UNIT - VII: INDIAN NATIONAL MOVEMENT
INDIAN NATIONAL CONGRESS 1885
1885 ம் ஆண்டு தொடங்கப்பட்ட காங்கிரஸ் கட்சி தொடக்க காலத்தில் இந்தியாவில் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தை எதிர்க்கவில்லை. அப்போது இதன் குறிக்கோள் கல்வி கற்ற இந்தியர்களுக்கு அரசில் பெரும் பங்கு வாங்கி தருவது தான்.
உமேஸ் சந்திர பானர்ஜி, சுரேந்திரநாத் பானர்ஜி, ஆலன் ஆக்டவியன் ஹியூம் (Allan Octavian Hume), வில்லியம் வெட்டர்பர்ன் (William Wedderburn,), கூட்டம், தின்சா வாச்சா (Dinshaw Wacha) ஆகியோரால் தொடங்கப்பட்ட இதன் முதல் தலைவராக பம்பாயில் 1885 டிசம்பரில் நடந்த கூட்டத்தில் உமேஸ் சந்திர பானர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில் 72 உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.
கூட்டம் புனேயில் நடப்பதாக இருந்தது, ஆனால் பிளேக் என்னும் கொள்ளை நோய் புனேயில் இருந்ததால் அக்கூட்டம் பம்பாய்க்கு மாற்றப்பட்டது.
இதன் இரண்டாம் கூட்டம் 1888 டிசம்பர் 27 ல் நடைபெற்றது. இதில் 436 பேர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டின் தலைவராக தாதாபாய் நௌரோஜி அறிவிக்கப்பட்டார். இவரின் முயற்சியால் "Indian National Congress" என்று பெயர் மாற்றப்பட்டது. இந்த மாநாட்டில் சுரேந்திரநாத் பானர்ஜியின் "Indian National Union" காங்கிரசுடன் இனைக்கப்பட்டது.
முன்றாவது மாநாடு சென்னையில் நடைபெற்றது.பிரித்தானிய அரசின் எதிர்ப்பு காரணமாக காங்கிரஸின் கொள்கை மாற்றம் கண்டது, இக்கட்சி விடுதலைப்போரில் தீவிரம் காட்ட தொடங்கியது.
1907ல் காங்கிரஸில் தீவிரபோக்குடையோர், மிதபோக்குள்ளோர் என 2 குழுக்கள் உருவாகின. தீவிரபோக்குடையோர் பால கங்காதர திலகர் தலைமையிலும், மிதபோக்குடையோர் கோபால கிருஷ்ண கோகலே தலைமையிலும் இயங்கினர். பாலகங்காதர திலகரின் செல்வாக்கால் காங்கிரஸ் இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த பெரும் இயக்கமாக உருவாகியது, இலட்சக்கணக்கான மக்களை ஆங்கிலேயருக்கு எதிராக திரட்டியது.
இந்திய விடுதலைப்போரில் முதன்மையான இடம்பிடித்த பால கங்காதர திலகர், கோபால கிருஷ்ண கோகலே, லாலா லஜபத் ராய், பிபின் சந்திர பால்,முகமது அலி ஜின்னா, தாதாபாய் நௌரோஜி, வ. உ. சிதம்பரம் பிள்ளை போன்ற தலைவர்களை காங்கிரஸ் கட்சி உருவாக்கியது. காங்கிரசின் வரலாற்றை "பட்டாபி சித்தாராமைய" எழுதி உள்ளார்.
இவா் காங்கிரசின் தோற்றம் ஒரு மர்மமாகவே உள்ளது என்று கூறிப்பிட்டு உள்ளார். உமேஸ் சந்திர பானர்ஜி காங்கிரசின் தோற்றம் பற்றி "The Saftey Wall Theory "-யை கூறினார். இதன் படி ஆங்கிலேயர்கள் தமது ஆட்சியை பாதுகாத்து கொள்வதற்காக "Allan Octavian Hume"-யின் உதவியுடன் காங்கிரசை உருவாக்கினர் என்று கூறுகிறார்.