- பெண் குழந்தைக் கல்வியை மேம்படுத்த உதான் திட்டம் தொடங்கப் பட்டுள்ளது. பள்ளிக் கல்வி மற்றும் பொறியியல் நுழைவுத் தேர்வுகளிடையே கற்பித்தல் இடைவெளியை போக்குவது உதான் திட்டத்தின் நோக்கமாகும்.
- ஷலா தர்பான் என்ற திட்டம் கைப்பேசி தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது. பெற்றோர் பள்ளிகளுடன் தொடர்பு கொண்டு தங்கள் குழந்தைகளின் முன்னேற்றத்தை கண்காணிக்க இது உதவிகரமாக உள்ளது.
உன்னாத் பாரத் அபியான்
- உயர் கல்வி நிறுவனங்கள் கிராமப் பகுதி மக்களுடன் கலந்துரையாடி அவர்களின் பிரச்சனைகளை கண்டறிந்து அவற்றுக்கு தீர்வு காண்பது உன்னாட் பாரத் அபியான் இயக்கத்தின் முக்கிய பணியாகும். இந்திய கிராமங்களின் மேம்பாட்டுக்கு அரசு மற்றும் பொது, தனியார் நிறுவனங்கள் உதவுவதற்கான இயக்கமாகவும் இது விளங்கும்.
இஸ்ஸான் விகாஸ்
- வடகிழக்கு மாநில பள்ளிக் குழந்தைகளும், பொறியியல் கல்லூரி மாணவர்களும் தங்கள் விடுமுறையின் போது இந்திய தொழில்நுட்பக் கழகம், தேசிய தொழில்நுட்பக் கழகம் ஆகியவற்றுடன் நெருக்கமான தொடர்பு கொள்ள இத்திட்டம் வழி வகுக்கிறது. இதில் பள்ளிக் குழந்தைகள் 10 நாட்கள் ஒரு கல்வி நிறுவனத்திற்கு சென்று வர ஏற்பாடு செய்யப்படுகிறது.
- திட்டம் மற்றும் கட்டடக் கலையின் 3 பள்ளிகளையும் திட்டம் மற்றும் கட்டடக்கலைப் பள்ளி சட்ட முன்வரைவு, 2014ன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது தொடர்பான சட்ட முன்வரைவை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 29.10.2014 அன்று நடைபெற்ற நடுவண் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- இந்த சட்ட முன்வரைவு கடந்த குளிர்காலக் கூட்டத் தொடரில் நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. அது 22.01.2015 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
- இந்தச் சட்டம் இயற்றப்பட்டதன் மூலம் 2012 முதல் பட்டத்துக்காக காத்திருந்த போபால் மற்றும் விஜயவாடா திட்ட மற்றும் கட்டடக்கலை பள்ளி பட்டதாரிகள் 400 பேர் பட்டம் பெற வழி ஏற்பட்டது. நகர மயமாதல் மற்றும் தொழில் மயமாதல் சூழ்நிலை அதிகரித்துவரும் நிலையில் தேசிய மற்றும் பன்னாட்டு திட்ட தரத்திற்கு இணையாக திட்டம் வகுக்க இந்தச் சட்டம் உதவிகரமாக உள்ளது.
சக்ஷம் கல்வி உதவித்தொகைத் திட்டம்
- மாற்றுத்திறனாளிகள் தொழில்நுட்பக் கல்வி பெற அகில இந்திய தொழில் நுட்பக்கழகம் சக்ஷம் கல்வி உதவித்தொகை திட்டத்தை செயல்படுத்து கிறது. இதன் மூலம் ஆண்டில் ஆயிரம் பேருக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.