
19th SEPTEMBER 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
பிரதமர் நரேந்திர மோடி சுற்றுச்சூழல், பருவநிலை இயக்கவியலின் எதிர்காலம் குறித்த சர்வதேச மாநாடு தொடங்கி வைத்தார்
- பிரதமர் திரு நரேந்திர மோடி, புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் “சுற்றுச்சூழல், பருவநிலை இயக்கவியலின் எதிர்காலம்” குறித்த சர்வதேச மாநாட்டை இன்று (19.09.2026) தொடங்கி வைத்தார்.
- இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இயற்கையுடனான தேசத்தின் ஆழமான வரலாற்றுத் தொடர்பை எடுத்துரைத்தார்.
- பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று (19.09.2026) நடைபெற்ற 20வது வேலைவாய்ப்புத் திருவிழாவில் (ரோஜ்கார் மேளா), பல்வேறு அரசு நிறுவனங்களில் புதிதாக நியமிக்கப்பட்ட 51,000க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு காணொலிக் காட்சி மூலம் பணி நியமனக் கடிதங்களை வழங்கினார்.
- இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், இது ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு அளவற்ற மகிழ்ச்சியைத் தருவதாகவும், இது பல்வேறு அரசு நிறுவனங்களில் புதிதாக நியமிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட கடின உழைப்புக்கும், அவர்களின் பெற்றோர்கள் செய்த பெரும் தியாகங்களுக்கும் ஒரு மரியாதையாக அமைவதாகவும் கூறினார்.
- இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசனை மேற்கொண்ட பிறகு, பல்வேறு உயர் நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளை குடியரசுத்தலைவர் நியமித்துள்ளார்.
- இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், பின்வரும் உயர்நீதிமன்றங்களுக்கு 14 நீதித்துறை அதிகாரிகள், நீதிபதிகள், கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இதன்படி, திருமதி நிவேதிதா அனில் சர்மா, திருமதி நிஷா சகாய் சக்சேனா ஆகியோர் தில்லி உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
- திரு சஞ்சய் சர்மா, திரு பரத் பராஷர், டாக்டர் அதிதி சௌத்ரி, திரு தினேஷ் பட், திரு அருண் பரத்வாஜ் ஆகியோர் தில்லி உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
- திரு யாஷ் பால் போர்னி, ஜம்மு-காஷ்மீர், லடாக் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- திரு மனோஜ் பிரசாத், திரு அகில் குமார், திரு ராம் சர்மா ஆகியோர் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
- திருமதி உஷாராணி, திரு கே எஸ் பரத் குமார், திருமதி நெரலே வி பவானி ஆகியோர், கர்நாடக உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

