Type Here to Get Search Results !

மதிய உணவுத் திட்டம்


  • அரசுப் பள்ளிகள் அரசு உதவிபெறும் பள்ளிகள், சிறப்புப்பயிற்சி மையங்கள் மற்றும் சர்வ சிக்‌ஷா அபியான் (அனைவருக்கும் கல்வித்திட்டம்) கீழ் உதவிபெறும் மதராஸாக்கள் (Madarasas), மக்தாப்புகள் (Maktabs) ஆகியவற்றில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடையே ஊட்டச்சத்து அளவை மேம்படுத்தவும், அம்மாணவர்களைத் தொடர்ந்து பள்ளிகளில் படிப்பதை ஊக்குவிக்கவும், பள்ளி மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கவும் மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
வரலாறு
  • இந்தியாவில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு அளிக்கும் திட்டம் வெகுகாலத்திற்கு முன்பிருந்தே தொடங்கிவிட்டது. 1925 ஆம் ஆண்டில், சென்னை மாநகராட்சிப் பகுதிகளில், ஏழைக் குழந்தைகளுக்குப் பள்ளியில் மதிய உணவு வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 
  • 1980 களின் மத்தியில் தமிழ்நாடு, கேரளம், குஜராத் ஆகிய மூன்று மாநிலங்களிலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் தொடக்கப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கும் திட்டத்தை அந்தந்த அரசுகள் தமது நிதியைக் கொண்டே செயல்படுத்தி வந்தன. 
  • 1990-91 ஆம் ஆண்டு வாக்கில், மாநிலங்களின் நிதி ஆதாரத்தைக் கொண்டே மதிய உணவு வழங்கும் திட்டம் 12 மாநிலங்களில் அமலில் இருந்தது.
  • தொடக்கக்கல்வி ஊட்டச்சத்து ஆதரவு வழங்கும் தேசிய திட்டம் (NP-NSPE) 1995 ஆம் ஆண்டு 15 ஆம் தேதியன்று மத்திய அரசின் திட்டமாகத் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் நாட்டின் பல பகுதிகளிலும் இருந்த 2408 ஒன்றியங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. 1997-98 ஆம் ஆண்டிற்குள், நாட்டின் எல்லா ஊராட்சி ஒன்றியப் பகுதிகளிலும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. 
  • அரசுப்பள்ளிகள் அரசின் நிதிஉதவிபெறும் பள்ளிகள், உள்ளாட்சி நிருவாகங்கள் நடத்தும் பள்ளிகள் ஆகியவற்றில் மட்டும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்குச் செயல்படுத்தப்பட்ட இந்தத் திட்டம் 2002 ஆம் ஆண்டில் கல்வி உறுதிப்பாடு திட்டம் (EGS) மாற்று மற்றும் புத்தாக்கக்கல்வி திட்டம் (AIE) ஆகியவற்றின் கீழ் பயிலும் மாணவர்களுக்கும் விரிவாக்கப்பட்டது. 
  • மத்திய அரசின் இந்தத்திட்டப்படி, ஒவ்வொரு மாணவருக்கும் தினந்தோறும் நூறுகிராம் தானியம் என்ற கணக்கில் உணவுப்பொருள்கள் வழங்கப்பட்டு, பள்ளிகளுக்கு உணவு தானியங்களை எடுத்துச் செல்லுவதற்கும் குவிண்டால் ஒன்றுக்கு ஐம்பது ருபாய் உதவிப் பணமும் வழங்கப்பட்டது.
  • 2004 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், தானியமாக வழங்குவதற்கு பதிலாக 300 கலோரிகள் சத்துள்ள உணவாக வழங்கும் படி திட்டம் மாற்றியமைக்கப்பட்டது. மேலும் எட்டு முதல் பன்னிரண்டு கிராம் புரதச்சத்தும் கிடைக்க வகை செய்யப்பட்டது.
  • 2007 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இத்திட்டம் நடுநிலைப் பள்ளி மாணவரக்ளுக்கும், அதாவது ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயில்பவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. அதனால் கல்விரீதியாகப் பின்தங்கிய 3479 ஒன்றியங்கள் கண்டறியப்பட்டு, அவற்றில் பயின்ற சுமார் ஒருகோடியே எழுபது லட்சம் நடுநிலைப்பள்ளி மாணவரகளுக்குப் பயன்கிட்டியது. 
  • 2008 ஏப்ரல் முதல் தேதியிலிருந்து, நாட்டில் உள்ள அனைத்து அரசுப்பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், உள்ளாட்சி நிருவாகங்கள் நடத்தும் பள்ளிகள், அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் ஆதரவு பெறுகின்ற மதராஸாக்கள், மக்தாபுகள், கல்வி உறுதிப்பாடுத் திட்ட மாணவர்கள் (EGS), மாற்று மற்றும் புத்தாக்கக் கல்வித் திட்ட மாணவர்கள் என அனைத்து பிரிவிலும் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இத்திட்டம் நீட்டிக்கப்பட்டது. நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவில் 700 கலோரிகளும், 20 கிராம் புரதச் சத்தும் இருக்க வேண்டும் என்று நிர்ணயித்து நாளொன்றுக்கு ஒரு மாணவருக்கு 150 கிராம் உணவு தானியம் வழங்கப்பட்டது.
  • பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்து உறுதிப்பாட்டிற்கான இந்த மதிய உணவுத்திட்டம் 2009 ஆம் ஆண்டு முதல் கீழ்க்கண்ட மாற்றங்களுடன் மேலும் செம்மையாக்கப்பட்டது.நடுநிலைப் பள்ளிக்கு மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டிய ஊட்டச்சத்து அளவுகள் பருப்பு வகை 30 கிராம், காய்கறிகள் 65-75 கிராம், எண்ணெய்/கொழுப்பு 7.5 கிராம் என்று நிர்ணயிக்கப்பட்டது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel