//
Type Here to Get Search Results !

28th SEPTEMBER 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

28th SEPTEMBER 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

மதுரை அரசு மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
  • தமிழக வெற்றிக் கழக தலைவர் முதல்வர் விஜய், சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் மூலம் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என அறிவித்தார். 
  • இதன்படி, தமிழக அரசின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை, முதல்வர் விஜய் இன்று மதியம் 12 மணியளவில் மதுரை அரசு மைய மருத்துவமனையில் தொடங்கி வைத்தார். அங்கு 37 குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை வழங்கினார்.
22வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 - 9வது நாள்
  • ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், இந்தியா இதுவரை மொத்தம் 45 பதக்கங்களை (4 தங்கம், 20 வெள்ளி, 21 வெண்கலம்) வென்றுள்ளது; தற்போது பதக்கப் பட்டியலில் 12-வது இடத்தில் உள்ளது.
  • தடகளம் - ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் ரோஹித் யாதவ் வெள்ளிப் பதக்கத்தையும், யாஷ் வீர் சிங் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
  • தடகளம் - ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் இறுதிப் போட்டியில் ஸ்ரீசங்கர் முரளி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
  • தடகளம் - ஆண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டப்பந்தய இறுதிப் போட்டியில் குல்வீர் சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
  • துப்பாக்கி சுடுதல் - பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் தனிநபர் பிரிவு இறுதிப் போட்டியில் ஈஷா சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
  • குராஷ் (Kurash) - பெண்களுக்கான -78 கிலோ எடைப்பிரிவு அரையிறுதியில் தென் கொரியாவின் மோ சுமின்னிடம் தோல்வியடைந்த பிங்கி பல்ஹாரா, வெண்கலப் பதக்கம் வென்றார்.
  • தடகளம் - பெண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப்பந்தய இறுதிப் போட்டியில் வித்யா ராமராஜ் வெண்கலப் பதக்கம் வென்றார்; அனு ராகவன் ஐந்தாவது இடத்தைப் பிடித்தார்.
  • தடகளம் - பெண்களுக்கான 5000 மீட்டர் ஓட்டப்பந்தய இறுதிப் போட்டியில் பருல் சவுத்ரி வெண்கலப் பதக்கம் வென்றார்.
6ம் வகுப்புக்கும் மும்மொழிக் கொள்கையில் விலக்கு - சிபிஎஸ்இக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
  • தேசிய கல்விக் கொள்கை 2020-ன் அடிப்படையில் மும்மொழிக் கொள்கை பின்பற்றப்பட வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. இதில், தொடர்புடைய மாநில மொழி, ஆங்கிலம், மற்றும் ஏதாவது ஓர் இந்திய மொழி ஆகிய மூன்று மொழிகள் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும் என தேசிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது.
  • தேசிய கல்விக் கொள்கையின் இந்த அறிவிப்புக்கு இணங்க, நடப்பு கல்வி ஆண்டு முதலே 6-ம் வகுப்பில் இருந்து மும்மொழி கொள்கை பின்பற்றப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்தது. 
  • அடுத்த கல்வி ஆண்டில் 7ம் வகுப்பு வரையிலும், அதற்கு அடுத்த கல்வி ஆண்டில் 8-ம் வகுப்பு வரையிலும் என படிப்படியாக மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்தது.
  • சிபிஎஸ்இ-யின் மும்மொழி கொள்கையை எதிர்த்து பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது. அவை, தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா, வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (செப்.28) விசாரணைக்கு வந்தது.
  • இது தொடர்பாக நீதிபதிகள் அமர்வு, "சிபிஎஸ்இ 7-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதே விலக்கு 6-ம் வகுப்பு மாணவர்களுக்கும் தரப்படவேண்டும். மாணவர்களுக்கு சிரமத்தை தர விரும்பவில்லை. மாறாக அவர்களுக்கும் தேவையான வசதிகளை அளிக்க விரும்புகிறோம்" என்றது.
  • இப்போது 7,8 மற்றும் 9-ம் வகுப்பு மாணவர்கள் மூன்றாவது மொழியைப் பயின்றால், அவர்கள் 10ம் வகுப்பு செல்லும்போது 3-வது மொழிக்கு சிபிஎஸ்இ வாரியத் தேர்வை எழுத வேண்டிய தேவையில்லை. 
  • சம்பந்தப்பட்ட பள்ளியின் அளவிலேயே மதிப்பீடு செய்யலாம் என்ற நிலை நிலவுகிறது. இந்தச் சலுகையை 6-ம் வகுப்பு மாணவர்களுக்கும் நீட்டிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel