ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-4 (குரூப் - 4), 2015-2016, 2016-2017 மற்றும் 2017 - 2018-ஆம் ஆண்டுகளுக்கான குரூப் 4 பிரிவில் விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு பயன் அளிக்கு வகையில் டிஎன்பிஎஸ்சி இதுவரை நடத்திய தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான வினா - விடைகள் இந்த தொடர்களில் தலைப்பு வாரியாக தொகுத்து வழங்குகிறோம். விண்ணப்பித்துள்ளோர் படித்து பயன்பெறலாம்.
சரியான பொருளைத் தேர்வு செய்தல்:
- வேழம், சிந்துரம், கரி, வாரணம், களபம் - யானை
- கடகரி - மதயானை
- புரி, இவுளி, வயமா, வாரணம் - குதிரை
- அரி, மடங்கல், ஏறு - சிங்கம்
- தீபு - புலி
- இகல் - போர்
- இகல் - பகை
- எழில் - அழகு
- அவலம், ஊறு, இடர், வாதை - துன்பம்
- ஏதம் - குற்றம்
- ஏதம் - கேடு
- புரை, கோது, மது- குற்றம்
- பிணி - நோய்
- பகை - செற்றம்
- வசை - குற்றம்
- ஏமம் - காவலம்
- புடர் - துயரம்
- இன்னா - துன்பம்
- உற்றுழி - துன்புறுகாலம்
- வன்மை - தீராப்பகை
- இன்மை, நல்குரவு - வறுமை
- தீனம் - நடப்பு
- நிந்தை - இகழ்ச்சி
- சினம் - கோபம்
- இரவி - சூரியன்
- கனகம் - தங்கம்
- கலிழி - கலங்கல்
- ஒவம் - ஒவியம்
- வாகை - வெற்றி
- மள்ளர் - வீரர்
- தொடை - மாலை
- வெற்பு, நகம், கிரி, வரை - மலை
- முனிவு - வெறுப்பு
- இடங்கல் - முதலை
- மடங்கல் - சிங்கம்
- கடகரி - மதயானை
- பாந்தன் - பாம்பு
- சுரும்பு - வண்டு
- மந்தி - பெண்குரங்கு
- கடுவன் - ஆண் குரங்கு
- பிணை - பெண் மான்
- நுணல் - தவளை
- மறி - மான் கன்று
- மரை - மான்
- தளை - விலங்கு
- கயல் - மீன்
- புள் - பறவை
- மதுரகம் - தேனீ
- கிள்ளை - கிளி
- குருகு - அன்னப்பறவை
- களியானை - மதம் கொண்ட யானை
- பிடி - பெண் யானை
- ஞிமிறு - வண்டு, தேனீ
- ஞமலி - நாய்
- எகினம் - நாய், புளியரம்
- கிலி - அச்சம், பயம்
- மஞ்சு, கொண்டல் - மேகம்
- பெயல் - மழை
- கால் - காற்று
- அனிலன் - காற்று
- வாரிதி - கடல்
- வளி - காற்று
- மாரன் - மன்மதன்
- குருகு - அன்னப்பறவை
- கொழுநன் - கணவன்
- அங்கன் - அழகிய இடம்
- நாண் -அம்பு
- மந்தா நிலம் - தென்றல்
- பங்கயம் - தாமரை
- பதுமம் - தாமரை
- என்பு - எலும்பு
- வடு - தழும்பு
- பொறை - பொறுத்தல்
- முனிவு - சினம்
- கருமம் - செயல்
- நிரல் - வரிசை
- மாசு - குற்றம்
- மறு - களங்கம்
- கிரணம் - ஒளிக்கதிர்
- காணம் - பொற்காசு
- அரவும், - ஒலி, பாம்பு
- ஈகம் - தியாகம்
- நலிவு - கேடு
- அதர் - வழி
- குருசு - சிலுவை
- கன்னல் - கரும்பு
- வேய் - மூங்கில், ஒற்று
- கவை - கிளை
- புனல் - ஆறு, நீர்
- ஆழில் - கடல், சக்கரம்
- எழிலி - மேகம்
- கவின் - அழகு
- கவரி - சாமரம்
- கப்பிய - கவிழ்ந்த
- நீள் வானம் - நீண்ட வானம்
- ஞானலம், புவனம் - உலகம்
- விசும்பு - ஆகாயம்
- சவை - சபை
- உரவு - வலிமை
- சிந்தை - மனம்
- பூவை - பெண்
- மருப்பு - கொம்பு
- மாறன் வழுதி - பாண்டியன்
- திருவினாள் - திருமகள்
- கிளை - உறவினர்
- பொதும்பர் - சோலை
- கபம் - கோழை
- திரு - செல்வம்
- மதலை - குழந்தை
- அவா - பேராசை
- சித்தம் - மனம்
- சீர் - செல்வம், சிற்பு
- தொழும்பர் - தொண்டர்
- அவதூறு - பழிச்சொல்
- நோன்மை - தவம்
- நொயமை - மென்ணை
- தொய்பு - இளைப்பு
- யாக்கை - உடம்பு
- தேறல் - தேன்
- விழுப்பம் - பெருமை
- குழவி - குழந்தை
- புயம் - தோள்
- தாதை - தந்தை
- வேணி - சடை
- ஊன் - உணவு
- ஊண் - இறைச்சி
- நுதல் - நெற்றி
- அல் - இரவு
- ஆகடியம் - ஏளனம்
- விபுதர் - புலவர்
- மன்னர் - வீரர்
- அரி - திருமால், வெட்டு
- நா - நாக்கு
- உடைமை - செல்வம்
- பொலம் - அழகு
- வீறு - பெருமை
- எயிறு - பல்
- மோலி - முடி
- சோரன் - திருடன்
- உவகை - மகிழ்ச்சி
- நேயம் - அன்பு
- அல் - இரவு
- புனல் - நீர்
- செந்தண்மை - இரக்கம்
- அகவை - வயது
- கமழ்தல் - மணம் வீசுதல்
- மிசைந்திட - உயர்வாக
- ஆதவன் - சூரியன்
- மகபதி -இந்திரன்
- உம்பரார்பதி - இந்திரன்
- கனலி - ஞாயிறு (சூரியன்)
- கோயில் - அரண்மனை
- வேந்தன் - அரசன்
- கோன் - மன்னன்
- வளி - காற்று
- அந்தி - மாலை
- விண்மீன் - நட்சத்திரம்
- உடுக்கை - ஆடை
- நீத்தும் - வெள்ளம்
- மருட்சி - மிரலுதல்
- உறு - மிகுதி
- தருக்கு - செருக்கு
- சாமரை - விசிறி
- நறை - தேன்
- திங்கள் - மாதம்
- யாமம் - நள்ளிரவு
- படி - நிலம்
- கூலம் - நவதானியம்
- சுகந்தம் - வாசனை
- ஆகம் - உடம்பு
- குடகு - மேற்கு
- அகழ்தல் - தோண்டுதல்
- கல்லி - தோண்டி
- மருகுவோம் - பருகுவோம்
- இகல் - பகை
- நகம் - மலை
- கெந்தம் - பற்கள்
- நண்ணுகின்றவர் - நெடுங்குகின்றவர்
- சட்டம் - தொகுதி
- ஈட்டிய - சம்பாதித்த
- அருந்த - குடிக்க
- இயையாறு - ஆடாகாது
- திடல் - திறந்தவெளி
- இல்லம் - வீடு
- மன்பதை - மக்கள் பரப்பு
- கெந்தம் - பற்கள்
- சாந்தம் - அமைதி
- ஈதல் - கொடுத்தல்
- நோன்பு - விரதம்
- எழில் - அழகு
- ஆண்மை - வீரம்
- உழி - இடம்
- மார்க்கம் - வழி
- ஈகை - கொடுத்தல்
- வெகுளி - கோபம்
- அழல் - நெருப்பு
- ஆன்ற - சிறந்த
- தெரிந்து - தேர்ந்தெடுத்து
- கைமாறு - பதில் உதவி
- நிரல் - வரிசை
- கெய்து - பறித்து
- அரை - இடுப்பு
- அண்மை - அருகில்
- சின்னம் - அடையாளம்
- முகாம் - பாசறை
- கலம் - கப்பல்
- நாவாய் - படகு
- கோடிகம் - ஆடை
- மரவுரி - மரப்பட்டையால் ஆன உடை
- மதகு - நீர்தேக்கப்பட்டுக் கட்டப்பட்டிருக்கும் இடம்
- கிடுகு - பாய்போல் பின்னிய தென்னங்கிற்று
- கறவை - பால் தரம் பசு
- விட்டம் - வட்டத்தின் குறுக்களவு
- நானிலம் - உலகம்
- முண்டக மலரோன் - பிரம்மா
- குரம்பு - வயல்வரம்பு
- பாசடை - புசுமையான இலை
- மதுரை நாயகன் - சிவபெருமான்
- மாயோன் - திருமால்
- கனியிசைக் கிழவன் - பாணபத்திரன்
- வேறல் - வெற்றி பெறுதல்
- திரை - அலை
- சென்னீர் - செல்கின்ற நீர்
- கவல்கின்றான் - வருந்துகின்றான்
- உழந்தும் - வருந்தியும்
- ஆகுலன் - வீன் ஆரவாரம்
- அரம்பை - வாழை
- புயல் - மேகம்
- திறம்புவதில்லை - மாறுவதில்லை
- உழவு - முரசு
- கேணி - கிணறு
- தொழுப - வணங்குபவர்
- ஒம்புதல் - பாதுகாத்தல்
- தீங்கனி - இனிய பழம்
- எறு - உரம்
- ஒள்ளியன் - மேன்மை உள்ளவன்
- கால் - காற்று
- கொண்டல் - மேகம்
- மஞ்சு - மேகம்
- நீதகம் - வெள்ளம்
- கமலம் - தாமரை
- பந்தனை - ஆசை
- பக்கணம் - தின் பண்டம்
- அணியம் - நெருக்கம்
- புல்லியர் - அறிவில்லாதவர்
- அந்தகன் - பிறவிக்குருடன்
- மெளலி - முடி, சடைமுடி
- பிடறு - கழுத்து
- பஃறி - படகு, ஒடம்
- பெளவம் - கடல், உப்பு
- துறக்கம் - தேவலோகம்