//
Type Here to Get Search Results !

30th SEPTEMBER 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

30th SEPTEMBER 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

2026ஆம் ஆண்டிற்கான 22-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 11வது நாள்
  • ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், இந்தியா இதுவரை மொத்தம் 60 பதக்கங்களை (10 தங்கம், 21 வெள்ளி, 29 வெண்கலம்) வென்றுள்ளது; தற்போது பதக்கப் பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது.
  • வில்வித்தை - காம்பவுண்ட் ஆண்கள் அணிகள் பிரிவில் சீனாவை வீழ்த்தி இந்தியா தங்கப் பதக்கம் வென்றது.
  • துப்பாக்கி சுடுதல் - 'டிராப்' கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் நீரு தண்டா மற்றும் கைனன் செனாய் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர்.
  • வில்வித்தை - காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் தென் கொரியாவை வீழ்த்தி இந்தியா தங்கப் பதக்கம் வென்றது.
  • வில்வித்தை - காம்பவுண்ட் பெண்கள் அணிகள் பிரிவில் (ஜோதி வென்னம், சிக்தா தனிபார்த்தி, ப்ரிதிகா பிரதீப் அடங்கிய அணி) சீனாவை 238-234 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி இந்தியா தங்கப் பதக்கம் வென்றது.
  • குத்துச்சண்டை - பெண்கள் 60 கிலோ எடைப்பிரிவு அரையிறுதியில் சீனாவின் யாங் செங்யுவிடம் தோல்வியடைந்த பிரியா, வெண்கலப் பதக்கம் வென்றார்.
  • குத்துச்சண்டை - ஆண்கள் 90 கிலோ எடைப்பிரிவு அரையிறுதியில் உஸ்பெகிஸ்தானின் துராபெக் கபிபுல்லேவிடம் தோல்வியடைந்த கபில் பொகாரியா, வெண்கலப் பதக்கம் வென்றார்.
  • மல்யுத்தம் - கிரிகோ-ரோமன் 87 கிலோ எடைப்பிரிவு வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் பிலிப்பைன்ஸின் கல்லம் ராபர்ட்ஸை வீழ்த்தி சுனில் குமார் வெண்கலப் பதக்கம் வென்றார்.
தில்லியில் போக்குவரத்துக்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு, வரிகள் உட்பட ரூ.1,789.52 கோடி மதிப்பீட்டில் தில்லி காவல்துறையால் செயல்படுத்தப்பட உள்ள போக்குவரத்து மேலாண்மைத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • தில்லியில் சுமூகமானப் போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில் அதற்கான கட்டமைப்புகளை மேம்படுத்த ஏதுவாக இத்திட்டத்தின் கீழ், 42 வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. 
  • இந்தத் திட்டம் 24 மாதங்களில் 3 கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு இதன் செயல்பாடுகளும், பராமரிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.
2027-28 சந்தைப்படுத்துதல் பருவத்தில் ரபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு 2027-28 சந்தைப்படுத்துதல் பருவத்தில் ரபி பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிக்க ஒப்புதல் அளித்துள்ளது.
  • விவசாயிகள், தங்களது விளைப் பொருட்களுக்கு உரிய விலையை உறுதி செய்யும் வகையில், 2027-28 சந்தைப்படுத்துதல் பருவத்தில் ரபி பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
  • அதிகபட்சமாகக் குங்குமப்பூ பயிர், குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.675 என அறிவிக்கப்பட்டுள்ளது. ரேப்சீட், கடுகு பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.413 என அறிவிக்கப்பட்டுள்ளது. 
  • மசூர் பருப்பு, பார்லி, கொண்டைக்கடலை, கோதுமை ஆகியவற்றுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை, முறையே, குவிண்டால் ஒன்றுக்கு ரூ.390, ரூ.136, ரூ.83, ரூ.25 என்ற அளவில் உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  
மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகளுடன் கூடிய மின் விநியோகக் கட்டமைப்பை மேம்படுத்தும் 3-ம் கட்ட பசுமை மின் விநியோக வழித்தடத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு பசுமை மின் விநியோக வழித்தடம் அமைப்பதற்கான 3-வது கட்ட திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. 
  • இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு இடையே 135 ஜிகாவாட் வரையிலான புதுப்பிக்கத்தக்க மின் விநியோக கட்டமைப்புகளை வலுப்படுத்த உதவிடும்.
  • புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியாளர்கள் அல்லது மின் கட்டமைப்பு நெகிழ்வுத் தன்மைக்கு ஏற்ப முக்கியத்துவம் வாய்ந்த பிற இடங்களில் 1 மணி நேரத்திற்கு 50 ஜிகாவாட் திறன் கொண்ட மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகளை நிறுவுவதற்கும் இந்தத் திட்டம் வகை செய்கிறது.
  • 2032-33-ம் நிதியாண்டிற்குள் இத்திட்டத்தை செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ. 1,86,405 கோடியாகும். 
  • இதில் மாநிலங்களுக்கு இடையேயான மின் விநியோகக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு ரூ. 1,36,378 கோடியும், 50 கிகாவாட் திறன் கொண்ட மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகளை நிறுவ ரூ.50,000 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக ரூ.54,082 கோடியை மத்திய அரசு வழங்குகிறது. 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel