தினமணி டிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை 2016
இராசராச சோழனின் வில், வாள், முரசு, கொடி, குடை குறித்து கூறப்படுபவை:வில் - இந்திரனை வென்றது, பெருங்கடலை வற்றச் செய்தது.
வாள் - சோழ நாட்டிற்குக் காவிரி செல்ல மலையை வெட்டி வழி
அமைத்தது. வானத்தில் அசைந்த நகரத்தை அழித்தது.
முரசு - சேரனை வென்று பெற்ற கடப்பமரத்தால் செய்யப்பட்டது. காவிரிக்கு அணைகட்ட பகைவரை மண் சுமக்கச் செய்தது.
கொடி - மேருமலையை வலம் வந்தது. இந்திரனைப் புலியாகக் கொண்டது.
குடை - மக்களைக் காப்பதற்கு அண்ட கூடத்தை ஒத்து நின்றது.
வாக்கியப்பிழைகளைத் திருத்துதல்:
பிழை: வண்டிகள் ஓடாது
திருத்தம்: வண்டிகள் ஓடா
பிழை: அவை இங்கே உளது
திருத்தம்: அவை இங்கே உள
பிழை: அது எல்லாம்
திருத்தம்: அவை எல்லாம்
பிழை: மக்கள் கிடையாது
திருத்தம்: மக்கள் இல்லை
பிழை: வருவதும்போவதும் கிடையாது
திருத்தம்: வருவதும் போவதும் கிடையா
பிழை: ஒன்றோ அல்லது இரண்டோ தருக
திருத்தம்: ஒன்றோ இரண்டோ தருக
பிழை: சென்னை என்ற நகரம்
திருத்தம்: சென்னை என்னும் நகரம்
பிழை: எனது மகன்
திருத்தம்: என் மகன்
பிழை: ஏற்கத் தக்கது அல்ல
திருத்தம்: ஏற்கத் தக்கது அன்று
பிழை: அவளது தந்தை
திருத்தம்: அவள் தந்தை
பிழை: புலி வந்தன
திருத்தம்: புலி வந்தது
பிழை: எருதுகள் ஓடியது
திருத்தம்: எருதுகள் ஓடின
பிழை: பூக்கள் மலர்ந்து மணம் வீசியது
திருத்தம்: பூக்கள் மலர்ந்து மணம் வீசின
பிழை: இங்குள்ளது எல்லாம் நல்ல பழங்களே
திருத்தம்: இங்குள்ளவை எல்லாம் நல்ல பழங்களே
பிழை: எனக்குப் பல வீடுகள்உள
திருத்தம்: எனக்கு வீடுகள் பல உள்ளன
பிழை: இது பொது வழி அல்ல
திருத்தம்: இது பொது வழி அன்று
பிழை: விழாவில் பல அறிஞர் பேசினர்
திருத்தம்: விழாவில் அறிஞர்கள் பலர் பேசினர்
பிழை: தென்றல் மெல்ல வீசின
திருத்தம்: தென்றல் மெல்ல வீசியது
பிழை: வாகனத்தை இடது பக்கம் திருப்பாதே
திருத்தம்: வாகனத்தை இடப்பக்கம் திருப்பாதே
பிழை: பத்து பழங்களில் ஒரு பழமே நல்லன
திருத்தம்: பத்துப் பழங்களில் ஒரு பழமே நல்லது
பிழை: வலது பக்கச் சுவரில் எழுதாதே
திருத்தம்: வலப்பக்கச் சுவரில் எழுதாதே
பிழை: ஒவ்வொரு சிற்றூர்களிலும் ஊராட்சி உள்ளது.
திருத்தம்: ஒவ்வொரு சிற்றூரிலும் ஊராட்சி உள்ளது.
பிழை: மாணவர்கள் கல்வியறிவு ஒழுக்கத்திற் சிறந்து விளங்க வேண்டும்.
திருத்தம்: மாணவர்கள் கல்வியறிவிலும், ஒழுக்கத்திலும் சிறந்து விளங்க வேண்டும்.
பிழை: அவர் தான் கூறினார் இவர் தான் கூறினார் என்று பாராது எவர் தான் கூறினாலும் மெய்ப்பொருள் காண்க
திருத்தம்: அவர்தாம் கூறினார் இவர்தாம் கூறினார் என்று பாராது எவர்தாம் கூறினாலும் மெய்ப்பொருள் காண்க.
பிழை: நல்லவகைளும் கெட்டவைகளும் பத்திரிக்கைகளில் வெளியிடப்படுகின்றன.
திருத்தம்: நல்லனவும், கெட்டனவும் பத்திரிக்கைகளில் வெளியிடப்படுகின்றன.
பிழை: கண்ணன் முருகன் மற்றும்வேலன் வந்தனர்.
திருத்தம்: கண்ணன், முருகன், வேலன் ஆகியோர் வந்தனர்.
பிழை: சென்னைக்கு அருகாமையில் இருப்பது கன்னியாகுமரி அல்ல.
திருத்தம்: சென்னைக்கு அருகில் இருப்பது கன்னியாகுமரி அன்று.
பிழை: தலைவி தலைவனோடு சென்றார்
திருத்தம்: தலைவி தலைவனோடு சென்றாள்
பிழை: இதனைச் செய்தவர் இவரல்லவா?
திருத்தம்: இதனைச் செய்தவர் இவரல்லரோ?
பிழை: பெரியதும் சிறியதுமான சாமான்களைச் செய்கிறார்கள்.
திருத்தம்: பெரியனவும், சிறியனவுமான சாமான்களைச் செய்கிறார்கள்.
மரபு வழூஉச்சொற்களை நீக்கி எழுதுதல்
* காகம் கூவும், நாய் கத்தும்
- காகம் கரையும், நாய் குரைக்கும்
* காட்ல யானை கத்தியது, புலி கூவியது
- காட்டில் யானை பிளிறியது, புலி உறுமியது
* நீரின்றி நஞ்சையும், புஞ்சையும் விளையவில்லை
- நீரின்றி நன்செய்யும், புன்செய்யும் விளையவில்லை
* யானை மேய்ப்பனோடு ஆட்டுப் பாகனும் வந்தான்
- யானைப் பாகனோடு ஆட்டு இடையனும் வந்தான்
* கரும்புத் தோப்புக்கு அருகாமையில் நாய் கத்தியது
- கரும்புக் கொல்லைக்கு அருகில் நாய் குரைத்தது.
* மயில் கூவ, குயில் அகவ, கிளி பாடியது
- மயில் அகவ, குயில கூவ, கிளி பேசியது
* தேயிலைத்தோப்புக்கு அருகில் பலாத் தோட்டம் உள்ளது.
- தேயிலைத் தோட்டத்திற்கு அருகில் பலாத் தோப்பு உள்ளது.
* சோளக்காடு - ஆலங்கொல்லை
- சோளக் கொல்லை - ஆலங்காடு
* குதிரைத் தொழுவம் - யானை கொட்டில்
- குதிரைக்கொட்டில் - யானைக் கூடம்
* தோட்டத்தில் வாழைச்செடியும் மாஞ்செடியும் நட்டனர்.
- தோட்டத்தில் வாழைக் கன்றும், மாங்கன்றும் நட்டனர்.
கொச்சைச் சொற்களைத் திருத்தி எழுதுதல்
* அப்பிசி மாசம் அடமள இம்பாங்க
- ஐப்பசி மாதம் அடைமழை என்பார்கள்
* கோளி முட்டை தாவாரத்தில் உருண்டது.
- கோழி முட்டை தாழ்வாரத்தில் உருண்டது
* வெடியங்காட்டியும் வெத்திலை போடறது ஒரு பளக்கமா?
- விடிவதற்குள் வெற்றிலை போடுவது ஒரு பழக்கமா?
* ஒருத்தன் ஒண்டியாய்ப் போனால் அது ஊர்கோலமா?
- ஒருவன் ஒன்றியாய்ப் போனால் அது ஊர்வலம் ஆகுமா?
* கொடுத்த செய்தியைக் கோர்வைவயாய்ப் பேசு
- கொடுத்த செய்தியைக் கோவையாய்ப் பேசு
* சோறு தின்று, பழம் உண்டு,பால் சாப்பிட்டுப் படுத்தான்.
- சோறு உண்டு, பழம் தின்று, பால் பருகிப் படுத்தான்.
* ஆத்தங்கரையில் அஞ்சு காணி நஞ்சை நிலம் இருக்கு.
- ஆற்றங்கரையில் ஐந்து காணி நன்செய் நிலம் உள்ளது.
* வலது பக்கச் சுவற்றில் எழுதாதே
- வலப்பக்கச் சுவரில் எழுதாதே
* நஞ்சையும் புஞ்சையும் காஞ்சி போயின.
- நன்செய்யும் புன்செய்யும் காய்ந்து போயின.
* அண்ணாக் கயிறு அறுந்தது.
- அரைஞாண் கயிறு அறுந்தது.
பிறமொழிச் சொற்களை நீக்கி எழுதுதல்
* "ஸ்ரீ மான் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் நாம கரணத்தை இந்தக் கப்பலுக்குச் சூட்டுவதில் ஸந்தோஷமடைகிறேன்". என்றார் மூதறிஞர் இராஜாஜி.
* திருவாளர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் பெயரை இந்தக் கப்பலுக்குச் சூட்டுவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார் மூதறிஞர் இராசாசி.
* ‘டி.வி.யில் சீரியல் பார்க்காவிட்டால் லைஃபே போர் அடித்துவிடும்’ என்கிறாள் பாட்டி.
'தொலைக்காட்சியில் தொடர்களைப் பார்க்காவிட்டால் வாழ்க்கையே வெறுத்துவிடும்’ என்கிறாள் பாட்டி.
*இந்த செஞ்சுரி ‘டென்ஷன்’ நிறைந்தது.
இந்த நூற்றாண்டு மனஅழுத்தம் நிறைந்தது.
* ஸ்லிம்மாக இருப்பதே பியூட்டி என்ற எண்ணம் பரவி வருகிறது.
- உடல் மெலிவாக இருப்பதே அழகு என்ற எண்ணம் பரவி வருகிறது.
* நமஸ்காரம் என்று சாஸ்டாங்கமாக விழுந்தவனை ஆசிர்வதித்தேன்.
- வணக்கம் என்று நெடுஞ்சாண் கிடையாக விழுந்தவனை வாழ்த்தினேன்.
* பிரயாணி பிரயாணத்தை ரத்து செய்தவுடன் ரூபாய் பட்டு வாடா செய்யப்பட்டது.
- பயணி பயணத்தை விலக்கியவுடன் பணம் திரும்பக் கொடுக்கப்பட்டது.
* செல்வனுக்கும் கிள்ளைக்கும் தலா ஐந்து புஸ்தகம் கொடு.
- செல்வன், கிள்ளை ஆகிய ஒவ்வொருவருக்கும் ஐந்து புத்தகங்கள் கொடு.
* குறிஞ்சி தாக்கல் செய்த வழக்கு சுமூகமாகப் பைசல் செய்யப்பட்டது.
- குறிஞ்சி தொடுத்த வழக்கு நல்ல முறையில் முடிக்கப் பெற்றது.
* சந்நிதியில் சகல ஜனங்களும் உபந்நியாசம் கேட்கத் திரண்டிருந்தனர்.
- கோவிலில் மக்கள் அனைவரும் ஆன்மீக உரை கேட்கத் திரண்டிருந்தனர்.
* பந்து மித்திரர் சகிதம் வந்து ஆசீர்வதிக்கக் கோருகிறேன்.
- உறவினர், நண்பர்களுடன் வந்து வாழ்த்திட வேண்டுகிறேன்.
* என் ஏக புதல்வனின் ஜானவாசத்திற்குச் சகலரும் வரணும்.
- என் ஒரே மகனின் மாப்பிள்ளை அழைப்பிற்கு அனைவரும் வரவேண்டும்.
* ஸ்ரீ ரங்கத்தில் ஸ்வாமி ஸ்ரீ ரங்கநாதர்கோவில் கொண்டுள்ளார்.
- திருவரங்கத்தில் இறைவன் திருவரங்க நாதர் கோவில் கொண்டுள்ளார்.
* ஸ்ரீ ரங்கத்தில் ஸ்ரீ ரங்கநாதருக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
- திருவரங்கத்தில் திருவரங்க நாதருக்கு குடமுழுக்கு நடைபெற உள்ளது.
* நான் செய்த தவறுக்கு சகல ஜனங்களும் என்னை ஷமித்தருள வேண்டும்.
- நான் செய்த தவறுக்கு மக்கள் அனைவரும் என்னை மன்னித்தருள வேண்டும்.
* “வீக்கான என் ஆன்ட்டி ரெஸ்ட் எடுக்க வேண்டும்” என்று ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட் அட்வைஸ் கூறினார்.
“உடலநலம் குறைந்த என் அத்தை ஓய்வு எடுக்க வேண்டும்” என்று இதயவியல் வல்லுநர் அறிவுரை கூறினார்.
* டயாபெட்டிக் பேஷண்ட் ஸ்வீட் சாப்பிடுவதை ஸ்டாப் செய்ய வேண்டும்.
- நீரிழிவு நோயாளி இனிப்பு சாப்பிடுவதை நிறுத்தம் செய்ய வேண்டும்.
இலக்கணக் குறிப்பு:
பண்புத் தொகை: மை விகுதி மறைந்து வருவது
கூர்ம்படை, கருங்காக்கை, தண்குடை, கருமுகில், நெடுந்தேர், நெடுந்தேர், நெடுந்தகை, பச்சூன், முதுமரம், பசுங்கால், பெருந்தேர், நல்லுரை, வெஞ்சுடர், முச்சங்கம், முக்குடை, தீநெறி
வினைத் தொகை: காலம் மறைந்து வருவது
திருந்துமொழி, திரைகவுள், புனைகலம், ஓழுகுநீர், படர்முகில், அலைகிடல், வீங்குநீர், உறுகுறை, களிநடம், படர்முகில், விரிநகர், தாழ்பிறப்பு, ஈர்வளை, அலைகடல், உயர்எண்ணம்
உறைவேங்கடம், அசல்முகில், நிறைமதி
அடுக்குத்தொடர்: ஒரே சொல் அடுக்கி வருவது
தினந்தினம், அறைந்தறைந்து வாழியவாழிய, சுமைசுமையாய், துறைதுறையாய், விக்கிவிக்கி, புடைபுடை,
உரிச்சொல்: பெயர்ச்சொல்லைச் சிறப்பிப்பது
மாநகர், மல்லல்மதுரை, தடந்தோள், கடிநகர், வைவாள், நாமவேல், வைவேல், மாமதுரை, மாமலை
செய்யுளிசை அளபெடை (இசைநிறையளபெடை) படூஉம்
சொல்லிசையளபெடை: தழீஇ, தீதொரீஇ, செலீஇய
இன்னிசையளபெடை: தாங்குறூஉம், வளர்க்குறூஉம்
எண்ணும்மை: 'உம்' வெளிப்படையாக வருவது
வையகமும் வானகமும், வாயிலும் மாளிகையும்
மலர்தலும் கூம்பலும், கங்கையும் சிந்துவும்
தந்தைக்கும் தாய்க்கும், விண்ணிலும் மண்ணிலும்
பேரோடும் புகழோடும், மாடமும் ஆடரங்கும்
உருவகம்: உவமை உவமேயம் இரண்டையும் ஒன்றாக்குவது.
கண்ணீர்வெள்ளம், மதிவிளக்கு, பசிக்கயிறு, கைம்மலை
பொற்கரை, தங்கத்திமிங்கலம், தங்கத்தோணி
விளங்கோல் வினைமுற்று: வாழிய, செய்க
எதிர்மறை வியங்கோள் வினைமுற்று: மறவற்க, துறவற்க
பொருத்துக.
1.திணை --- பாடியோர
அ) குறிஞ்சி - 1) ஓரம்போகியார்
ஆ) முல்லை - 2) அம்மூவனார்
இ) மருதம் - 3) ஓதலாந்தையார்
ஈ) நெய்தல் - 4) கபிலர்
- 5) பேயனார்
விடை:
அ - 4
ஆ - 5
இ - 1
ஈ - 2
நூல் - ஆசிரியர்
அ) மணிமேகலை - 1) கிருஷ்ணப்பிள்ளை
ஆ) தேவாரம் - 2) உமறுப்புலவர்
இ) சீறாப்புராணம் - 3) சீத்தலைச்சாத்தனார்
ஈ) இரட்சணிய யாத்திரிகம் - 4) சுந்தரர்
- 5) குணங்குடி மஸ்தான்
விடை:
அ - 3
ஆ - 4
இ - 2
ஈ - 1
நூல் - ஆசிரியர்
அ) மணிமேகலை - 1) சமணம்
ஆ) நீலகேசி - 2) கிறித்தவம்
இ) இரட்சணிய யாத்திரிகம் - 3) இசுலாம்
ஈ) சீறாப்புராணம் - 4) பௌத்தம்
- 5) வைணவம்
விடை:
அ - 4
ஆ - 1
இ - 2
ஈ - 3
நூல் - ஆசிரியர்
அ) இராசராசசோழனுலா - 1) பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
ஆ) திருவேங்கடத்தந்தாதி - 2) குமரகுருபவர்
இ) மதுரைக் கலம்பகம் - 3) ஆசிரியர் பெயர் அறியவில்லை
ஈ) முக்கூடற்பள்ளு - 4) ஒட்டக்கூத்தர்
- 5) காரைக்கால் அம்மையார்
விடை:
அ - 4
ஆ - 1
இ - 2
ஈ - 3
புலவர்கள் - இயற்றிய நூல்கள்
அ) இளங்கோவடிகள் - 1) மணிமேகலை
ஆ) திருத்தக்க தேவர் - 2) சிலப்பதிகாரம்
இ) நாதகுத்தனார் - 3) சீவகசிந்தாமணி
ஈ) சீத்தலைச்சாத்தனார் - 4) வளையாபதி
-5) குண்டலகேசி
விடை:
அ - 2
ஆ - 3
இ - 5
ஈ - 1
Searches related to DINAMANI TNPSC
- dinamani tnpsc current affairs
- dinamani tnpsc pdf
- ias academy dinamani questions
- dinamani tnpsc questions answers 2016
- dinamani tnpsc tamil
- google dinamani tamil news paper
- dinamani tnpsc questions 2015
- ias academy study materials