
6th SEPTEMBER 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
புதிய உலக வரைபடத்தை உருவாக்க வேண்டும் என்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு
- 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபையில் டோகோ முன்மொழிந்த இந்தத் தீர்மானத்தின் மீது கடந்த வெள்ளிக்கிழமை வாக்கெடுப்பு நடைபெற்றது.
- வாக்கெடுப்பில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 164 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. எஸ்டோனியா, ஜார்ஜியா, லித்துவேனியா, மால்டோவா, செர்பியா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
- அதேநேரத்தில், தீர்மானத்தை எதிர்த்து அமெரிக்கா மட்டும் வாக்களித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளாக உலக வரைபடங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் மெர்கேட்டர் (Mercator) வரைபட முறையே இந்த விவாதத்தின் மையமாகியுள்ளது.
- 16-ஆம் நூற்றாண்டில் கடல் பயணங்களுக்கு உதவும் வகையில் புவியியலாளர் ஜெரார்டஸ் மெர்கேட்டர் உருவாக்கிய இந்த வரைபடம், இன்றும் கல்வி, ஊடகம் மற்றும் பல்வேறு அதிகாரப்பூர்வ பயன்பாடுகளில் பரவலாக இடம்பெற்று வருகிறது.
- குறிப்பாக பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள பகுதிகள் ஒப்பீட்டளவில் சிறியதாகவும், துருவங்களை நோக்கிய பகுதிகள் பெரிதாகவும் காட்சியளிக்கின்றன.
- இதனால் ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் தெற்காசியா போன்ற பகுதிகளின் உண்மையான அளவு குறைவாகத் தோன்றுவதாக கூறப்படுகிறது.

