
22nd SEPTEMBER 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்
- முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2022-ஆம் ஆண்டு தொடங்கி வைத்த முதல்வரின் காலை உணவுத் திட்டமானது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களும் பயன்பெறும் வகையில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என்ற பெயரில் விரிவுபடுத்தப்படும் என த.வெ.க அரசு அறிவித்திருந்தது.
- இதற்காக 2026- 2027 ஆம் நிதியாண்டில் ரூ.217.63 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திட்டத்துக்கான மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.724 கோடியாக உள்ளது.
- இந்நிலையில், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய், செவ்வாய்கிழமை தொடங்கி வைத்தார். சென்னை திருவான்மியூர் காந்தி கிராமத்தில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் தொடங்கி வைத்த அவர் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கி அவர்களுடன் அமர்ந்து உணவு உட்கொண்டார்.
- இந்தியா விமானப்படை – ஜப்பான் வான் தற்காப்புப்படை இடையேயான இருதரப்புக் கூட்டு விமானப்படைப் பயிற்சியான வீர் கார்டியன் 2026 ஜோத்பூர் விமானப்படை தளத்தில் 2026 செப்டம்பர் 22 அன்று நிறைவடைந்தது.
- இப்பயிற்சி இருநாட்டு விமானப்படைகளுக்கும் இடையேயான ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கும் உத்திசார் நட்புறவை வலுப்படுத்துவதற்கும் முக்கியத் தளமாக அமைந்தது.
- இந்திய விமானப்படை சார்பில் எஸ்யூ-30 எம்கேஐ, ரஃபேல், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இலகு ரக போர் விமானமான தேஜஸ் உள்ளிட்ட பல்வேறு வகை விமானங்கள் பயன்படுத்தப்பட்டது.
- ஜப்பான் வான் தற்காப்புப்படை எஃப்-2ஏ ரக போர் விமானங்களுடன் பங்கேற்றது. இக்கூட்டுப் பயிற்சி 14 நாட்கள் நடைபெற்றது.
- சிறப்பு விருந்தினர் தினத்தன்று, ஜப்பான் வான் தற்காப்புப்படை தலைமைத்தளபதி ஜெனரல் டேகிரோ மோரிடா, விமானப்படை தலைமைத்தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ பி சிங் ஆகியோர் ஜோத்பூர் விமானப்படை தளத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானத்தை இயக்கினார்கள்.
- 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் 3-ம் நாளில் இந்தியா தனது தங்கப் பதக்கக் கணக்கைத் தொடங்கியது; அதுவும் நாட்டின் மிகவும் விருப்பமான விளையாட்டுப் பிரிவில் அந்த வெற்றி கிடைத்தது. ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மகளிர் கிரிக்கெட் அணி, இறுதிப் போட்டியில் இலங்கையை 147 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, தங்கள் ஆசிய விளையாட்டுப் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டது.
- ஸ்மிருதி மந்தனாவின் அரைசதத்துடன் ஷஃபாலி வர்மா மற்றும் ரிச்சா கோஷ் ஆகியோரின் பயனுள்ள பங்களிப்பும் இணைய, இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் என்ற சாதனை ஸ்கோரை எட்டியது. பின்னர், இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர்கள் இலங்கையின் பேட்டிங் வரிசையைச் சரித்து, அவர்களை 15.4 ஓவர்களில் வெறும் 69 ரன்களுக்கு ஆல்-அவுட் செய்தனர்.
- இந்தத் தங்கப் பதக்கத்துடன் இந்தியாவின் மொத்தப் பதக்க எண்ணிக்கை ஏழாக உயர்ந்தது; இதில் ஐந்து பதக்கங்கள் துப்பாக்கி சுடுதலிலும், ஒன்று எம்.எம்.ஏ (MMA)-விலும் கிடைத்தன. பேட்மிண்டன் பிரிவிலும் இந்தியா ஒரு பதக்கத்தை உறுதி செய்தது;

