Type Here to Get Search Results !

TNPSC CURRENT AFFAIRS AUGUST 2015 கருப்புப் பணத்தைத் தடுக்க செஷல்ஸுடன் ஒப்பந்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்


கருப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையை மேலும் வலுப்படுத்தும் வகையில், செஷல்ஸ் நாட்டுடன் வரி தொடர்பான தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்காக ஒப்பந்தம் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதுகுறித்து மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கருப்புப் பணத்தைத் தடுப்பதற்காக, கருப்புப் பணத் தடுப்புச் சட்டம், அமெரிக்காவுடன் வரி தொடர்பான விவரங்களை பகிர்ந்து கொள்வதற்கான ஒப்பந்தம் உள்பட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, இந்தியா - செஷல்ஸ் இடையே வரி தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்பந்தம், கருப்புப் பணம் உருவாவதைத் தடுப்பதற்காக, மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். இந்த ஒப்பந்தத்தின்படி, செஷல்ஸ் அரசு அளிக்கும் தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு மட்டும் தெரிவிக்கப்படும். அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்தால் மட்டுமே, வேறு நபர்களுடன் தகவல்கள் பகிர்ந்துகொள்ளப்படும்.
மேலும், இந்த ஒப்பந்தம், இரு நாடுகளுக்கு இடையே நிதிச் சிக்கல்களை ஏற்படுத்தாது. இந்தியாவிலும், செஷல்ஸிலும் சட்ட விரோதப் பண பரிவர்த்தனையில் ஈடுபடுவோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.முன்னதாக, செஷல்ஸில் கடந்த ஜூன் மாதம் 8, 9-ஆம் தேதிகளில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு இரு நாடுகளும் தற்போது ஒப்புக்கொண்டுள்ளன.மேலும், ஜி-20 நாடுகளுடன் மத்திய அரசு ஏற்கெனவே ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, அந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகள் தங்களுடைய வரி தொடர்பான தகவல்களை, வரும் 2017-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளும்.

SEARCHES RELATED TO TNPSC CURRENT AFFAIRS  AUGUST 2015

TNPSC CURRENT AFFAIRS 2015 IN TAMIL AUGUST 2015
TNPSC CURRENT AFFAIRS  2015 IN TAMIL AUGUST 2015
TNPSC CURRENT AFFAIRS  2015 AUGUST 2015
TNPSC CURRENT AFFAIRS IN ENGLISH AUGUST 2015
TNPSC CURRENT AFFAIRS 2015 IN TAMIL PDF AUGUST 2015
TNPSC CURRENT AFFAIRS  TAMIL 2015 AUGUST 2015
TNPSC CURRENT AFFAIRS 2015 IN TAMIL LANGUAGE AUGUST 2015
TNPSC CURRENT AFFAIRS  2015 IN TAMIL AUGUST 2015

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel