//
Type Here to Get Search Results !

14th SEPTEMBER 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

14th SEPTEMBER 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

தமிழ்நாடு அரசு சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் மற்றும் ஏர்ன்ஸ்ட் & யங் (Ernst & Young) நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
  • இங்கிலாந்து, இலண்டன் நகரில் இன்று (14.09.2026), சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் (Samvardhana Motherson International Ltd.,) நிறுவனம் அதன் ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து, வழிகாட்டி நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் சுமார் ரூ.11,000 கோடி முதலீட்டில், வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி, கூட்டிணைப்பு (Assembly) மற்றும் தளவாட வசதிகள் ஆகிய துறைகளில் சுமார் 7,000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கிடும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
  • இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் குழுமத்தின் உலகளாவிய சந்தைப்படுத்தல் மற்றும் தகவல் தொடர்புத் துறைத் தலைவர் பாரி பெயிண்டர் மற்றும் தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தீபக் ஜேக்கப் ஆகியோர் கையெழுத்திட்டு, ஒப்பந்தத்தைப் பரிமாறிக் கொண்டனர்.
  • அதுபோன்று, தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையங்களை (Global Capability Centres - GCCs) விரிவுபடுத்துவதற்கும், நிறுவுவதற்கும் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
  • இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்ட முன்னணி உலகளாவிய தகவல் தொடர்பு நிறுவனம் ஒன்று, தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையத்தை (GCC) அமைப்பதற்கு ஏதுவாக, தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனம், ஏர்ன்ஸ்ட் & யங் (Ernst & Young) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது. 
  • சுமார் 1,000 கோடி ரூபாய் முதலீட்டையும், 2,000-க்கும் மேற்பட்ட உயர் மதிப்புடைய புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் வகையில் அமையவுள்ள இந்த மையம், சென்னையில் உள்ள மவுண்ட் பூந்தமல்லி சாலையில் புதிதாக அறிவிக்கப்பட்ட 'GCC காரிடார்' (GCC corridor) பகுதியில் அமைக்கப்படவுள்ளது.
2026 ஆகஸ்ட் மாதத்திற்கான மொத்த விலைக் குறியீடு
  • ஆகஸ்ட் 2026-க்கான அகில இந்திய மொத்த விலைக் குறியீட்டு பணவீக்கம், ஆண்டு அடிப்படையில் 9.92 சதவீதமாக உள்ளது. இது ஜூலை 2026-ல் 9.78 சதவீதமாக இருந்தது. 
  • அனைத்துப் பொருட்களுக்கான குறியீடு ஆகஸ்ட் 2026-ல் 110.8 ஆக உள்ளது, அதேசமயம் ஜூலை 2026-ல் இது 110.0 ஆக இருந்தது.
  • முக்கியப் பிரிவுகளான மூலப்பொருட்கள், எரிபொருள், மின்சாரம், உற்பத்திப் பொருட்கள் ஆகியவற்றின் ஆண்டுக்காண்டு பணவீக்க விகிதங்கள், ஜூலை 2026-ல் முறையே 8.52 சதவீதம், 20.05 சதவீதம், 8.29 சதவீதமாக இருந்த்து. இது, ஆகஸ்ட் 2026-ல் முறையே 7.76 சதவீதம், 22.93 சதவீதம், மற்றும் 8.37 சதவீதமாக இருந்தன.
  • மூலப்பொருட்கள், எரிபொருள், மின்சாரம், உற்பத்திப் பொருட்கள் ஆகியவற்றின் குறியீடுகள் ஆகஸ்ட் 2026-ல் முறையே 118.1, 108.3, 108.8 ஆக உள்ளன. அதேசமயம், ஜூலை 2026-ல் அவை முறையே 117.2, 105.4, மற்றும் 108.4 ஆக இருந்தன.
  • பல்வேறு பிரிவுகளில், கனிம எண்ணெய்கள் (பெட்ரோலியப் பொருட்கள் அடங்கியவை), உணவுப் பொருட்கள், உணவுப் பொருட்கள் உற்பத்தி, அடிப்படை உலோகங்கள் உற்பத்தி, உணவு அல்லாத பொருட்கள், ரசாயனங்கள் ஆகியவை ஆகஸ்ட் 2026-ல் மொத்த விலை குறியீட்டுப் பணவீக்கத்தின் முக்கிய உந்து சக்திகளாக இருந்துள்ளன.
2026 மகளிர் ஆசிய கோப்பை - 8வது முறையாக கோப்பை வென்று இந்தியா சாதனை
  • இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 ஆசிய அணிகள் பங்கேற்று விளையாடிய 2026 மகளிர் ஆசிய கோப்பை தொடர் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வெர்மா ஜோடி 129 ரன் தொடக்க கூட்டணியுடன் 183 ரன்கள் குவித்தது.
  • 184 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய இலங்கை அணி, இந்திய ஸ்பின்னர்களை சமாளிக்க முடியாமல் 111 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
  • 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா பிரமாண்ட வெற்றியை பதிவுசெய்து, 8வது முறையாக ஆசியக்கோப்பையை தட்டிச்சென்றது.
வில்வித்தை உலகக்கோப்பை 2026 - தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தார் இந்திய வீரர் தீரஜ் பொம்மதேவரா
  • வில்வித்தை உலகக்கோப்பை ஆடவர் ரீகர்வ் பிரிவின் பரபரப்பான இறுதிப்போட்டியில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நகானிஷியை (Nakanishi) 'ஷூட்-ஆஃப்' (Shoot-off) முறையில் வீழ்த்தி தீரஜ் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel