Type Here to Get Search Results !

இலவச கட்டாய கல்வி சட்டம்

கட்டாயக் கல்வி
  • 6 முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தை களுக்கும் கல்வி அளிக்கும் வகையில் மத்திய அரசு கடந்த 2009-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலவச - கட்டாய கல்வி சட்டத்தை கொண்டுவந்தது. 
  • இந்தச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை, ஆசிரியர் நியமனம், பள்ளிகளுக்கு அங்கீகாரம், ஆசிரியர்- மாணவர் விகிதாச்சாரம், பள்ளி வளர்ச்சி, கல்வி மேம்பாடு உள்பட பல்வேறு இனங்களில் புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டன. அதன்படி, தனியார் பள்ளிகள் அருகே வசிக்கும் ஏழை மாணவர்கள், சமூகத்தில் நலிலிந்த பிரிவினர் ஆகியோருக்கு 25 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும்.
  • அவர்களுக்கான கட்டணத்தை அரசே செலுத்திவிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எல்.கே.ஜி. உள்பட கீழ்நிலை வகுப்புகளில் மாணவர்களை சேர்க்க நுழைவுத் தேர்வு நடத்தக்கூடாது. எட்டாம் வகுப்பு வரை எந்த குழந்தையையும் ஃபெயில் ஆக்கக்கூடாது. அவர்களை அடிக்கக்கூடாது. மனரீதியாக துன்புறுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் மத்திய அரசு கொண்டுவந்த இலவச, கட்டாய கல்வி சட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
முக்கியத்துவம்
  • குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாய ஆரம்பக் கல்விக்கான உரிமைச் சட்டம், 2009 [Right of Children to Free and Compulsory Education – (RTE) Act 2009] நிறைவேற்றப்பட்டிருப்பது, இந்திய குழந்தைகளுக்கு வரலாற்று சிறப்புமிக்க தருணமாகும். 
  • குடும்பங்கள் மற்றும் சமுதாயத்தின் உதவியுடன், ஒவ்வொரு குழந்தையும் தங்கள் உரிமையான தரமான ஆரம்பக் கல்வி பெறுவதை அரசு உறுதி செய்வதற்கு, இது ஒரு துவக்கத்தை அளித்துள்ளது. உலகிலுள்ள ஒருசில நாடுகளில் மட்டுமே இவ்வாறான, குழந்தைகளை மையப்படுத்திய மற்றும் அவர்கள் விரும்பும் வகையிலான இலவச கல்வி பெற, தேச அளவிலான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கல்வி உரிமைச் சட்டத்தை மீறினால்
  • இச்சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளைப் பாதுகாக்கத் தேவைப்படும் ஆய்வுகளைச் செய்வதற்கும், புகார்களை விசாரிப்பதற்கும், குழந்தை உரிமைகளை பாதுகாப்பதற்கான தேசிய கமிஷனுக்கு (The National Commission for the Protection of Child Rights), வழக்குகளை விசாரிக்க ஒரு குடிமை நீதிமன்றத்திற்கு அளிக்கப்படும் அனைத்து அதிகாரங்களும் வழங்கப் பட்டுள்ளது. 
  • ஒவ்வொரு மாநிலமும் குழந்தை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான மாநில கமிஷன்கள் (State Commission for the Protection of Child Rights - SCPCR) அல்லது கல்வி உரிமைப் பாதுகாப்பு ஆணையங்களை (Right to Education Protection Authority - REPA) அமைந்துள்ளது. 
  • குறைகள் பற்றி மனு அளிக்க விரும்பும் எவரும், உள்ளூர் அதிகாரிகளிடம் எழுத்து மூலமான புகார் அளிக்கலாம். குழந்தை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான மாநில கமிஷன்கள் (State Commission for the Protection of Child Rights - SCPCR) அல்லது கல்வி உரிமை பாதுகாப்பு ஆணையங்களால் மேல்முறையீடுகள் மீது முடிவுகள் எடுக்கப்படும். 
  • அவற்றால் வழங்கப்படும் தண்டனைகளை நிறைவேற்ற, மாநில அரசின் நியமனம் பெற்ற அதிகாரியின் ஒப்புதல் தேவைப்படும்.
இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டத்தின் பிரிவு 13
  • எந்தப் பள்ளியோ அல்லது தனிநபரோ, குழந்தையின் பள்ளிச் சேர்க்கையின் போது, அதன் பெற்றோர் அல்லது பாதுகாப்பாளரிடமிருந்து தலைக் கட்டணம்  வசூலிலிப்பதோ அல்லது முன்தேர்வு முறைக்கு உட்படுத்துதலோ கூடாது. உட்பிரிவு (1) க்கு புறம்பாக, தலைக்கட்டணம் வாங்கும் பள்ளிகள் மற்றும் தனி நபர்களுக்கு வசூலிலிக்கப்பட்ட கட்டணத்தைவிட பத்து மடங்கு வரை அபராதம் விதிக்கப்படும். 
  • குழந்தைகளை பள்ளியில் அனுமதிப்பதற்கு முன் தேர்வு முறைக்கு உட்படுத்தினால், முதல் தடவையாக மீறும் பொழுது ரூ 25,000/- வரையிலும், தொடர்ந்து மீறும் ஒவ்வொரு முறையும் ரூ 50,000/- வரையிலும் அபராதம் விதிக்கப் படும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel