
20th AUGUST 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தென்மண்டல கவுன்சில் 31வது கூட்டம்
- செங்கல்பட்டு மாவட்டம் கோவளத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தென் மண்டல கவுன்சில் கூட்டம் இன்று (20.08.2026) நடைபெற்று வருகிறது.
- இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள் வருகை தந்தனர்.
- தெலுங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி வெளிநாட்டுப் பயணமாக இங்கிலாந்து சென்றிருப்பதால், அவருக்குப் பதிலாக துணை முதலமைச்சர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
- அதே சமயம் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்துள்ள நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் இந்த கூட்டத்தில் பங்கேற்று புதுச்சேரி சார்பாகப் பேச உள்ளார்.
- இந்நிலையில் இந்த கூட்டம் தொடங்கியவுடன் தமிழக முதலமைச்சர் விஜய் வரவேற்புரையாற்றியதாக கூறப்படுகிறது.
- இதனையடுத்து ஒவ்வொரு மாநில முதலமைச்சர்களுக்கும் தொடக்க உரை ஆற்ற ஐந்து நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தின் தேவைகள் குறித்து பேசுவதற்காக தமிழக முதலமைச்சர் விஜய்க்கு 5 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது.
- அதேபோன்று, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மற்றும் கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள் மற்றும் துணை முதலமைச்சர்கள் தங்களது மாநிலங்களின் தேவைகள் குறித்து தலா ஐந்து நிமிடங்கள் உரையாற்றினர்.
- இதனையடுத்து காலை 11.30 மணி முதல் மதியம் 1 மணி வரை மாநிலங்களுக்கு இடையே நிலவும் பிரச்சினைகள், தீர்க்கப்பட வேண்டிய விவகாரங்கள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக விரிவான விவாதம் நடைபெற்று வருகிறது.
- கடந்த 1946-ம் ஆண்டு, இந்தியப் பிரிவினைக்கு முந்தைய காலகட்டத்தில், முகம்மது அலி ஜின்னாவுக்கு கடுமையான காசநோய் பாதிப்பு இருந்ததை மும்பையைச் சேர்ந்த பார்சி சமூக மருத்துவர்களான டாக்டர் ஜல் ரத்தன்ஜி படேல் மற்றும் டாக்டர் ஜல் தய்போ-கூ ஆகியோர் கண்டறிந்தனர்.
- ஜின்னாவின் எக்ஸ்-ரே முடிவுகளை ஆய்வு செய்த அவர்கள், ஜின்னா இன்னும் ஓரிரு ஆண்டுகள் மட்டுமே உயிரோடு இருக்க முடியும் என்ற அதிர்ச்சி உண்மையை உணர்ந்தனர்.
- அக்காலகட்டத்தில் இந்த தகவல் அரசியல் ரீதியாக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதால், மருத்துவர்கள் இருவரும் தொழில் தர்மத்தின்படி இந்த விபரத்தை இறுதிவரை ரகசியமாக வைத்திருந்தனர்.
- இந்த ரகசியம் காக்கப்பட்டதால் மட்டுமே பாகிஸ்தான் என்ற தனி நாடு உருவாவது சாத்தியமானது என்பதை அங்கீகரிக்கும் வகையில் தற்போது 'நிஷான்-ஏ-இம்தியாஸ்' விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- இவர்களுக்குரிய விருதுகள் வரும் 2027ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள அதிகாரப்பூர்வ விழாவில் வழங்கப்பட உள்ளன.

