Type Here to Get Search Results !

TNPSC VAO GROUP 4 ONLINE TEST 9 ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கான வினா-விடை - 9

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-4 (குரூப் - 4), 2015-2016, 2016-2017 மற்றும் 2017 - 2018-ஆம் ஆண்டுகளுக்கான குரூப் 4 பிரிவில் விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு பயன் அளிக்கு வகையில் டிஎன்பிஎஸ்சி இதுவரை நடத்திய தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான வினா - விடைகள் இந்த தொடர்களில் தலைப்பு வாரியாக தொகுத்து வழங்குகிறோம். விண்ணப்பித்துள்ளோர் படித்து பயன்பெறலாம்.

UNIT - VIII :  History, Culture, Heritage and Socio – Political Movements in Tamil Nadu
(POTHU TAMIL STUDY MATERIAL PDF)


* விற்பூட்டுப்பொருள் கோளை பூட்டுவிற் பொருள்கோள் எனவும் கூறுவர்.
* ஊஞ்சல் கயிறு போல முன்னும் பின்னுமாகப் பொருள் கொள்வது தாப்பிசை பொருள்கோள் ஆகும்.
* தாப்பிசை என்பதும் தாம்பு இசை எனப் பிரியும். (தாம்பு ஊஞ்சல் கயிறு)
* செய்யுளின் ஈற்றபியைப் பாடலின் பாடலின் முதலில் கொண்டு பொருள் கொள்ளுதல் அளைமறிபாப்புப் பொருள்கோள் ஆகும். (அளை-புற்று, பாப்பு-பாம்பு)
* செய்யுளின் முதலில் அமைந்துள்ள சொல்லும், இறுதியில் அமைந்துள்ள சொல்லும் பொருள்படப் பொருத்துவது - பூட்டுவிற் பொருள்கோள் ஆகும்.
* பல அடிகளிலும் உள்ள சொற்களை மாற்றிப் பொருள் கொள்வது கொண்டு கூட்டுப் பொருள்கோள் ஆகும்.
* செய்யுள் அடிகளை முன் பின்னாக மாற்றினாலும் பொருளும் ஓசையும் சிதையாமல் வருவது அடிமறிமாற்றுப் பொருள்கோள்.
* உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும் என்பதற்கு சான்று பந்து ஆட்டம் (பந்தாட்டம்)
* டகர, ரகரக் குற்றியலுகரப் புணர்ச்சிக்குச் சான்று காடு கோழி, ஆறு பாலம்
* மொழி மூவகைப்படும். ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருவது தனி மொழி
* தொடர் மொழிக்கு சான்று படம் பார்த்தான்.
* தனி மொழிக்கும், தொடர் மொழிக்கும் பொதுவாய் அமைவது பொதுமொழி
* வினைமுற்று(முற்றுவினை) இரு வகைப்படும்.
* "செய்பவன் கருவி நிலம் செயல் காலம்
செய்பவன் ஆறும் தருவது வினையே" - இதில் "வினையே" என்பது தெரிநிலை வினைமுற்றை உணர்த்தும்.
* வினைமுற்றின் விகுதி குறைந்து நிற்கும் சொல் எச்சம். எச்சம் இரு வகைப்படும்.
* ஓர் எச்சவினை பெயரைக் கொண்டு முடிந்தால் அது பெயரெச்சம் எனப்படும்.
* பெயரெச்சம் கால வகையில் மூன்று வகைப்படும்.
* பெயரெச்ச வாய்ப்பாடுகள் செய்த, செய்கின்ற, செய்யும்.
* முக்காலத்தையும் செயலையும் வெளிப்படையாகக் காட்டும் பெயரெச்சம், தெரிநிலைப் பெயரெச்சம்(வந்த பையன்)
* பண்பினை மட்டும் உணர்த்தி பெயர்ச்சொல்லைக் கொண்டு முடியும் எச்சம் குறிப்புப் பெயரெச்சம்(நல்ல பையன்)
* ஓச்ச எச்சவினை, வினையைக் கொண்டு முடிந்தால் அது வினையெச்சம் எனப்படும் (படித்து வந்தான்)
* வினையெச்சம் இருவகைப்படும். காலவகையால் மூவகை.
* மடித்து வந்தான் - இறந்தகால வினையெச்சம்
* படித்து வருகிறான் - நிகழ்கால வினையெச்சம்
* படித்து வருவான் - எதிர்கால வினையெச்சம்
* காலத்தையும், செயலையும் உணர்த்தி வினைமுற்றைக் கொண்டு முடியும் எச்சவினை தெரிநிலை வினையெச்சம்(படித்துத் தேறினான்)
* காலத்தை வெளிப்படையாக உணர்த்தாமல் பண்பினை உணர்த்தி நின்று வினைமுற்றைக் கொண்டு முடியும் எச்சம் குறிப்பு வினையெச்சம்(மெல்ல பேசினான்)
* ஒரு வினைமுற்றுச் சொல் எச்சப்பொருளில் வந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது முற்றெச்சம்.
* ஒரு பொதுச்சொல் முன்பின் சேர்ந்து வரும் சொல்லின் குறிப்பால் ஒரு பாலை நீக்கி மற்றொரு பாலைச் சுட்டுவது ஒன்றொழி பொதுச்சொல் என்பது பெயர். (வீட்டின் முன் ஐவர் கோலமிட்டனர்)
* ஒரு சொல் தன் பொருளையும் குறித்துத் தனக்கு இனமான பொருளையும் குறித்து வருவது இனங்குறித்தல் எனப்படும். (வெற்றிலை தின்றாள்)
* ஒரு சொல் இரண்டு, மூன்று, நான்குமுறை அடுக்கி வருவது அடுக்குத்தொடர் எனப்படும்.
* இரட்டைக்கிளவி இரட்டிற் பிரிந்தியைசா நன்னூல்
* இசை, குறிப்பு, பண்பு பற்றி வருவது இரட்டைக்கிளவி
* விரைவு, அச்சம், வெகுளி, மகிழ்ச்சி பற்றி வருவது அடுக்குத் தொடர்.
* இளவழகன் வந்தான் இது வெளிப்படை தொடர்.
* மாடு என்னும் சொல் அஃறினைப் பொதுப்பெயர் ஆகும்.
* மாடு கன்றை ஈன்றது இத்தொடரில் மாடு என்பது பசுவைக் குறிக்கும். மாடு பால் கறந்தது என்பது குறிப்புச் சொல்.
* வினா ஆறு வகைப்படும்.
* திருக்குறளை இயற்றியவர் யார்? என ஆசிரியர் கேட்பது அறிவினா
* நன்னூலை இயற்றியவர் யார்? மாணவர் ஆசிரியரைக் கேட்பது அறியாவினா
* பாம்போ? கயிறோ? - ஐயவினா
* பருப்பு உள்ளதா? என வணிகர்களிடம் கேட்பது கொளல்வினா
* மாணவர்களே! உங்களுக்குச் சீருடை இல்லையோ? - கொடைவினா
* முருகா சாப்பிட்டாயா? - ஏவல்வினா
* வினாவிற்கு ஏற்பட விடையளிப்பதுதான் மொழி நடையின் சிறப்பு
* விடை எட்டு வகைப்படும்.(இறை, செப்பு, பதில் என்பன விடையின் வேறு பெயர்கள்)
* இது செய்வாயா? எனில் செய்யேன் எனபது மறைவிடை
* இது செய்வாயா? எனில் செய்வேன் என்பது நேர்விடை
* இது செய்வாயா? எனில் நீயே செய் என்பது ஏவல்விடை
* இது செல்வாயா? எனில் செய்யாமல் இருப்பேனோ என்பது வினாஎதிர் வினாதல் விடை
* இது செய்வாயா? எனில் உடம்பு நொந்தது என்பது உற்றுதுரைத்தல்
* இது செய்வாயா? எனில் கை வலிக்கும் என்பது உறுவது கூறல் விடை
* ஆடுவாயா? எனில் பாடுவேன் என்பது இனமொழி விடை
* ஒரு பொருள் குறித்து வரும் சொற்களையே ஒருபொருட் பன்மொழி
* ஒரு பொருட் பன்மொழிக்கு சான்று நடுமையம்
* தேன் போன்ற மொழி என்பது விரியுவமை. தேன்மொழி - தொகை உவமை
* ஒரு பொருள்ளை அதனை விடச் சிறந்த மற்றொரு பொருளோடு ஒப்பிட்டுக் கூறுவது உவமை எனப்படும்.
* உவமானத்தையும், உவமேயத்தையும் வேறுப்படுத்தாது. இரண்டும் ஒன்றே என்பது உருவகம்.
* வடக்கு என்னும் திசை பெயரோடு பிற திசைகள் வந்து சேரும்போது நிலைமொழி ஆறும் மெய்யும் நீங்கும்.
* மேற்கு நாடு என்பது மேனாடு எனச் சேரும்.
* கருமை குழி என்பது ஈறுபோதல், இனமிகல் எனும் விதிகளின்படி புணரும்.
* அடிஅகரம் ஐ ஆதல் - பைங்கூழ்
* ஆதி நீடல் - மூதூர்
* இனமிகல் கரும்பலகை, தன்னொற்றிரட்டல் வெற்றிலை
* மரம் அடி என்பது மரவடி எனச் சேரும்.
* வட்டக்கல் என்பது மகர ஈற்றுப் புணர்ச்சி
* பொருள் என்பது ஒழுக்கமுறை பொருள் இலக்கணம் இரு வகைப்படும்.
* அன்புடைய தலைவன், தலைவி பற்றிய ஒழுக்கத்தினை கூறுவது அகத்தினை எனப்படும். அகத்தினை ஏழு வகைப்படும்.
* அகப்பொருளுக்குரிய பொருள்கள் மூன்று
* நிலமும் பொழுதும் முதற்பொருள் எனப்படும்.
* அகம், புறம் ஆகிய இரண்டும் பொருள் இலக்கணம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel