//
Type Here to Get Search Results !

3rd SEPTEMBER 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

3rd SEPTEMBER 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் முதன்மை மொழியாக உருவாக்க பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றம்
  • தமிழை சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மையான நீதிமன்ற மொழியாக அங்கீகரிக்க வேண்டுமென்றும், உயர் நீதிமன்றத்தில் வழங்கப்படும் தீர்ப்புரைகள், தீர்ப்பாணைகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் அனைத்தும் தமிழில் வழங்கும் கட்டமைப்பை உருவாக்க வேண்டுமென்றும் சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  • மேலும், அரசியலமைப்புச் சட்ட Article 348(2) மற்றும் ஆட்சி மொழிகள் சட்டம், 1963, பிரிவு 7 ஆகியவற்றின் கீழ் மாநில ஆளுநரால் அனுப்பப்படும் முன்மொழிவுகளின் மீது தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென்றும் ஒன்றிய அரசை வலியுறுத்தி அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் விஜய் உரையாற்றினார்.
சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் 
  • தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று காவல்துறை-தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. 
  • அப்போது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110-இன் கீழ், முதல்-அமைச்சர் விஜய் பல்வேறு திட்டங்களை அறிவித்தார். 
  • அதன்படி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் சென்னையில் உலகத்தரம் வாய்ந்த தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம் அமைக்கப்படும்.
  • தமிழ்நாட்டில் ஒரு புதிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் உருவாக்கப்படும். இந்த நகரத்தில் சர்வதேச தரத்திலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் பந்தயத்தடம், அதற்கான நவீன உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பயிற்சி வசதிகள் ஏற்படுத்தப்படும்.
  • சென்னையில் நவீன வசதிகளுடன் கூடிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டட வளாகம் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நீண்ட தூரம் பறந்து சென்று இலக்கை தாக்கும் 'ககன்தக் -243' குண்டு வெற்றிகரமாக சோதனை
  • விமானத்தில் இருந்து எதிரி நாட்டு படைகள் மீது தாக்குதல் நடத்துவதற்கான குண்டுகள், பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. 
  • நீண்ட தூரம் பறந்து சென்று இலக்கை துல்லியமாக தாக்கும் இந்த குண்டை உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கான முயற்சியை மத்திய அரசு தொடங்கியுள்ளது. 
  • அதன் ஒரு பகுதியாக, ஜே.எஸ்.ஆர். டைனமிக்ஸ் மூலம் சறுக்கு குண்டுகள் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. விமானத்திலிருந்து ஏவப்பட்டதும், காற்று இயக்கத்தின் உதவியுடன் இலக்கை நோக்கி செல்லும் வகையில் இந்த குண்டுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
  • 12 கிலோமீட்டர் உயரத்தில் பறக்கக்கூடிய விமானத்தில் இருந்து குண்டுகளை வீசினால், அது 144 கிலோமீட்டர் முதல் அதிகபட்சமாக 180 கிலோமீட்டர் வரை தொலைவில் உள்ள இலக்குகளை சரியாக தாக்கும். 
  • இதனால், எதிரி நாடுகளின் வான்வெளிக்கு செல்லாமலேயே, அந்த நாடுகளில் இருக்கும் இலக்குகளை தாக்க முடியும். ககன்தக் -243 சறுக்கு குண்டு சோதனை வெற்றிகரமாக செய்யப்பட்டதன் மூலம் உள்நாட்டு ராணுவ தளவாட உற்பத்தி திறன் மேலும் வலுவடைந்துள்ளது.
சட்ட மாணவர்களை தண்டிக்கும் அதிகாரம் பார் கவுன்சிலுக்கு இல்லை - உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
  • ஹைதராபாத்தில் உள்ள நல்சார் சட்டப் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமை விருந்தினராக பங்கேற்க இருந்ததை எதிர்த்து அந்தப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
  • இதையடுத்து, நல்சார் சட்டப் பல்கலைக்ககழகத்தின் இந்த ஆண்டில் பட்டம் பெற உள்ள சட்ட மாணவர்களுக்கான பதிவை நிறுத்தி வைக்கவும், இந்திய தலைமை நீதிபதிக்கு எதிராக நடத்தப்பட்டதாகக் கூறப்படும் பிரச்சாரம் குறித்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தவும் பார் கவுன்சில் ஆஃப் இந்தியா தலைவர் மனன் குமார் மிஸ்ரா உத்தரவிட்டிருந்தார்.
  • எனினும், ஒரு மணி நேரத்துக்குள்ளாக அவர் தனது உத்தரவை திரும்பப் பெற்றார். மேலும், தனது உத்தரவுக்காக மாணவர்களிடம் அவர் மன்னிப்பு கோரினார். 
  • எனினும், இவ்வாறு உத்தரவு பிறப்பிப்பதற்கு பிசிஐ-க்கு அதிகாரம் உள்ளதா என்பதை கேள்விக்கு உட்படுத்தி நல்சார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களான மஹிரா சூட், அபிஷேக் திவாரி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
  • இந்த வழக்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. 
  • அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.பரமேஸ்வர், உத்தரவு திரும்பப் பெறப்பட்டிருந்தாலும், எந்த அதிகாரத்தின் கீழும் எந்த சட்ட விதியின் கீழும் பிசிஐ தலைவர் இந்த உத்தரவுகளை பிறப்பித்தார் என்பதை ஆராய்வது அவசியம் என்று வாதிட்டார்.
  • தான் பிறப்பித்த உத்தரவு உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டதாகவும், பார் கவுன்சில் ஆஃப் இந்தியா கூட்டத்துக்குப் பிறகு அந்த விவகாரம் முடித்து வைக்கப்பட்டதாகவும் மனன் குமார் மிஸ்ரா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
  • பின்னர் நீதிபதிகள் தாங்கள் அளித்த தீர்ப்பில், 'சட்ட மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இந்திய பார் கவுன்சிலுக்கோ அல்லது மாநில பார் கவுன்சிலுக்கோ எந்த அதிகாரமும் இல்லை. 
  • வழக்கறிஞர்கள் சட்டம் 1961-ன் படி பிசிஐ-க்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள், பதிவு செய்யப்பட்ட வழக்கறிஞர்களுக்கு மட்டுமே பொருந்தும். 
  • ஒரு சட்ட பட்டதாரி வழக்கறிஞராகப் பதிவு செய்துகொண்ட பிறகு மட்டுமே அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் அதிகார வரம்பு பார் கவுன்சிலுக்கு கிடைக்கிறது.
  • சட்ட மாணவர்களைப் பொறுத்தவரை, அவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் அவர்கள் படிக்கும் கல்வி நிறுவனம் அல்லது நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட தகுதியான அதிகாரி ஆகியோரிடம் மட்டுமே உள்ளது. மனன் குமார் மிஸ்ரா பிறப்பித்த உத்தரவுகள் எவ்வித சட்டப்பூர்வ அதிகாரமும் இன்றி பிறப்பிக்கப்பட்டவை' என்று தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel