//
Type Here to Get Search Results !

22nd OCTOBER 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

 TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

22nd OCTOBER 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

யமுனை ஆறு சீரமைப்பு தொடர்பான பணிகளை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தொடங்கி வைத்தார்

  • புதுதில்லியில் யமுனை ஆற்றை சீரமைப்பது தொடர்பான ரூ.8,941 கோடி மதிப்பிலான திட்டங்களின் தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் மத்திய உள்துறை, கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா கலந்துகொண்டார்.
  • இந்நிகழ்ச்சியில் தில்லி துணைநிலை ஆளுநர் தரன்ஜித் சிங் சாந்து, முதலமைச்சர் திரு ரேகா குப்தா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
  • அப்போது உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, யமுனை ஆற்றை சுத்திகரிப்பதற்காக சுமார் ரூ.9,000 கோடி மதிப்பிலான முக்கிய திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டதாகவும், சில திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டதாகவும் கூறினார்.
பாரா ஆசியன் விளையாட்டுப் போட்டிகள் 2026 - 4-ஆம் நாள் 
  • 2026 ஆம் ஆண்டிற்கான பாரா ஆசியன் விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
  • இந்தியா இதுவரை 20 தங்கம், 26 வெள்ளிப் பதக்கங்களையும், 41 வெண்கலப் பதக்கங்களையும் வென்றுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்தப் பதக்கப் பட்டியலில் இந்தியா 5 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
  • மகளிர் வட்டு எறிதல் F54 பிரிவில் சுவர்ணா ராஜ், 15.66 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார்.
  • மகளிர் 400 மீட்டர் T47 பிரிவில் அஞ்சனாபென் பும்பாடியா தங்கப் பதக்கம் வென்றார்.
  • ஆடவர் உயரம் தாண்டுதல் T63 பிரிவில், சைலேஷ் குமார் 1.89 மீட்டர் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார்.
  • ஆடவர் உயரம் தாண்டுதல் பிரிவில் வருண் பாட்டி வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இதே பிரிவில் ராகுல் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
  • மகளிர் 400 மீட்டர் T12 ஓட்டப் பந்தயத்தில், தேஜல்பன் டாமோர் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
  • ஆடவர் 400 மீட்டர் T47 இறுதிப் போட்டியில் திலீப் காவிட் தங்கம் வென்றார்.
  • ஆடவர் 50 மீட்டர் ஃப்ரீஸ்டைல் S13 இறுதிப் போட்டியில், ரவி கார்த்திக் புடிகினா வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
  • மகளிர் 400 மீட்டர் T11 இறுதிப் போட்டியில் ராவணி வலசனைனி வெண்கலப் பதக்கம் வென்றார்.
  • ஆடவர் நீளம் தாண்டுதல் T44/T62/T64 இறுதிப் போட்டியில் சோலைராஜ் தர்மராஜ் தங்கப் பதக்கத்தை வென்றார்.
  • காம்பவுண்ட் மகளிர் வில்வித்தை தனிநபர் பிரிவில் ஷீத்தல் தேவி தங்கப் பதக்கத்தை வென்றார்.
  • காம்பவுண்ட் கலப்பு வில்வித்தை பிரிவில் ஷீத்தல் தேவி மற்றும் டோமன் குமார் ஜோடி தங்கப் பதக்கத்தை வென்றனர்.
  • மகளிர் W1 பிரிவின் இறுதிப் போட்டியில் ஸ்வாதி சௌத்ரி. வெள்ளிப் பதக்கம் வென்றார்.
  • ஆடவர் ஒற்றையர் SL4 பிரிவில் சுஹாஸ் யதிராஜ் வெண்கலப் பதக்கம் வென்றார்.
  • ஆடவர் SL4 ஒற்றையர் பிரிவில் அபிஜீத் சகுஜா வெண்கலம் வென்றார்.
  • மகளிர் ஒற்றையர் SU5 பிரிவில் மனிஷா ராமதாஸ் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
  • மகளிர் ஒற்றையர் SL3 பிரிவில் சஞ்சனா குமாரி வெண்கலப் பதக்கம் வென்றார்.
  • SH6 கலப்பு இரட்டையர் பிரிவில் நித்யா ஸ்ரீ சுமதி சிவன் மற்றும் கிருஷ்ணா நகர் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.
  • ஆடவர் இரட்டையர் பிரிவில் சூர்ய காந்த் யாதவ் மற்றும் நவீன் சிவகுமார் வெண்கலப் பதக்கம் வென்றனர்.
  • கலப்பு இரட்டையர் SL3-SU5 பிரிவில் மனிஷா ராம்தாஸ் மற்றும் பிரமோத் பகத் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.
  • ஆடவர் 400மீ ஃப்ரீஸ்டைல் எஸ்10 பிரிவில் கபில் குமார், வெள்ளிப் பதக்கம் வென்றார்.
  • ஆண்களுக்கான 100 மீட்டர் மார்பு நீச்சல் SB9 பிரிவில் சஸ்வாதிக் பாட்டீல், வெண்கலப் பதக்கம் வென்றார்.
  • ஆடவர் 100 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் S7 இறுதிப் போட்டியில், தேஜஸ் நந்தகுமார் வெண்கலப் பதக்கம் வென்றார்.
  • XD7 பிரிவு கலப்பு இரட்டையர் பிரிவின் பவினா படேல் மற்றும் ஷுபம் வத்வா வெண்கலப் பதக்கம் வென்றனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel