
31st AUGUST 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
சட்டப் பேரவையில் விதி எண் 110இன் கீழ் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் விஜய்
- தமிழ்நாடு சட்டமன்றபேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று முக்கிய மின் கட்டமைப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
- தமிழ்நாட்டில் 196 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும். 15 ஆயிரம் கிலோமீட்டர் நீளமுடைய புதிய மின் பாதைகள் அமைக்கப்படும் என்றும், ஏற்கனவே உள்ள மின் பாதைகள் வலுப்படுத்தப்படும் என்றும் அறிவிப்பு வந்துள்ளது.
- மாநிலத்தின் மின் விநியோகத்தை மேம்படுத்தவும், தடையற்ற மின்சாரத்தை உறுதி செய்யவும் ரூபாய் 33,066 கோடி மதிப்பில் மின் தொடரமைப்பு மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு முழுவதும் புதிதாக 196 துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும் என தெரிவித்தார்.
- மேலும் தொழில்துறை மற்றும் மின் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் தூத்துக்குடியில் புதிய சூப்பர்கிரிட்டிகல் வெப்பமின் நிலையம் அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.
- அதன்படி 800 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு அலகுகளுடன், புதிய தெர்மல் பவர் ஸ்டேஷன்கள் அமைக்கப்படும் என்ற முக்கிய அறிவிப்பையும் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பேரவையில் முன் வைத்துள்ளார்.
- மொத்தமாக 1,600 மெகாவாட் திறன் கொண்ட New Supercritical Thermal Power Station 20 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
- மேலும் தொழில்நுட்பக் கட்டமைப்பு மற்றும் வேலைவாய்ப்புகளைப் பெருக்கும் வகையில் காஞ்சிபுரத்தில் பிரம்மாண்டமான 'செமிகண்டக்டர் பூங்கா' அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
- தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO) மூலம் கோயம்புத்தூரில் டிஜிட்டல் நிதி மையம் (கோயம்புத்தூர் ஃபின்டெக் மையம்) 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.
- காஞ்சிபுரம் மாவட்டம், மதுரமங்கலத்தில், குறைக்கடத்தி மற்றும் மின்னணு உற்பத்தி பூங்கா 175 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிப்காட் நிறுவனம் மூலம் அமைக்கப்படும். இதில் உலகத்தரம் வாய்ந்த, R & D - Research and Development வசதிகள் ஏற்படுத்தப்படும். இதன் மூலம் சுமார் 5,000 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும்.
- தமிழகத்தில் பால் உற்பத்தியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்துவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இதன்படி ஆவின் கொள்முதல் விலை லிட்டருக்கு மேலும் 3 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக முதல்வர் விஜய் இன்று அறிவித்துள்ளார்.
- 2024-25-ம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு 2026 ஜூன் மாதத்திற்கான 19 துணைத் துறைகளின் சேவைகள் உற்பத்திக் குறியீட்டை மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
- 2026 ஜூன் மாதத்திற்கான சேவைகள் உற்பத்திக் குறியீடும், 2025 ஜூன் மாதத்தை விட 2026 ஜூன் மாதத்தில் அதில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி விகிதம் குறித்தும் வெளியிடப்பட்டுள்ளது.
- அதன்படி, மொத்த விற்பனை வர்த்தகத்தின் குறியீடு 122.8 ஆகும். இது 2025 ஜூன் மாதத்தை விட 15.1 சதவீதம் அதிகமாகும். சில்லறை வர்த்தகக் குறியீடு 138 ஆகும். இது 2025 ஜூன் மாதத்தை விட 18 சதவீதம் அதிகமாகும்.
- பழுதுபார்ப்பு சேவைகள் துறையின் குறியீடு 120.1 ஆகும். இது 2025 ஜூன் மாதத்தை விட 7.5 சதவீதம் அதிகமாகும். தங்குமிடம் மற்றும் உணவுத்துறையின் குறியீடு 141.2 ஆகும்.
- இது 2025 ஜூன் மாதத்தை விட 10.2 சதவீதம் அதிகமாகும். ரயில் போக்குவரத்துத் துறையின் குறியீடு 105.5 ஆகும். இது 2025 ஜூன் மாதத்தை விட 3.3 சதவீதம் அதிகமாகும்.
- அமைச்சகம் 2022-23-ஐ அடிப்படை ஆண்டாகக் கொண்ட வருடாந்திர மற்றும் காலாண்டு GDP மதிப்பீடுகளின் புதிய தொடரை 2026 பிப்ரவரி 27 அன்று வெளியிட்டது; அதனைத் தொடர்ந்து, 2025-26 ஆம் ஆண்டிற்கான GDP-யின் தற்காலிக மதிப்பீடுகள் 2026 ஜூன் 5 அன்று வெளியிடப்பட்டன.
- 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில், நிலையான விலையிலான GDP (Real GDP) ₹81.36 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது; இது 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் இருந்த ₹75.46 லட்சம் கோடியுடன் ஒப்பிடுகையில் 7.8% வளர்ச்சியைக் காட்டுகிறது.
- அதே காலகட்டத்தில், நடப்பு விலையிலான GDP (Nominal GDP) ₹88.27 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது; இது 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் இருந்த ₹80.00 லட்சம் கோடியுடன் ஒப்பிடுகையில் 10.3% வளர்ச்சியைக் காட்டுகிறது.
- 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில், நிலையான விலையிலான மொத்த மதிப்பு கூடுதல் (Real GVA) ₹73.82 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
- இது 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் இருந்த ₹68.21 லட்சம் கோடியுடன் ஒப்பிடுகையில் 8.2% வளர்ச்சியைக் காட்டுகிறது. அதே காலகட்டத்தில், நடப்பு விலையிலான மொத்த மதிப்பு கூடுதல் (Nominal GVA) ₹80.53 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
- இது 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் இருந்த ₹72.24 லட்சம் கோடியுடன் ஒப்பிடுகையில் 11.5% வளர்ச்சியைக் காட்டுகிறது.

