மிதவாத தேசியம் ( 1885 – 1905 ) IS UNDER THE SYLLABUS OF TNPSC GROUP 2 , TNPSC GROUP 2A. TNPSC GROUP 4, TNPSC GROUP 7 ,TNPSC VAO AND TNTET ,TRB EXAMS.
SEARCHING KEYWORD :INDIAN NATIONAL MOVEMET STUDY MATERIALS , INDIAN NATIONAL MOVEMET MATERIALS TAMIL PDF. TNPSC TAMIL MATERIALS,TNPSC GROUP 2 INDIAN NATIONAL MOVEMET MATERIALS , TNPSC GROUP 2A INDIAN NATIONAL MOVEMET STUDY MATERIALS. TNPSC GROUP 4 INDIAN NATIONAL MOVEMET STUDY MATERIALS, TNPSC GROUP 7 INDIAN NATIONAL MOVEMET STUDY MATERIALS ,TNPSC VAO INDIAN NATIONAL MOVEMET STUDY MATERIALS .TNTET INDIAN NATIONAL MOVEMET STUDY MATERIALS ,TRB EXAMS INDIAN NATIONAL MOVEMET STUDY MATERIALS.
தேடல் தொடர்பான தகவல்கள்:
- TNPSC STUDY MATERIALS மிதவாத தேசியம் ( 1885 – 1905 )NOTES STUDY MATERIALS STUDY MATERIALS,
- TAMIL மிதவாத தேசியம் ( 1885 – 1905 ) NOTES STUDY MATERIALS PDF,
- TNPSC மிதவாத தேசியம் ( 1885 – 1905 ) NOTES STUDY MATERIALS DOWNLOAD STUDY MATERIALS,
- TNPSC மிதவாத தேசியம் ( 1885 – 1905 ) NOTES STUDY MATERIALS GROUP 2 STUDY MATERIALS ,
- TNPSC GROUP 2A மிதவாத தேசியம் ( 1885 – 1905 ) NOTES STUDY MATERIALS STUDY MATERIALS,
- TNPSC GROUP 4 மிதவாத தேசியம் ( 1885 – 1905 ) NOTES STUDY MATERIALS STUDY MATERIALS,
- TNPSC GROUP 7 மிதவாத தேசியம் ( 1885 – 1905 ) NOTES STUDY MATERIALS STUDY MATERIALS ,
- TNPSC VAO மிதவாத தேசியம் ( 1885 – 1905 ) NOTES STUDY MATERIALS MATERIALS
- TNTET மிதவாத தேசியம் ( 1885 – 1905 ) NOTES STUDY MATERIALS STUDY MATERIALS
- TRB EXAMS மிதவாத தேசியம் ( 1885 – 1905 ) NOTES STUDY MATERIALS STUDY MATERIALS
மிதவாத தேசியம் ( 1885 – 1905 ) |
நோக்கங்கள்:
சட்டமன்றம் விரிவாக்கமும் பிரதிநித்துவம் பெறுதல், கல்வியை பரப்புதல், பத்திரிக்கை சுதந்திரம், ICS தேர்வை இந்தியாவில் நடத்துதல், இராணுவ செலவை குறைத்தல், நிர்வாகத்திலிருந்து நீதித்துறையை பிரித்தல், இறக்குமதி வரியை அதிகரித்தல், இந்தியர்களுக்கு உயர்பதவி, லண்டனில் உள்ள இந்தியன் கவுன்சிலைக் கலைத்தல்
சாதனைகள் :
மக்களிடையே பரந்த தேசிய விழிப்புணர்வை பரப்பினர். 1892 ல் இந்திய கவுன்சில் சட்டம் வாயிலாக சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்தியது. ஜனநாயகம், சிவில் உரிமைகள் போன்றவை பிரபலமாக்கினார்.
தலைவர்கள்
சுரேந்திரநாத் பானர்ஜி, இவர் இந்த்தியாவின் பர்க் என்று அழைக்கப்பட்டார். வங்கப்பிரிவினை எதிர்த்தல். 1876 ல் அரசியல் சீர்திருத்தங்கள் கோரி போராட இந்திய கழகத்தை தோற்றுவித்தார். அவர் நிறுவிய இந்திய தேசிய பேரவை (1883 ) 1886ல் இந்திய தேசிய காங்கிரஸ் உடன் இணைத்தார்.
ஜி.சுப்பிரமணிய அய்யர், சென்னை மகாஜனச் சங்கம் (1884) மூலம் தேசியத்தை பரப்பினார். தி இந்து, சுதேசிமித்திரன் பத்திரிக்கைகளை நிறுவினார்.
தாதாபாய் நௌரோஜி, இந்தியிவின் முதுபெரும் மனிதர் என்று அழைக்கப்படுகிறார். இந்தியாவின் அதிகாரபூர்வமற்ற தூதராக இங்கிலாந்தில் கருதப்பட்டார். பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் பொதுமக்களவையின் உறுப்பினர் ஆவார். இவர் எழுதிய “ இந்தியாவில் வறுமையும் பிரிட்டிஷாரின் தன்மையற்ற ஆட்சியும் “ என்ற நூலில் “ செல்வ சுரண்டல் “ கோட்பாட்டை விளக்கியிருந்தார். இதை பற்றி விசாரிக்க பிரிட்டிஷ் வெல்பி குழுவை நியமித்தது. அதன் முதல் இந்திய உறுப்பினர் இவரே.
கோபால கிருஷ்ண கோகலே, ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக சுதந்திரப் போராட்டத்தின்போது உருவான சமூக மற்றும் இந்திய தேசிய காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரும், இந்திய சேவகர்கள் அமைப்பின் நிறுவனரும், நாட்டுக்கு உழைத்த நல்லவருமான கோபால கிருஷ்ண கோகலே தன்னுடைய குறிக்கோள்களை அடைவதற்காக, வன்முறையைத் தவிர்த்தல், இருக்கும் அரசு நிறுவனங்களுக்குள்ளேயே மாற்றத்தைக் கொண்டு வருதல் ஆகிய இரு முக்கிய கொள்கைகளைப் பின்பற்றினார். அடிப்படையில் மிதவாதியான இவரை, பாலகங்காதர திலகரின் தீவிரவாத குழுவுக்கு நேரேதிரானவராக சரித்திரம் பதிவு செய்துள்ளது. மகாத்மா காந்தியின் அரசியல் குருவாகவும் இவர் கருதப்படுகிறார்.
1866.05.09 அன்று மஹாராஷ்டிராவின் கோதாலுக்கில், ஒரு சித்பவன் பிராமணர் குடும்பத்தில் பிறந்தார்,பல்கலைக்கழக கல்வியைப் பெறும் முதல் தலைமுறை இந்தியர்களில் ஒருவராக இருந்த கோகலே, 1884 ம் ஆண்டில் எல்பின்ஸ்டோன் கல்லூரியில் தன் பட்டப் படிப்பை முடித்தார்.
சமூக மறுமலர்ச்சியாளர் மஹாதேவ் கோவிந்த் ரானடேவின் ஆதரவாளரான கோகலேவுக்கு அரசாங்க வேலைகள் காத்துக்கொண்டிருந்த பொழுதே நாட்டுப்பணியே முக்கியம் என எண்ணிய கோகலே 1889ல் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினரானார். அங்கே மிதவாத போக்கை கடைபிடித்தார் .வன்முறை இல்லாத போராட்ட முறைகள், இருக்கும் அரசு நிர்வாகத்தில் மாற்றம் என குறிக்கோள் கொண்டு செயல்பட்டார். அயர்லாந்து சென்ற கோகலே அங்கு ஐரிஷ் தேசியவாதியான ஆல்ஃப்ரெட் வெப்பை இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகப் பணிபுரிய 1894 ஆம் ஆண்டில் ஏற்பாடு செய்தார். அதற்கு அடுத்த ஆண்டு, கோகலே திலகருடன் இணைந்து காங்கிரசின் இணைச் செயலாளர் ஆனார். திலகர் மற்றும் கோகலேவின் ஆரம்ப கால தொழில்வாழ்க்கை பல விதங்களில் இணையானதாகவே இருந்து வந்தது. இருவருமே எல்பின்ஸ்டோன் கல்லூரியில் படித்தனர், இருவருமே கணித பேராசிரியர்களானார்கள். டெக்கன் கல்வி அமைப்பின் முக்கிய உறுப்பினர்களாகவும் இருவரும் இருந்து வந்தனர். எனினும், இருவருமே காங்கிரசில் ஈடுபட ஆரம்பித்தவுடனே, இருவரது அரசியல் வழிமுறை தொடர்பான அவர்களின் செயல்பாடுகளில் வேறுபட்ட எண்ணங்கள் வெளிப்பட தொடங்கியது.
திலகருடனான கோகலேவின் முதல் முரண்பாடு அவருடைய விருப்பமான செயல்திட்டத்தின் மீது மையம் கொண்டிருந்தது, அது 1891-92 ஆம் ஆண்டுகளில் ஆங்கிலேய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ஏஜ் ஆஃப் கன்சன்ட் சட்டமாகும். கோகலே குழுவினர், இந்து மதத்தில் இருந்த மூடநம்பிக்கைகள் மற்றும் இழிவுபடுத்தல்களை தூய்மைப்படுத்த எண்ணி, குழந்தைத் திருமணத்தைத் தடுத்திடும் சட்டத்தை விரும்பினர். திலகர் அதை எதிர்த்தார்.
குழந்தைத் திருமணத்தை நீக்கும் எண்ணத்தை திலகர் எதிர்க்கவில்லை. ஆனால் இந்துக்களின் பாரம்பரியத்தில் ஆங்கிலேயர்கள் தலையிடும் எண்ணத்தை எதிர்த்தார். இத்தகைய சீர்திருத்தங்களை சுதந்திரம் அடைந்தவுடன் இந்தியர்கள் தாங்களே செய்து கொள்ள வேண்டும் என்பது திலகரின் கருத்தாக இருந்தது. எனினும் திலகரின் எதிர்ப்புகளுக்கு இடையில் கோகலே குழுவினர் ஆங்கிலேய அரசின் துணையுடன் அதற்கான மசோதாவை பாம்பே பிரெசிடென்சியில் சட்டமாக்கினர்.
1905 ஆம் ஆண்டில் கோகலே இந்திய தேசிய காங்கிரசின் தலைவரானார். 1906 ஆம் ஆண்டில் காங்கிரசின் தலைவர் வேட்பாளராக திலகரை ஆதரிக்க மறுத்துவிட்டார். சூரத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் காங்கிரசின் இரு பிரிவுகளுக்குள் பலத்த மோதல் ஏற்பட்டு, காங்கிரஸ் இரண்டாக உடைந்தது. கோகலே, திலகர் இருவரும் முறையே காங்கிரசின் மிதவாதி, தீவிரவாதிகளின் தலைவரானார்கள். 1916 ஆம் ஆண்டில் கோகலே இறந்த பின்னரே இரு பிரிவுகளும் ஒன்று சேர்ந்தன.
1905 ஆம் ஆண்டில் கோகலே இந்திய தேசிய காங்கிரஸ்சின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர் தம்முடைய அரசியல் அதிகாரத்தின் உச்சியில் இருந்தபோது, ஏற்கெனவே இருக்கும் கல்வி நிறுவனங்கள் மற்றும் இந்தியக் குடிமைச் சேவைகள், அரசியல் கல்வியை இந்தியர்கள் பெறுவதற்கான போதிய அளவு வாய்ப்புகளை ஏற்படுத்தவில்லை என்று எண்ணிய கோகலே 'இந்திய சேவகர்கள்' எனும் அமைப்பினை தொடங்கினார். கோகலே சுதந்திரத்தைப் பற்றி முதன்மையாகக் கவலைப்படவில்லை. ஆனால் சமூக மறுமலர்ச்சியில் அக்கறை கொண்டிருந்தார்; அத்தகைய மறுமலர்ச்சியை ஏற்கனவே இருக்கும் ஆங்கிலேய அரசு நிறுவனங்களுக்குள்ளேயே பணி செய்வதன் மூலம் சிறப்பாக செயல்படுத்த முடியும் என்று அவர் நம்பினார்,.
1899 ஆம் ஆண்டு கோகலே மும்பை சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1903, மே 22- ல் அவர் இந்திய கவர்னர் ஜெனரலின் இந்தியப் பேரவைக்கு மும்பை பிராந்தியத்தை பிரதிநிதிக்கும் வகையில் பதவி வகிக்காத உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1909 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட மிண்டோ-மார்லே திருத்தங்களை செழுமைப்படுத்துவதில் கோகலே இந்த பயணங்களின் போது உதவினார். 1904 ஆம் ஆண்டு, கோகலே CIE (கம்பேனியன் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி இண்டியன் எம்பையர்) ஆக நியமிக்கப்பட்டார், இது அவருடைய சேவைக்காக ஆங்கிலேயப் பேரரசின் ஒரு முறையான அங்கீகாரமாகும்.
1920-க்குள் காந்தி இந்திய சுதந்திர இயக்கத்தின் தலைவராக உருவானார். காந்தி தன்னுடைய சுயசரிதையில் கோகலேவை தன்னுடைய வழிகாட்டி என்றே குறிப்பிடுகிறார்.
பாகிஸ்தானின் எதிர்கால நிறுவனரான முகமது அலி ஜின்னாவின் முன்னோடியாகவும் கோகலே இருந்தார், ஜின்னாவை "இந்து- முகமதிய ஒற்றுமையின் தூதுவர்" என்று கோகலே புகழ்ந்தார். கோகலே தன்னுடைய வாழ்நாள் இறுதி வரையிலும் தொடர்ந்து அரசியல்ரீதியாக இயங்கிக்கொண்டே இருந்தார். அதே நேரத்தில், அவர் தொடர்ந்து இந்திய சேவகர்கள் அமைப்பு, காங்கிரஸ் மற்றும் சட்டப்பேரவையிலும் ஈடுபட்டு வந்தார்.
இருபது வயதில் பொதுவாழ்வில் நுழைந்த கோகலே ஆஸ்துமா, நீரிழிவு நோயால் பாதிக்கபட்டு இருந்த போதிலும் மிதவாத நோக்கத்துடன் கல்விச் சிந்தனை மூலம் இந்தியர்களை எழுச்சியடையச் செய்து நாட்டுக்காக உழைத்த நல்வர் கோகலே 1915 ஆம் ஆண்டு பிப். 19 ஆம் தேதி கோகலே தம்முடைய நாற்பத்து ஒன்பதாவது வயதில் காலமானார். கோகலே இங்கிலாந்து பயணத்தின்போது 49 நாட்களில் 47 கூட்டங்களில் உரையாற்றினார் என்பதே அவரின் இடைவிடாத உழைப்புக்கு சான்று.
1905 (1908) -ல் பூனாவில் இந்தியப் பணியாளர் சங்கத்தைத் தொடங்கினார்.இந்தியப் பணியாளர் சங்கம், நடேஷ் அப்பாஜி திராவிட், கோபால் கிருஷ்ண தியோதர், ஆனந்த் பட்வர்தன் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டது. இதன் நோக்கம் பிரிட்டிஷ் ஆட்சியை அகற்றுவதும் இந்தியர்களின் சமூக மற்றும் மனித வள ஆற்றல்களை மேம்படுத்துவதும் ஆகும்.
கோகலே இன்ஸ்டிடியூட் ஆஃப் பாலிடிக்ஸ் அண்ட் எகனாமிக்ஸ் (GIPE), பொதுவாக கோகலே இன்ஸ்டிடியூட் என்று அறியப்படுவது, இந்தியாவில் இருக்கும் மிகப் பழமையான பொருளாதார ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் ஒன்றாகும். இது மஹாராஷ்டிராவின் பூனேவிலுள்ள டெக்கன் ஜிம்கானா பகுதியில் இருக்கும் பிஎம்சிசி சாலையில் அமைந்திருக்கிறது. இந்த நிறுவனம் திரு. ஆர்.ஆர். காலே அவர்களால் இந்திய சேவகர்கள் அமைப்புக்கு வழங்கப்பட்ட நிலையான நிதியிலிருந்து உருவாக்கப்பட்டது. இந்திய சேவகர்கள் அமைப்பினர் தான் இந்த நிறுவனத்தின் அறங்காவலர்கள் ஆவார்கள்.
இந்த BLOG{TNPSC SHOUTERS}, TNPSC தேர்வுக்கு தயார் செய்பவர்களுக்காக TNPSC தேர்வில் வெற்றி பெற்றவர்களால் உருவாக்கப்பட்டது.