ளும், உட்பிரிவு செய்யப்பட வேண்டிய நிலை இருப்பின் நான்கு வாரங்களுக்குள் உட்பிரிவு செய்யப்பட்டு பட்டா மாறுதல் செய்யப்படும் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.
  • இவ்வசதி தற்போது கிராம புல எண்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இச்சேவை விரைவில் நத்தம் மற்றும் நகரபுல எண்களுக்கு விரிவு படுத்தப்படும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel