//
Type Here to Get Search Results !

2026ம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு / NOBEL PRIZE IN ECONOMICS 2026

2026ம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு / NOBEL PRIZE IN ECONOMICS 2026
  • 2026ம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு / NOBEL PRIZE IN ECONOMICS 2026: 2026-ம் ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் நினைவுப் பரிசு அமெரிக்கப் பொருளாதார அறிஞர்களான ராபர்ட் இ.ஹால் மற்றும் மைக்கேல் வுட்ஃபோர்டு ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 
  • பொருளாதார ஏற்ற இறக்கங்களைச் சமாளிப்பதற்கும், பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதற்கும் உதவும் ஆய்வு மாதிரிகளை உருவாக்கியதில் இவர்களின் பங்களிப்பைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

யார் இந்த இரு அறிஞர்கள்?

  • 2026ம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு / NOBEL PRIZE IN ECONOMICS 2026: ராபர்ட் இ. ஹால், அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்துடன் தொடர்புடையவர். 
  • மைக்கேல் வுட்ஃபோர்ட், நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய பொருளாதார வல்லுநர் ஆவார்.
  • குடும்பங்கள் மற்றும் நிறுவனங்கள் எவ்வாறு செலவு செய்கின்றன, முதலீடு செய்கின்றன, பொருளாதார முடிவுகளை எடுக்கின்றன என்பதைக் கருத்தில் கொண்டு, ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தின் செயல்பாட்டைப் புரிந்துகொள்வதற்கான ஆய்வுகளில் இருவரும் முக்கியப் பங்களிப்புகளைச் செய்துள்ளனர்.

பொருளாதார நிலைப்படுத்தலில் முக்கியப் பங்களிப்பு

  • 2026ம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு / NOBEL PRIZE IN ECONOMICS 2026: பணவீக்கம், எரிசக்தி நெருக்கடி, நுகர்வோர் செலவினங்களில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் போன்றவை ஒரு நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கக்கூடும். 
  • இத்தகைய சூழல்களில் பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதற்கான கொள்கைகளை உருவாக்க அரசுகளுக்கும் மத்திய வங்கிகளுக்கும் பொருளாதார மாதிரிகள் உதவுகின்றன.
  • பொருளாதாரத்தை ஒட்டுமொத்தமாக மட்டும் ஆய்வு செய்வதற்குப் பதிலாக, குடும்பங்கள் மற்றும் நிறுவனங்களின் தனிப்பட்ட முடிவுகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ளும் அணுகுமுறையை ஹால் மற்றும் வுட்ஃபோர்டின் ஆய்வுகள் வலுப்படுத்தின. 
  • இந்த அணுகுமுறை, பொருளாதாரக் கொள்கைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளவும், நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளைத் திட்டமிடவும் உதவுகிறது.

ENGLISH

  • NOBEL PRIZE IN ECONOMICS 2026: The Nobel Memorial Prize in Economic Sciences for 2026 has been awarded to American economists Robert E. Hall and Michael Woodford.
  • The award recognizes their contributions in developing research models that help manage economic fluctuations and stabilize the economy.

Who are these two scholars?

  • NOBEL PRIZE IN ECONOMICS 2026: Robert E. Hall is affiliated with Stanford University in California, USA, while Michael Woodford is an economist associated with Columbia University in New York.
  • Both have made significant contributions to understanding the functioning of the overall economy by analyzing how households and firms spend, invest, and make economic decisions.

Key contribution to economic stabilization

  • NOBEL PRIZE IN ECONOMICS 2026: Factors such as inflation, energy crises, and sudden shifts in consumer spending can impact a nation's economy. Economic models assist governments and central banks in formulating policies to stabilize the economy under such conditions.
  • Hall and Woodford’s research strengthened an approach that rather than examining the economy solely in aggregate terms also takes into account the individual decisions made by households and firms. 
  • This approach helps in understanding the mechanics of economic policies and in planning measures to address economic crises.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel