//
Type Here to Get Search Results !

19th NOVEMBER 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

19th NOVEMBER 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

பிரதமர் நரேந்திர மோடி ஃபிக்கி வருடாந்திர பொதுக்கூட்டம், மாநாட்டை தொடங்கிவைத்தார்
  • இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் (ஃபிக்கி) வருடாந்திர கூட்டத்தையும், மாநாட்டையும் பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லி பாரத் மண்டபத்தில் இன்று தொடங்கி வைத்தார். 
  • அப்போது ஃபிக்கியின் நூற்றாண்டு விழாவையொட்டி கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய அவர், இதற்கு முன்பும் பலமுறை ஃபிக்கி நிகழ்ச்சிகளில் தாம் பங்கேற்றிருந்தாலும் இந்த நூற்றாண்டு அம்சம் மிகவும் சிறப்பானது என்று கூறினார். 
  • கடந்த 100 ஆண்டுகளாக விழிப்புணர்வுடன் செயல்பட்டு, காலத்திற்கேற்ப மாற்றிக்கொண்டு இந்தியப் பொருளாதார பயணத்திற்கு ஃபிக்கி ஆற்றிய பங்களிப்பை அவர் பாராட்டினார்.
மியான்மர் அரசு ரோஹிங்கியா மக்களை இனப்படுகொலை செய்தது - சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு
  • மியான்மர் நாட்டின் ராகைன் மாநிலத்தில், கடந்த 2017 ஆகஸ்ட் மாதம் ரோஹிங்கியா கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கை எனக் கூறி மியான்மர் ராணுவப்படைகள் வன்முறை நடவடிக்கைகளை மேற்கொண்டன.
  • இதில், ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா மக்கள் கொல்லப்பட்டதுடன், லட்சக்கணக்கானோர் மியான்மரை விட்டு வெளியேறி இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் அகதிகளாகத் தஞ்சமடைந்துள்ளனர்.
  • இதனைத் தொடர்ந்து, முஸ்லீம்கள் அதிகமுள்ள சிறுபான்மை சமூகத்தினரான ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக மியான்மர் அரசு மேற்கொண்ட வன்முறைகள் குறித்து இன்று (நவ. 19) நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
  • இந்த விசாரணையில், 10,000-க்கும் அதிகமான ரோஹிங்கியா மக்களை மியான்மர் அரசு கொலை செய்ததற்கு ஆதாரம் இருப்பதாக, நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
  • இந்த நிலையில், ராகைன் மாநிலத்தில் ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக மியான்மர் இனப்படுகொலையில் ஈடுபட்டு, இனப்படுகொலை உடன்படிக்கையின் கீழ் கட்டுப்பாடுகளை மீறியுள்ளது என சர்வதேச நீதிமன்றத் தலைவர் யுஜி இவாசாவா தெரிவித்துள்ளார்.
  • 2026 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள நவி பிள்ளை உள்ளிட்ட 15 நீதிபதிகள் இடம்பெற்ற சர்வதேச நீதிமன்றத்தில், 9-6 எனும் வாக்குகளின் அடிப்படையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் 6-வது இந்தியா - மலேசியா கூட்டு ராணுவப் பயிற்சி ‘ஹரிமாவ் சக்தி’ தொடக்கம்
  • இந்தியா மற்றும் மலேசியா இடையிலான 6-வது கூட்டு ராணுவப் பயிற்சியான ‘ஹரிமாவ் சக்தி-6’, மலேசியாவின் ஈப்போவில் இன்று (நவம்பர் 19, 2026) தொடங்கியது. 
  • நவம்பர் 30-ம் தேதி வரை நடைபெறும் இப்பயிற்சியில் இரு நாடுகளையும் சேர்ந்த தலா 120 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தியா மற்றும் மலேசியாவில் சுழற்சி முறையில் நடத்தப்படும். 
  • இப்பயிற்சி, ஐநா சபையின் சாசனம் அத்தியாயம் 7-ன் கீழ், வனப்பகுதி மற்றும் நகர்ப்புறத்தை ஒட்டிய பகுதிகளில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைந்து மேற்கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பல்வேறு கட்டங்களாக நடைபெறும் இப்பயிற்சியில் கூட்டுக் கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு மையம் அமைத்தல், அதிரடி தாக்குதல்கள், தேடுதல் நடவடிக்கைகள், போர் பொறியியல் பயிற்சிகள் மற்றும் உளவு பார்த்தலுக்கான ஆளில்லா வான்வழி அமைப்புகள் (UAS), எதிரி ட்ரோன்களைக் கண்டறிந்து அழிக்கும் தொழில்நுட்பங்கள் (C-UAS) ஆகியவற்றைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பயிற்சிகள் இடம்பெறுகின்றன. 
  • கூட்டுப் பயங்கரவாத எதிர்ப்பு ஒத்திகையுடன் நிறைவடையும் இப்பயிற்சி, இரு நாட்டு ராணுவங்களிடையே சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளவும், ஒருங்கிணைந்த செயல்பாட்டுத் திறன், இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய அமைதியை வலுப்படுத்தவும் வழிவகுக்கும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel