//
Type Here to Get Search Results !

28th OCTOBER 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

28th OCTOBER 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

கேலோ இந்தியா விளையாட்டு உபகரணங்கள் உற்பத்தி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • கேலோ இந்தியா விளையாட்டு உபகரணங்கள் உற்பத்தித் திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இத்திட்டம் 2026 முதல் 2033 - 34-ம் நிதியாண்டு வரை ரூ.1,856.67 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது. உலகளாவிய விளையாட்டு உபகரணங்கள் உற்பத்தித் துறையில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்தவதையும், அதற்கான முதலீடு, உற்பத்தி, புதுமைக் கண்டுபிடிப்பு, ஏற்றுமதி ஆகியவற்றை ஊக்குவிப்பதையும் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2026 - 27-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இத்திட்டம், முதலீடு, தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல், ஆராய்ச்சி, புதுமைக் கண்டுபிடிப்பு, திறன் மேம்பாடு, தரச்சான்றிதழ், சந்தை மேம்பாடு ஆகியவற்றிற்கு ஆதரவளிப்பதன் மூலம் நாட்டின் விளையாட்டு உபகரணங்கள் உற்பத்தித் தளத்தை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டம் உலகளாவிய போட்டித்தன்மைமிக்க விளையாட்டு உபகரணங்கள் தொழில்துறை வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதோடு உலகளவில் இந்தியாவின் நிலையையும் வலுப்படுத்தும்.
  • கேலோ பாரத் நிதி 2025, மேக் இன் இந்தியா, தற்சார்பு இந்தியா ஆகியவற்றின் தொலைநோக்குப் பார்வையிலும் இணைந்துள்ள இத்திட்டம், முதலீடுகளை ஈர்க்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், உள்நாட்டு உற்பத்தித் திறன்களை வலுப்படுத்தவும், விளையாட்டு உபகரணங்களின் உலகளாவிய போட்டித்தன்மையை மேம்படுத்தவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியும், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணமும் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியும், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணமும் கூடுதல் தவணையாக வழங்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு  இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
  • விலைவாசி உயர்வை ஈடுகட்டும் வகையில், அடிப்படை ஊதியம் / ஓய்வூதியத்தில் தற்போதுள்ள 60 சதவீதத்துடன் கூடுதலாக 3 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும். இந்த அகவிலைப்படி/ அகவிலை நிவாரணம் 01.07.2026 முதல் அமல்படுத்தப்படும்.
  • இந்த அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண உயர்வு காரணமாக, மத்திய அரசிற்கு ஆண்டொன்றுக்கு மொத்தம் ரூ.10,016.10 கோடி கூடுதல் செலவு ஏற்படும். இதன் மூலம், 48.54 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.71 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவர்.
  • இந்த உயர்வு, 7-வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பரிந்துரைகளுக்கு ஏற்ப வழங்கப்படுகிறது.
இரும்புப் பெட்டகம் உற்பத்தி ஊக்குவிப்பு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை 2039 – 40-ம் நிதியாண்டு வரை ரூ. 10,000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ள இரும்புப் பெட்டகம் உற்பத்தி ஊக்குவிப்பு திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • நாட்டில் உலகளாவிய போட்டித்தன்மைமிக்க இரும்புப் பெட்டக உற்பத்தி சூழலை உருவாக்குதல், இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைத்தல் ஆகியவற்றை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. 
  • புதிய உற்பத்தி வசதிகளை ஏற்படுத்துவதற்கும், தற்போதுள்ள இரும்புப் பெட்டக உற்பத்திப் பிரிவுகளை விரிவுபடுத்துவதற்கும் இத்திட்டம் ஆதரவளிக்கும். இந்த இரும்புப் பெட்டக உற்பத்தித் திட்டம் குறித்து 2026 – 27-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
  • புதிய இரும்புப் பெட்டக உற்பத்தி நிறுவனங்களை அமைப்பதற்கும், ஏற்கனவே உள்ள உற்பத்தித் திறனை விரிவுபடுத்துவதற்கும் இரும்புப் பெட்டக உற்பத்தியாளர்களுக்கு ஆண்டுக்கு 3 சதவீத வட்டி மானியம் அளிக்கப்படும். இதற்காக ரூ.859 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • உலகளாவிய கப்பல் போக்குவரத்து தர நிலைகளின்படி உற்பத்தி செய்யப்பட்டு தகுதியுடைய இரும்புப் பெட்டக உற்பத்தியாளர்களால் விற்பனை செய்யப்படும் அனைத்து இரும்புப் பெட்டகத்திற்கும் செயல்பாட்டு செலவின உறுதி வழங்கப்படும். 
  • இதற்காக ரூ.8,891 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது உற்பத்தி செலவினங்களுக்கு இடையேயான இடைவெளியை குறைக்கும். உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் இரும்புப் பெட்டகங்களுக்கான போட்டித்தன்மையை மேம்படுத்த உதவும்.
  • பரிசோதனை வசதி, சான்றளித்தல் வசதிகள் அமைப்பதற்கு நிதியுதவி அளிக்க ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம், உள்நாட்டு இரும்புப் பெட்டக உற்பத்தித் திறன் ஆண்டுக்கு 10 மடங்கு அதிகரிக்கும். 
  • நேரடியாக 3 ஆயிரம் வேலைவாய்ப்புகளும் மறைமுகமாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளும் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமரின் வளர்ச்சியடைந்த கிராம தன்னாட்சித் திட்டத்தை மத்திய நிதியுதவித் திட்டமாக அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குத் தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • பிரதமரின் வளர்ச்சியடைந்த கிராம தன்னாட்சித் திட்டத்தை மத்திய நிதியுதவித் திட்டமாக அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குத் தொடர பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு  ஒப்புதல் அளித்துள்ளது.
  • வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தேசிய தொலைநோக்குப் பார்வையுடன் இணையும் வகையில், நிர்வாகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு நவீன முன்முயற்சியாக இத்திட்டம் அமையும்.
  • இத்திட்டம் 2026-27 முதல் 2030-31 வரை ஐந்து ஆண்டு காலத்திற்கு (பதினாறாவது நிதிக் குழுவின் காலத்திற்கு இணையாக) செயல்படுத்தப்படும்.
  • இத்திட்டத்திற்கான மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.7,395.55 கோடியாகும். இதில் மத்திய அரசின் பங்களிப்பாக ரூ.4,869.48 கோடியும், மாநிலங்களின் பங்களிப்பாக ரூ.2,526.07 கோடியும் அடங்கும்.
  • நாடு முழுவதும் உள்ள 2.55 லட்சத்திற்கும் அதிகமான பஞ்சாயத்து அமைப்புகள், பாரம்பரிய உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்த, 32 லட்சம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், பஞ்சாயத்துப்  பணியாளர்கள், சம்பந்தப்பட்ட பிற தரப்பினர் இத்திட்டத்தின் நேரடிப் பயனாளிகளாக இருப்பர்.
  • இத்திட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் ஒவ்வொரு நிகழ்வும் குறைந்தது 1 கோடி குடிமக்களைச் சென்றடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel