
11th OCTOBER 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் ரூ.13,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
- ரூ.4,900 கோடி செலவில் முடிக்கப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ஆம் கட்டமான பூந்தமல்லி - வடபழனி வழித்தடத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
- சென்னை ஐஐடிக்கு வரும் பிரதமர், அங்கே உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்கிறார். தொடர்ந்து, சுதா கோபாலகிருஷ்ணன் மூளை ஆராய்ச்சி மையத்தைப் பார்வையிட்டார்.
- சென்னை ஐஐடி வளகாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் விஜய்யுடன் இணைந்து மொத்தம் ரூ.13,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார்.
- மேலும், நெடுஞ்சாலைகள், ரயில்வே, துறைமுகங்கள் உள்ளிட்ட துறைகளின் திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் சுமார் ரூ.3,700 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

