//
Type Here to Get Search Results !

1st SEPTEMBER 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

1st SEPTEMBER 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

2026 ஆகஸ்ட் மாத ஜி.எஸ்.டி. வசூல்
  • மத்திய அரசு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் மொத்த ஜி.எஸ்.டி. வசூல் சுமார் 15 சதவீதம் அதிகரித்து, வரலாற்றுச் சாதனையாக ரூ. 1,99,853 கோடியை (சுமார் ரூ. 2 லட்சம் கோடி) எட்டியுள்ளது.
  • கடந்த ஆண்டு (2025) இதே ஆகஸ்ட் மாதத்தில் வசூலான ரூ. 1,74,116 கோடியுடன் ஒப்பிடும்போது, இது 14.8 சதவீத மகத்தான வளர்ச்சியாகும். ஆகஸ்ட் மாதத்தில் மொத்த மத்திய ஜிஎஸ்டி (CGST) வசூல் ரூ.38,413 கோடியாகவும், மாநில ஜிஎஸ்டி (SGST) வசூல் ரூ.46,316 கோடியாகவும் இருந்தது. ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி (IGST) வசூல் ரூ.1.15 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. 
  • வரி ரீஃபனண்ட 68 சதவீதம் அதிகரித்து ரூ.31,795 கோடியை எட்டியுள்ளது.  உள்நாட்டுப் பரிவர்த்தனைகள் மூலமான ஜிஎஸ்டி வருவாய் 9.3 சதவீதம் அதிகரித்து ரூ.1.37 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.
  • இறக்குமதி மூலமான மொத்த ஜிஎஸ்டி வருவாய் 29 சதவீதம் அதிகரித்து ரூ.62,604 கோடியாக உயர்ந்துள்ளது.
நீட் போராட்ட மாணவர்கள் மீதான அனைத்து வழக்குகளையும் ரத்து செய்தது உச்சநீதிமன்றம்
  • நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீது காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் தள்ளுபடி செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அனைத்து வழக்குகளையும் ரத்து செய்துள்ளது. 
  • மத்திய அரசின் இந்த மனுக்களை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், அரசியல் சாசனம் சட்டப்பிரிவு 142 மூலம் வழங்கியுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தது.
  • மாணவர்களின் எஞ்சிய கோரிக்கைகளும் உரிய முறையில் நிறைவேற்றப்படும் என்று மத்திய அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
  • மத்திய அரசின் இந்தச் சாதகமான உத்தரவாதத்தைத் தொடர்ந்து, வரும் செப்டம்பர் 5-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த போராட்டத்தை விலக்கிக் கொள்வதாக CJP கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சி மாநாடு 2026
  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) கூட்டமைப்பில் சீனா, ரஷ்யா, இந்தியா, உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான், ஈரான், பெலாரஸ், கஜகஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. 
  • இந்த கூட்டமைப்பின் உச்சி மாநாடு கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் தொடங்கியது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் உட்பட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று உள்ளனர்.
  • மாநாட்டின் ஒரு பகுதியாக ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான், கிர்கிஸ்தான் அதிபர் சாதிர் ஜபரோவ், அர்மீனியா பிரதமர் நிகோல் பாஷின்யான் ஆகியோரைப் பிரதமர் மோடி தனித்தனியாக சந்தித்துப் பேசினார்.
  • இதைத் தொடர்ந்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை அவர் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.  ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, பயங்கரவாதத்திற்காக அண்டை நாடுகளை மீண்டும் ஒருமுறை கடுமையாகச் சாடினார்.
  • பாகிஸ்தானின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல், பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல், ஆள்சேர்ப்பு, தீவிரமயமாக்கல் மற்றும் பாதுகாப்பான புகலிடங்கள் ஆகியவற்றின் முழுமையான சூழலமைப்பையும் தகர்க்க வேண்டும் என்று கூறி, பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவது பற்றி அவர் பேசினார். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel