Type Here to Get Search Results !

VELLORE KALAGAM IMPORTANT POINTS FOR TNPSC TET TRB EXAM


VELLORE KALAGAM  IS UNDER THE SYLLABUS OF TNPSC GROUP 2 , TNPSC GROUP 2A. TNPSC GROUP 4, TNPSC GROUP 7 ,TNPSC VAO AND TNTET ,TRB EXAMS.

SEARCHING KEYWORD :INDIAN NATIONAL MOVEMET {VELLORE KALAGAM} STUDY MATERIALS , INDIAN NATIONAL MOVEMET {VELLORE KALAGAM} MATERIALS TAMIL PDF. TNPSC  TAMIL  MATERIALS,TNPSC GROUP 2 INDIAN NATIONAL MOVEMET {VELLORE KALAGAM} MATERIALS , TNPSC GROUP 2A INDIAN NATIONAL MOVEMET {VELLORE KALAGAM} STUDY MATERIALS. TNPSC GROUP 4 INDIAN NATIONAL MOVEMET {VELLORE KALAGAM} STUDY MATERIALS, TNPSC GROUP 7 INDIAN NATIONAL MOVEMET {VELLORE KALAGAM} STUDY MATERIALS ,TNPSC VAO INDIAN NATIONAL MOVEMET {VELLORE KALAGAM} STUDY MATERIALS .TNTET INDIAN NATIONAL MOVEMET {VELLORE KALAGAM} STUDY MATERIALS ,TRB EXAMS INDIAN NATIONAL MOVEMET {VELLORE KALAGAM} STUDY MATERIALS.


 வேலூர் கலகம்


ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்ட இந்தியாவில், முதன்முதலாக கிழக்கிந்தியக் கம்பெனியில் இந்திய சிப்பாய்கள் மீரட் நகரில் 1857 மே 10-ம் தேதி செய்த கிளர்ச்சியை வரலாற்று ஆசிரியர்கள் சிப்பாய் புரட்சி என வர்ணிக்கின்றனர். உண்மையில், அதற்கு 51 ஆண்டுகளுக்கு முன்பே வேலூர் கோட்டையில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடந்ததுதான் வேலூர் சிப்பாய் கலகம் என்பதை வரலாறு தன்னகத்தே பதிவு செய்து வைத்துள்ளது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முதல் வித்து இதுதான் என்பதையும், இதை வேலூர் சிப்பாய் புரட்சி என்றுதான் வர்ணிக்க வேண்டும் என்பதையும் தமிழ் ஆர்வலர்கள் பலரும் தொடர்ந்து சுட்டிக் காட்டி வருகின்றனர்.

புரட்சிக்கான காரணங்கள் :

         வில்லியம் பெண்டிங் பிரபு சென்னை ஆளுநராகவும், ஜான் கிராடட் அக்னியூ தலைமை தளபதியாக இருந்தார். 1805-ம் ஆண்டு, வேலூர் கோட்டையில் இருந்த மெட்ராஸ் ரெஜிமெண்டைச் சேர்ந்த தென்னிந்தியத் துருப்புகள் பாதுகாப்புப் பணியில் இருந்தனர். அந்த ஆண்டில், இந்தியப் படைகள் சமய அடையாளங்களை அணியக் கூடாது.

தலையில் குடுமி வைக்கக் கூடாது. ஐரோப்பிய ராணுவ உடைகளை மட்டுமே அணிய வேண்டும் என்ற கடுமையான விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. சிப்பாய்கள் ஐரோப்பிய முறையில் தொப்பி அணிந்து, மாட்டுத் தோலால் ஆன பட்டையை வைக்க வேண்டும் என்ற தளபதி அக்னியூ என்பவரது உத்தரவால், இந்து, முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த 1,500 வீரர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தியது.  அதனால் ஆங்கிலேயர்களுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட முற்பட்டனர்.

கிளர்ச்சியில் ஈடுபட முயன்றவர்களுக்கு தலா 600 பிரம்படி தண்டனை வழங்கப்பட்டது. இந்த  நடவடிக்கை இன்னும் கோபத்தை இந்திய துருப்புகளுக்கு ஏற்படுத்தின.   

வேலூர்  கோட்டையில் அப்போது சிறை வைக்கப்பட்டிருந்த திப்பு சுலதான்களின் மகன்கள் குறிப்பாக மூத்த மகன் பத்தே ஹைதர் இந்த கிளர்ச்சிக்கு காரணம் என குற்றம் சாட்டி கடுமையான சித்ரவதைகள் தொடர்ந்தன.

புரட்சியின் நிகழ்வுகள் :

திப்புவின் மகளின் திருமண நிகழ்ச்சி ஜூலை 9 அன்று நடைபெற்றது. இந்நிலையில், ஆத்திரமடைந்த இந்திய சிப்பாய்கள் 1806-ம் ஆண்டு ஜூலை 10-ம் தேதி அதிகாலை உறக்கத்தில் இருந்த ஆங்கிலேய அதிகாரிகள் பலரைக் கொன்று குவித்தனர். 350 அதிகாரிகளில் 100 பேர் கொல்லப்பட்டனர். திப்புவின் மகன் அரசராக அறிவிக்கப்பட்டார்.

ஆங்கில தளபதி காட்ஸ் ஆற்காட்டில் உள்ள இராணுவத்திற்கு தகவல் தெரிவித்தார்.ஆங்கிலேயர் படைகள் தளபதி கில்லஸ்பி தலைமையில்  சில மணி நேரத்தில் இந்திய சிப்பாய்கள் 350-க்கும் மேற்பட்டோரை கொன்று புரட்சியை அடக்கினர்.

தோல்விக்கான காரணங்கள் :

        புரட்சி நடத்த சரியான தலைமை கிடையாது. திப்புவின் மகன்களுக்கு போதுமான போர் பயிற்சி கிடையாது. சரியான திட்டமிடவில்லை. இந்திய அரசரிடம் உதவிகளைப் பெற முடியவில்லை.

விளைவுகள் :

        திப்புவின் குடும்பத்த்தினர் கல்கத்தாவில் ஆறு வருடங்களாக சிறை வைக்கப்பட்டனர்.புரட்சியின் தலைமை தாங்கிய வீர்ர்களை விசாரிப்பதற்கு 1806 ஜூலை 12 கர்னல் கர்கோர்ட் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. புரட்சியின் காரணத்தை விசாரிப்பதற்கு 1806 ஜூலை 12 மேஜர் ஜெனரல் பாட்டர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.





இந்த BLOG{TNPSC SHOUTERS}, TNPSC தேர்வுக்கு தயார் செய்பவர்களுக்காக TNPSC தேர்வில் வெற்றி பெற்றவர்களால் உருவாக்கப்பட்டது.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel