
பட்டணப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் குறித்த அரசாணை வெளியீடு
- தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கடந்த 3 ஆம் தேதி (03.09.2026) அன்று சட்டமன்ற விதி 110-இன் கீழ், சென்னையில் சுமார் 1,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சட்டப்பேரவையுடன் கூடிய புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
- இந்த அறிவிப்பின் தொடர்ச்சியாக, பட்டணப்பாக்கத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், சென்னை மாநகராட்சி மற்றும் வருவாய்த்துறை ஆகியவற்றுக்குச் சொந்தமான மொத்தம் 25.55 ஏக்கர் நிலங்கள் புதிய கட்டிட வளாகம் கட்டுவதற்காக அடையாளம் காணப்பட்டன.
- இந்நிலையில் சென்னையில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகக் கட்டிட வளாகம் கட்டுவதற்குத் தமிழ்நாடு அரசு கொள்கை அளவிலான ஒப்புதல் வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது.
- அதில் இத்திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை மதிப்பீடுகளுடன் சேர்த்து மூன்று மாதங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு பொதுப்பணித்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
- மேலும், இதற்கான கட்டிடக் கலை ஆலோசனை நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பதற்கும், ஆரம்ப மற்றும் இறுதி கட்ட கட்டிட வரைபடங்கள் மற்றும் வடிவமைப்புகளை இறுதி செய்வதற்கும் மூன்று பிரத்யேகக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, இன்று ரயில்வே அமைச்சகத்தின் ரூ.10,021 கோடி மதிப்பிலான ஐந்து திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
- தமிழ்நாட்டில், அரக்கோணம் – ரேணிகுண்டா இடையே, 77 கிலோ மீட்டர் தொலைவிற்கு 3, 4-வது ரயில் வழித்தடம் அமைத்தல், ஓசூர் – ஓமலூர் இடையே, 147 கி மீ தொலைவிற்கு இரட்டை வழித்தடம் அமைத்தல், சேலம் – கரூர் – திண்டுக்கல் இடையே, 159 கி மீ தொலைவிற்கு இரட்டை வழித்தடம் அமைத்தல் ஆகிய மூன்று திட்டங்கள் இதில் அடங்கும்.
- மேலும், வைட்பீல்ட் – பங்காரப்பேட்டை இடையே, 47 கி மீ தொலைவிற்கு 3, 4-வது ரயில் பாதை அமைத்தல், செகந்திராபாத் (காட்கேசர்) – காசிபேட் இடையே, 110 கி மீ தொலைவிலான பல-தட ரயில் பாதைகள் அமைத்தல் ஆகியவை அடங்கும்.
- புதிய ரயில் வழித்தடங்கள், போக்குவரத்தை வெகுவாக மேம்படுத்த உதவிடும். இதன் மூலம், பயணிகளிடையே, ரயில்வேத் துறையின் செயல்பாட்டுத் திறன், சேவையின் நம்பகத்தன்மை ஆகியவை அதிகரிக்கும்.
- பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, இன்று ரயில்வே அமைச்சகத்தின் மூன்று திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
- இத்திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ.10,783 கோடி ஆகும். இந்தத் திட்டத்தில், கரக்பூர் – ஜார்சுகுடா (பாக்தேஹி) 4-வது வழித்தடம், கட்னி – பென்ட்ரா சாலை 4-வது வழித்தடம், பிலாஸ்பூர் (உஸ்லாபூர்) – பென்ட்ரா சாலை 3-வது வழித்தடம் ஆகியவை அடங்கும்.
- ரயில் வழித்தடத்தை மேம்படுத்தும் பணிகள், பயணிகளின் போக்குவரத்தை கணிசமாக அதிகரிக்கச் செய்வதுடன், ரயில்வேத் துறையின் செயல்பாட்டுத் திறனையும், சேவை சார்ந்த நம்பகத்தன்மையையும் அதிகரிக்க உதவிடும்.
- இந்த பலவழி ரயில் மேம்பாட்டுத் திட்டங்கள், செயல்பாடுகளை நெறிப்படுத்தவும், கூட்ட நெரிசலைக் குறைக்கவும் வழிவகுக்கும்.

