//
Type Here to Get Search Results !

22nd AUGUST 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

22nd AUGUST 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2026 - இந்தியாவின் திரிஷா, காயத்திரி ஜோடிக்கு வெண்கலம் பதக்கம்
  • டெல்லியில் நடைபெற்ற விறுவிறுப்பான அரையிறுதிப் போட்டியில், உலகின் நம்பர் 1 ஜோடியும் நடப்பு சாம்பியனுமான சீனாவின் லியு ஷெங் ஷு மற்றும் டான் நிங் இணையிடம் போராடி இந்திய ஜோடி தோல்வி கண்டது.
  • தரவரிசையில் இடம் பெறாத த்ரிசா-காயத்ரி ஜோடி, இப்போட்டியை மிகச் சிறப்பாகத் தொடங்கி முதல் கேமை தன்வசப்படுத்தியது. 
  • எனினும், உலகின் முன்னணி சீன ஜோடிக்கு எதிராகத் தொடர்ந்து அழுத்தத்தைத் தக்கவைக்க முடியாமல் 21-18, 13-21, 8-21 என்ற புள்ளி கணக்கில் 1 மணிநேரம் 11 நிமிடங்களில் ஆட்டத்தை இழந்தது. இதன் மூலம் அவர்கள் வெண்கலப் பதக்கத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
  • உலக சாம்பியன்ஷிப் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியா கடைசியாக 2011 இல் லண்டனில் பதக்கம் வென்றிருந்தது. அப்போது ஜ்வாலா குட்டா மற்றும் அஸ்வினி பொன்னப்பா ஜோடி வெண்கலப் பதக்கம் வென்றிருந்தது. 
  • தற்போது 15 ஆண்டுகளுக்குப் பிறகு த்ரிசா - காயத்ரி ஜோடி வெண்கலம் வென்று சாதனை பெற்றுள்ளது. உலக சாம்பியன்ஷிப்பின் ஒவ்வொரு தொடரிலும் இந்தியா தொடர்ந்து பதக்கம் வெல்லும் வழக்கத்தையும் இந்த ஜோடி இதன் மூலம் காப்பாற்றியுள்ளது.
இந்தியா - மொரிஷியஸ் இடையே எண்ணெய், எரிவாயு ஒப்பந்தம்
  • மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, 2026 ஆகஸ்ட் 20-21 தேதிகளில் மொரிஷியஸ் நாட்டில் மேற்கொண்ட பயணத்தின் போது, இந்தியா - மொரிஷியஸ் இடையே எண்ணெய், எரிவாயு துறைகளில், பரஸ்பரம் இருதரப்பு ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • பெட்ரோலியப் பொருட்களின் விநியோகத்திற்காக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் - மொரிஷியஸின் ஸ்டேட் டிரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனம் இடையே, நீண்ட கால விற்பனை, கொள்முதல் தொடர்பான ஒப்பந்தமும் கையெழுத்தானது. 
  • இந்த ஒப்பந்தத்தின் கீழ், வாகனங்களுக்கான பெட்ரோல், அதிவேக டீசல், விமான எரிபொருள் ஆகியவற்றிற்கான அந்நாட்டின் முழுமையான இறக்குமதித் தேவையையும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் பூர்த்தி செய்யும்.
  • இந்த இரண்டு நிறுவனங்களுக்கு இடையேயான ஐந்து ஆண்டுகால ஒப்பந்தம், அந்நாட்டிற்கு நீண்ட கால எரிபொருள் விநியோக உத்தரவாதத்தை அளிக்க வகை செய்கிறது. 
  • இது அந்நாட்டிற்கு எரிசக்திப் பாதுகாப்பை வழங்குவதுடன், எரிபொருள் விலைகளில் ஏற்படும் ஏற்றதாழ்வுகளிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel