இந்திய பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா, தரவரிசையில் மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு உலக பாட்மிண்டன் தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்து சாதனை படைத்தார் சாய்னா. பிறகு புள்ளிகள் சற்று சரிந்து 79,192 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.
இந்த நிலையில், உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் கரோலினாவிடம் தோல்வி அடைந்தார்.
எனினும், கூடுதலாக 3,600 புள்ளிகள் பெற்றிருந்ததால், சாய்னா இன்று வெளியிடப்பட்ட பாட்மிண்டன் தரவரிசையில் 82,792 புள்ளிகளுடன் முதல் இடத்துக்கு மீண்டும் முன்னேறியுள்ளார்.