இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலங்கள் பட்டியலில் முதலிடத்தில் நாகாலாந்து உள்ளது. தமிழகம் 6-வது இடத்தைப் பிடித்துள்ளது. தேசிய குற்றப்பதிவு ஆணையத்தால் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
தில்லி, மகாராஷ்ட்ரா மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகமாக நடைபெறும் மாநிலங்களாக உள்ளன. இதற்கிடையே இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலங்கள் எதுவென்று பார்த்தால்? யூனியன் பிரதேசங்கள் பாதுகாப்பானவை என்று தேசிய குற்றப்பதிவு ஆணையத்தால் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளது.
1. நாகாலாந்து
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகாலாந்து, பாதுகாப்பான மாநிலங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. தேசிய குற்றப் பதிவு ஆணைய தகவலின்படி, 2014-ம் ஆண்டு மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 67 நடந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
2. லட்சத்தீவு
இந்தியா யூனியன் பிரதேசங்களில் ஒன்றான லட்சத்தீவு 2வது இடத்தில் உள்ளது. பிரதேசத்தின் மொத்த பெண்கள் அடிப்படையில் குற்றங்களின் எண்ணிக்கையானது 10 சதவீதம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
3. புதுச்சேரி
இந்தியாவின் பாதுகாப்பான மாநிலங்கள் பட்டியலில், மூன்றாவது இடத்தைப் புதுச்சேரி பிடித்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 77 வழக்குகள் பதிவாகி உள்ளன. புதுச்சேரியில் மொத்த பெண்கள் அடிப்படையில் குற்றங்களின் எண்ணிக்கையானது 10.6 சதவீதம் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
4. தத்ரா மற்றும் நாகர் ஹவேலி
நான்காவதாக தத்ரா நாகர் ஹவேலி பட்டியலில் இடம் பிடித்துள்ளன. 2014ம் ஆண்டு பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பாக 21 குற்றங்கள் என 11.1 சதவீதம் ஆகும்.
5. டாமன் மற்றும் டையூ
இந்தியாவில் பாதுகாப்பான பட்டியலில் டாமன் மற்றும் டையூ ஐந்தாவதாக இடம் பிடித்துள்ளன. 2014ம் ஆண்டு 15 குற்றங்கள் என 14.6 சதவீதம் ஆகும்.
6. தமிழகம்
இந்தியாவில் பாதுகாப்பான மாநிலங்கள் பட்டியலில் 6 வது இடம்பிடித்து உள்ள முதல் பெரிய மாநிலம் தமிழகம். இங்குப் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பாக 6325 குற்றங்கள் பதிவாகி உள்ளன. இருப்பினும் மாநிலத்தில் மொத்த பெண்கள் எண்ணிக்கையில் கருத்தில் கொள்கையில் தமிழகத்தில் குற்றங்களின் எண்ணிக்கையானது 18.4 சதவீதமாக உள்ளது.
7. மணிப்பூர்
ஏழாவதாக மணிப்பூர் இடம் பிடித்துள்ளன. இங்கு 2014ல் மட்டும் பெண்களுக்கு எதிராக 337 குற்றங்கள் 26.7 சதவீதமாக உள்ளது.
8. மேகாலயா
பாதுகாப்பான மாநிலங்களில் எட்டாவது இடத்தை மேகாலயா பிடித்துள்ளது. பெண்களுக்கு எதிராக 388 குற்றங்கள் என 28.8 சதவீதம் ஆகும்.
9. உத்தரகாண்ட்
ஒன்பதாவது இடத்தை உத்தரகாண்ட இடம் பிடித்துள்ளன. அங்கு 1395 குற்றங்கள் என 27.4 சதவீதமாக உள்ளது.
10. பீகார்
இந்தியாவில் பாதுகாப்பான மாநிலங்கள் பட்டியலில் பீகார் 10 வது இடத்தைப் பிடித்து உள்ளது. பீகாரில் மொத்த பெண்கள் எண்ணிக்கையில் 15 ஆயிரம் குற்றங்கள் என 31.3 சதவிதம் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
SEARCHES RELATED TO TNPSC CURRENT AFFAIRS AUGUST 2015
TNPSC CURRENT AFFAIRS 2015 IN TAMIL AUGUST 2015
TNPSC CURRENT AFFAIRS 2015 IN TAMIL AUGUST 2015
TNPSC CURRENT AFFAIRS 2015 AUGUST 2015
TNPSC CURRENT AFFAIRS IN ENGLISH AUGUST 2015
TNPSC CURRENT AFFAIRS 2015 IN TAMIL PDF AUGUST 2015
TNPSC CURRENT AFFAIRS TAMIL 2015 AUGUST 2015
TNPSC CURRENT AFFAIRS 2015 IN TAMIL LANGUAGE AUGUST 2015
TNPSC CURRENT AFFAIRS 2015 IN TAMIL AUGUST 2015