
6th OCTOBER 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
பிரமோஸ் ஏவுகணைக்கான கட்டுப்பாட்டு அமைப்பை கொள்முதல் செய்வதற்காக ரூ.661 கோடி மதிப்பில் ஒப்பந்தம் கையெழுத்து
- பிரமோஸ் ஏவுகணைகளை மேம்படுத்த மத்திய பாதுகாப்புதுறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், ரூ.661 கோடி மதிப்பில், பிரமோஸ் ஏவுகணையின் கட்டுபாட்டு அமைப்பு, ஏவுகணைகளை செலுத்த பயன்படும் கருவிகள் ஆகியவற்றை கொள்முதல் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், மத்திய பாதுகாப்பு அமைச்சகம், தனியார் நிறுவனமான பிரமோஸ் ஏரோஸ்பேஸ் இடையே கையெழுத்தானது.
- புதுதில்லியில் 2026 அக்டோபர் 6-ம் தேதி பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ்குமார் சிங் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
- உள்நாட்டு தயாரிப்பை ஊக்குவிக்கும் வகையிலும், சிறு, குறு நிறுவனங்கள் பயன்பெறும் வகையிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
- இதன்மூலம் 3 ஆண்டுகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் ராணுவம், கடற்படையின் பாதுகாப்பு மேம்படும். இலக்கை துல்லியமாகவும் அதிவேகமாகவும் சென்று தாக்கக் கூடிய சிறப்பை பெற்றது பிரமோஸ் ஏவுகணை.
- இந்திய கடற்படையில் முக்கியத்துவம் வாய்ந்த பிரமோஸ் ஏவுகணையை மேம்படுத்தும் வகையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- விசாகப்பட்டினத்தில் உள்ள இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளத்தில் முதலாவது உள்நாட்டு கடற்படை ஆதரவுக் கப்பலான சூர்யாவை பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
- மேலும், ஐந்தாவது கப்பலுக்கான அடித்தள கட்டமைப்பு பணியையும் தொடங்கி வைத்த அவர், மேம்படுத்தப்பட்ட ஸ்லிப்வே-4 ,300 டன் திறன் கொண்ட கோலியாத் கிரேன் ஆகியவற்றையும் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தார்.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை சிறு, நடுத்தர தொழில்துறை வளர்ச்சி நிதியை அமைப்பதற்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு செய்ய இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
- 2026-27-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டின் 28-வது பத்தியில் குறிப்பிட்டபடி, நாட்டின் சிறு, நடுத்தர தொழில்துறை நிறுவனங்களுக்கு வளர்ச்சி சார்ந்த மூலதனத்தை ஊக்குவிப்பதையும், உற்பத்தி, சேவைகள், தொழில்நுட்பம், புதுமை கண்டுபிடிப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்ட துறைகளில் இந்திய நிறுவனங்களைச் சாதனையாளர்களாக திகழச் செய்வதையும் இந்த நிதி நோக்கமாகக் கொண்டுள்ளது.
- ஏற்கனவே, பங்கு மூலதன ஆதரவை வழங்கக் கூடிய நிதிகள் இருந்தாலும் அவற்றில் பெரும்பாலானவை ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், சிறு நிறுவனங்கள் மீது மட்டுமே கவனம் செலுத்துகின்றன. சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கான வளர்ச்சி சார்ந்த பங்கு மூலதனத்தில் ஒரு இடைவெளி காணப்படுகிறது.
- பிரதமர் திரு நரேந்திர மோடி அரசின் தலைவராகத் தொடர்ந்து 25 ஆண்டுகள் நிறைவு செய்ததற்கு வாழ்த்துத் தெரிவித்து மத்திய அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது.
- குஜராத்தின் வெற்றிகரமான முன்முயற்சிகளைத் தேசிய அளவில் பிரதமர் திரு மோடி எவ்வாறு முன்னெடுத்துச் சென்றார் என்பதை இத்தீர்மானம் விவரிக்கிறது.
- ஒளிமய கிராம திட்டத்தின் கீழ், வேளாண் பணிக்கான தனி மின்சார விநியோகத் திட்டம் தேசிய அளவில் பின்பற்றப்பட்டது மூலம் குஜராத்தின் அனுபவம் நாடு முழுவதும் விரிவுபடுத்தியது குறித்து தீர்மானத்தில் இடம்பெற்றது.
- பிரதமர் திரு மோடியின் ஏழைகள் மீதான இரக்கம் கண்ணியமாக மாறுகிறது குறித்து கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. சுமார் 60 கோடி மக்கள் வங்கி கணக்குகள், 4 கோடிக்கும் அதிகமான வீடுகள், 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து வெளியேறியது ஆகியவை பிரமரின் தனிப்பட்ட புரிதல் எப்படி பொதுச்சேவையாக மாறி மக்களுக்கு கண்ணியத்தை ஏற்படுத்தியது என்பது குறித்து தீர்மானத்தில் விளக்கப்பட்டது.
- போக்குவரத்து, சரக்குப் போக்குவரத்து துறைகளில் ஆராய்ச்சி, திட்டமிடல், மதிப்பீடு, கண்காணித்தல் ஆகியவற்றை வலுப்படுத்துவதற்காக ஒருங்கிணைந்த போக்குவரத்து, சரக்கு போக்குவரத்து ஆணையம் என்ற சிறப்பு நோக்க நிறுவனத்தை அமைக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
- போக்குவரத்துத் தொடர்பான பல்வேறு அமைச்சகங்கள், முகமைகளுக்கு இடையே உரிய திட்டமிடல் இல்லாததால் நீண்ட காலமாக நிலவும் சவால்களுக்கு தீர்வு காண்பதை இந்த ஒப்புதல் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- சிறந்த ஒருங்கிணைப்பு, பல்வேறு போக்குவரத்து மாதிரிகளை ஒருங்கிணைப்பதை ஊக்குவிப்பதன் மூலம் நாட்டில் போக்குவரத்து உள்கட்டமைப்பு மேம்பாட்டின் செயல்திறன், நீடித்த தன்மை, பயன் ஆகியவற்றை ஒருங்கிணைந்த போக்குவரத்து, சரக்குப் போக்குவரத்து ஆணையம் மேம்படுத்தும்.
- இந்த ஆணையம் ஒருங்கிணைந்த போக்குவரத்து, சரக்குப் போக்குவரத்து திட்டமிடல், ஆராய்ச்சி, திட்ட மதிப்பீடு, கண்காணிப்பு, கொள்கை ஆதரவு, தரவு பகுப்பாய்வு ஆகியவற்றுக்கான உயர்நிலை அமைப்பாகச் செயல்படும்.
- சாலைகள், ரயில்வே, துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து, உள்நாட்டு நீர்வழிகள், நகர்புறப் போக்குவரத்து, சரக்குப் போக்குவரத்து ஆகியவற்றை உள்ளடக்கிய பத்தாண்டுகள் அல்லது அதற்கு மேலான காலத்தைக் கொண்ட விரிவான தேசியப் போக்குவரத்து முதன்மை திட்டத்தை இந்த ஆணையம் தயாரிக்கும்.
- ரூ.500 கோடி அல்லது அதற்கு அதிகமான செலவுடைய மத்திய அரசின் உள்கட்டமைப்பு திட்டங்களைத் தொழில்நுட்ப மதிப்பீட்டை ஆணையம் மேற்கொள்ளும்.

