- மத்திய அரசு சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தி மாணவர்கள் மூலம் செயல்படுத்த ஏதுவாக பள்ளித் தோட்டத்திட்டத்தை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் தொடக்கி வைத்தார்.
- இந்தியாவில், இத்திட்டம் முதலாம் ஆண்டு தொடக்கத்தில் ஆயிரம் பள்ளிகளிலும் மூன்றாம் ஆண்டு முடிவில் நாடெங்கிலும் உள்ள மற்ற அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தும் நோக்கில் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
நோக்கம்
- உலகின் மாசுபடும்விகிதம் நாளுக்குநாள் அதிகரித்துவருவதை தடுப்பதற்கான முதல்வழி காடுவளர்ப்பதுதான். எனவே, மாணவர்களை இயற்கைக்கு நெருக்கமானவர்களாக உணரச்செய்வது முக்கியமென உணர்ந்து மத்திய அரசு சுற்றுச்சூழலுக்கு இணக்கமான இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
- இத்திட்டத்தின்கீழ், பள்ளியானது தனது வளாகத்துக்குள் தோட்டத்தை ஏற்படுத்தும். அத்தோட்டத்தில் தங்கள் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக மாணவர்கள் மரக்கன்றுகளை வளர்க்கவேண்டும். சுற்றுச்சூழலை தூய்மையாகவும் பசுமையாகவும் வைத்துக்கொள்வதன் மூலம் நாட்டை வாழ்வதற்கு உகந்த இடமாக மாற்றுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.