- மத்திய அரசு 2007-08ஆம் ஆண்டு முதல் உயர்தர கல்வி நிறுவனங்களில் பயிலும் ஆதிதிராவிடர் / பழங்குடியின மாணவர்களுக்கு “மத்திய அரசு உயர்தரக் கல்வி திட்டத்தின்” (Central Sector Scholrahsip Sheme of Top-Class Education for Adi-Dravidars /Tribes) கீழ் தமிழ்நாட்டில் பொறியியல், மேலாண்மை, மருத்துவம், சட்டம் மற்றும் விமான ஓட்டுனர் பயிற்சி போன்ற படிப்புகளை நடத்தும் 6 உயர்தர கல்வி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
- இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் +2 படிப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்று உயர்தர கல்வி நிறுவனங்களில் பயிலும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் மாணவர்களின் கல்வித் திறனை உயர்த்துவது ஆகும்.
- தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு அவர்கள் பயிலும் கல்வி நிறுவனத்திற்குச் செலுத்தவேண்டிய கல்விக் கட்டணம், திரும்பப் பெறமுடியாத கட்டணங்கள், புத்தகங்கள் மற்றும் கணினி ஆகியவற்றிற்காக ஏற்படும் செலவுத் தொகையை அந்தந்த நிறுவனங்களுக்கு மத்திய அரசு நேரடியாக அளித்து வருகிறது.
மத்திய அரசு உயர்தரக் கல்வி திட்டம்
November 30, 2018
0