
17th SEPTEMBER 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
2024ஆம் ஆண்டு தாதாசாகேப் பால்கே விருதுக்கு கன்னட நடிகர் அனந்த் நாக் தேர்வு
- தேர்வுக் குழு பரிந்துரையின் அடிப்படையில், இந்திய திரைப்படத் துறைக்கு ஆற்றிய பங்களிப்புக்காகவும், பல தலைமுறைகளைக் கடந்து பலருக்கும் உத்வேகம் அளித்த திரைப் பயணத்துக்காகவும் 2024-ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருதுக்கு கன்னட நடிகர் அனந்த் நாக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- குஜராத்தில் செப். 22-ல் நடைபெறவுள்ள 72-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் இவ்விருது வழங்கப்படவுள்ளது.
- டெல்லியில் உள்ள யசோபூமி கன்வென்ஷன் சென்டரில் நடைபெறும் செமிகான் இந்தியா 2026 மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
- மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாடு, துவாரகா பகுதியில் அமைந்துள்ள யசோபூமி கன்வென்ஷன் சென்டரில் தொடங்கியது. மாநாட்டைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி, அங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளைப் பார்வையிட்டார்.
- மேலும், கண்காட்சியில் இடம்பெற்றுள்ள தொழில்நுட்பங்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் குறித்து நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகளிடம் விளக்கங்களையும் கேட்டறிந்தார்.
- "சிலிக்கான் முதல் சிஸ்டம் வரை சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குதல்" என்ற கருப்பொருளில் இந்த மூன்று நாள் மாநாடு நடைபெறுகிறது. இதில் 52 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், 400-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் நிர்வாகிகள் மற்றும் 150-க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் பங்கேற்கின்றனர்.

